ரோடியா அழகி லொனாவியாவின் காதல்

இந்தியாவில் தலித் இனத்தைப் போல் இலங்கையிலும் ரோடியா இனமும் சிங்களவரிடையே ஒதுக்கப் பட்ட இனமாகக் கருதப்படுகிறது இந்த இனப் பெண்கள் மேல் ஆடை அணிவது இல்லை. இந்த இனத்துக்கேன தனிப் பேசும் மொழி உண்டு. கண்டி அரசன் காலத்தில் இந்த பெண்களை அடிமைகளாக அரண்மனையில் வேலை செய்தார்கள். அதன் பின் காலனிய ஆட்சி காலத்தில் இப்பெண்களை தங்களின் இச்சையை பூர்த்தி செய்யும் கைப்போம்மையாக பாவித்தனர்.

ரோடியோ பெண்ணின் ஒரு மரபு வழி வந்த கதை உண்டு . துட்ட கைமுனுவின் மகன், பட்டத்து இளவரசன் சாலியா காதலித்தது ஒரு ரோடியோ இன அழகிய பெண் அசோக்கமாலா என்பவளை. இது நடந்தது 2300 ஆண்டுகளுக்கு முன்னர். வரலாறு பிரித்தானையர் ஆட்சி காலத்தில் திரும்பியது .
46 வயதுடைய பிரம்மச்சாரி சேர் தாமஸ் மெயிட்லாந்து (Sir Thomas Maitland) 1805–1811 இல் இலங்கையின் கவர்னராக இருந்த காலத்தில் நடந்த அவரின் காதல் கதை இது.

கொழும்பில் இருந்து தேற்கே எட்டு மைல் தூரத்தில் கடல் ஓரமாக உள்ள மவுன்ட் லவினியா (Mt Lavinia) ஹோட்டலுக்கு காலிமுக ஹோட்டலுக்கு (Galle Face) அடுத்ததாக வரலாறு உண்டு. கடல் ஓரமாக உள்ள ஒரு குன்றின் மேல் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு கவர்னராக இருந்த 46 வயதிடைய பிரம்மச்சாரி சேர் தாமஸ் மெயிட்லாந்து ( Sir Thomas Maitland) என்பவரால் சொகுசு மாளிகையாக அவர் தங்குவதற்கு கட்டப்பட்டது.
நடனமாடி பிழைத்து தவரும் ஒரு ரோடிய இன நாடோடிக் கூட்டம் ஒன்று அந்த மாளிகைக்கு அருகில் வசித்து வந்தது. தாமஸ் மெயிட்லாந் ”கிங் டோம் “ என பெயர் வைத்து மக்களால் அழைக்கப்பட்டார் . இவர் 1805–1811 காலத்தில் இலங்கைக்கு கவர்னராக இருந்தார் . இவர் பெயரில் கொழும்பில் ஒரு வீதியும் உண்டு மெயிட்லாந் பதவி ஏற்ற வைபவ ஒன்று கூடலில் ஒரு அழகிய நாடோடி பெண்ணின் நடனத்தையும் அழகையும் கண்டு வியந்தார். அவளின் அழகிய நடனமும், முகமும் அவரை மயக்கியது. தன் உதவியாளரை அழைத்து விசாரித்த போது அவள் ஒரு ரோடியோ இன நாடோடி பெண் என்றும் அந்த இனப்பெண்கள் மேலாடை அணிவதில்லை என கவர்னருக்கு சொன்னார். அதோடு அந்த நாடோடி கூட்டம் கட்டப்படும் மாளிகைக்கு பின்னால் உள்ள குப்பம் என்ற இடத்தில் தங்கிருபபதாக சொன்னார். உடனே அவர் ஒரு திட்டம் போட்டார் அவளை தினமும் எவருக்கும் தெரியாமல் சந்திக்க விரும்பினார். தன் மாளிகைக்கு யாருக்கும் தெரியாமல் அவளை வரவழைத்து தினமும் சந்தித்து மகிழ கவர்னர் திட்டம் போட்டார் . மாளிகைக்குள் மது போதல்கள் உள்ள இடத்தில் இருந்து , குப்பயம் என்று அழைக்கபடும் நாடோடிகள் வாழும் பகுதியில் உள்ள கிணற்றில் , ஒரு சுரங்கவழியை அமைக்க கட்டிடம் கட்டியவருக்கு கட்டளை இட்டார்

அந்த நாடோடி பெண்ணும் கவர்னரும் அடிக்கடி மாளிகையில் இரகசியமாக சந்திக்க சுரங்க வழி உதவியது. அந்த பெண்ணின் பெயர் லொனாவியா அப்போன்சோ என்று அறிந்து நெருங்கிப்பழகினார். அவள் ஒரு போர்த்துக்கேயனுக்கும் ஒரு ரோடியோ இன சிங்கள் பெண்ணுக்கும் பிறந்தவள். சிப்பிக்குள் முத்துபோல் அவள் அவருக்கு இருந்தாள் . இரவில் கடற்கரை ஓரமாக இருவரும் உலாவி வருவார்கள். முகமூடி அணிந்து அவளோடு நடனமாடுவார்

தன் இனப் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை நீக்க சட்டம் கொண்டு வரும் படி கவர்னரிடம் அவள் கேட்டாள். தன் காதலியின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய உடனே அவரும் நாட்டில் எந்த ஒரு பெண்ணும் மேலாடை இல்லாமல் இருக்கக் கூடாது என்ற சட்டம் போட்டார். இது உயர்சாதி சிங்கள மக்களுக்கு பிடிக்கவில்லை . இவ்வளவு காலம் இருந்து வந்த கலாச்சாரத்தில் கவர்னர் தலை இடுகிறார் என முணு முணுத்தனர் எந்த காதல்பற்றி இங்கிலாந்தில் இருந்த தாமஸ் மெயிட்லாந்தின் உறவினர்களுக்கு தெரியாது. எந்த காதல் கதைக்கும் ஒரு சோக முடிவு உண்டு..
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு அவரை கவர்னராக 1813இல் மத்திய தரை (Mediterranean) நாடான மால்டா தீவுக்கு இடம் மாற்றியது. அத் தீவில் அவர் பிரம்மச்சாரியாக 1824இல் இறந்தார் காதலனை பிரிந்த சோகத்தில் லொனாவியா அப்போன்சோ கடலில் குதித்து தற்கோலை செய்ததாக அவ்வூர் மக்கள் சொல்கிறார்கள். உண்மையோ தெரியாது.
.
1920 இல் அந்த 600 மீட்டர் நீளமுள்ள சுரங்க வழி மூடப்படு வீடுகள் கட்டப் பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்த காதல் மாளிகை இராணுவ வைத்திய சாலையாக பாவிக்கப் பட்டது . 1947, யில் அந்த மாளிகை மவுன்ட் லவனியா ஹோட்டல் என்ற பெயரில் இயங்கத் தொடங்கிது. திருமணமானவர்கள் தங்களின் தேநிலவுகு இந்த ஹோட்டளலுக்கு செல்வார்கள். மாளிகையில் சுரங்க வாசல் இருந்த பகுதி தற்போது ஹோட்டலின் சமையல் பகுதி

தனது காதலிக்கு கவர்னர் சில காணிகளை அவளோடு உறவு வைத்து அனுபவித்ததுக்கு ஹோட்டலை சுற்றயுள்ள பகுதியில் சில காணிகளை வெகுமதியாகக் கொடுத்தார். அவளின் பெயரில் சில வீதிகள் இன்றும் ஹோட்டல் அருகே உண்டு . .
****

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (24-May-18, 1:36 pm)
பார்வை : 151

மேலே