அம்மா
பரம்பொருள் என்றோம்,
அவ்வடிவின் நிழல்
அவள் உருவென்றோம்..
மெய்பொருள் என்றோம்,
அம்மெய்யின் ஒலி
அவள் மொழயென்றோம்!
உன் ஊனில்
உயிர் ஊற்றி,
உயிர்பித்தவளுக்கு
உருவமானாய் - நீ.
வாழும் தேவதை என்பார்,
வணங்கும் தெய்வம் என்பார்..
அம்மா!
நீ உவமையற்றவள்,
என் உணர்வில் நிறைந்தவள்!
அம்மா! அவளே என் முகவரி..
நம் பயணத்தின் முதல் வரி!
மடி ஒன்றில் என்னை
அன்பால் ஏந்தினாய்..
மாதங்கள் பல என்னை
நீரில் தாங்கினாய்..
வலி வர ஏனோ
வேண்டினாய்?
உன் அழுகையில்
நான் மலர்ந்தேனே!
பின்..
என் அழுகையில்
நீ மலர்ந்தாயே!
தெய்வம் தொட்டு வணங்காத
பாதங்கள் உனதல்லவா!
அய்யன் வீட்டு குலசாமியின்
காட்டிசிப் பொருளும்
நீ அல்லவா!!