பேரூந்தில் நானும் ஜன்னலோரம்
பேரூந்தில் நானும் இப்போ ஜன்னலோரம்,
இயற்கை காற்றிடம் பெறும் முத்தம் கணக்கில்லா ஆயிரம்,
புயலாய் வருதே தென்றலதும்,
ஆனந்தக் கூத்தாடுதே நெஞ்சமதும்...
சொல்லாத உணர்வுகள் இங்குண்டு நெஞ்சோரம்,
நல்ல உணர்வுகள் அனுபவம் ஆகும் நேரம்,
கண்ணீர் வழிந்திடும் கண்களின் ஓரம்,
பொல்லாத ஆசைகளைக் கொன்று போடும் சிந்தனையதும்,
பிறந்திடும் உற்சாக ஊக்கமதில்...
கூடாத இடம்தனில் நாற்றத்தை நுகரும் மூக்கே பூ வாசத்தையும் நுகரும் பூஞ்சோலையோரம்,
ஆதலால் நட்டு வையுங்கள் நறுமண பூக்களை நீங்கள் பயணிக்கும் சாலையோரம்...
மாற்றிடும் உங்கள் பயணங்களை சுவராஸ்யமாக சாலையோர பூக்கள் கூட்டமதும்,
புத்துணர்வும் பிறந்திடும் விரக்தியுற்ற மனமதிலும்...