அப்பா
அப்பா!
என் ஆதியானவன்..
என்னை விதையிட்டு
பத்திரமாய் தன் உயிரினில்
சுமந்தவன்!
கரம் பிடித்த காரணம்
அறியாமல்..
அடம் பிடித்து தூரம்
தொலைந்தாலும்..
தன் விழிகளில்
காத்தருள்வான்!
ஒரு கண்ணில் கோபம் வந்தாலும்..
மறு கண்ணில் ஈரம் நின்றாலும்..
ஓர் புன்னகையால்,
என்னை அள்ளி
அணைப்பான்!
தடுமாறும் போதெல்லாம்,
தாங்கிக் கொள்ள வருவாயே..
தடம் மாறும் போதெல்லாம்,
ஏந்திக் கொண்டு நிற்பாயே..
உன் உயிரை
தின்று நான் வாழ்கிறேன்!
தன் ஆறடி உயரத்தில்,
ஓர் அங்குலமாய்..
என்னை இதயத்தில்
பெட்டகமாக்கியவன்..
என் வாழ்வதன் தூரத்தில்
உன் நிழலேன
நான் பின் தொடர்வேனே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
