தாமதம்

ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி..
மாவை ஆட்டி வைக்கனும்,
துணிகளை துவைத்து, காயவைத்து, இஸ்திரி போடனும்,
பையன் பள்ளி உணவு பையை கழுவனும்,
அவன் பள்ளி ஷூவை துடைத்து வைக்கனும்,
மளிகை சாமான்களை அலமாரியில் அடுக்கனும்,
காய்கறி சந்தை சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கனும்,
மாலை தன் குடியிருப்பில் உள்ள தோழியின் மகள் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகனும்..
என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது...

அதிகாலை 5 மணிக்கு எழுந்திருந்தால் அனைத்தையும் செம்மையாகவும் இலகுவாகவும் செய்திருக்கலாம்.
ஆனால்..

தன் நான்கு வயது மகன், தான் எழுந்தால் அவனும் உடன் எழுந்து வந்துவிடுவான் என்ற என்னத்தில் அவள், அவன் அருகிலேயே படுத்திருந்தாள்.
தினமும் 6:30 மணிக்கு எழுந்து பள்ளிக்கு புறப்படும் தன் மகனின் வலியறிந்து, விடுமுறை நாளிலாவது அயர்ந்து தூங்கட்டும், என்று தன் பணிகளை தாமதித்தாள்..

விட்டத்தில் மின்விசரியை வெறித்துப் பார்தபடியே படுத்திருந்தாள்.
அவள் கண்களில் அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (24-May-18, 10:04 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : thaamatham
பார்வை : 273

மேலே