புதையல் 9

ஒரு வழியாக மூவரும் தங்களுக்குள்
மன தெரியத்தை வர வைத்து ஒருவர் பின் ஒருவராக ஏற ஆரம்பித்தனர்.
மெதுவாக மெதுவாக மெல்லமாக தன் கவனங்களை சிதற விடாமல்
முயற்சி செய்து ஏறி கொண்டிருந்தனர். ஏணி படிக்கட்டை
ஏற ஆரம்பித்தனர்.
ஏற ஏற மனதில் பயமும் பதற்றமும்
இருந்தது.
மேலும் தங்கள் கவனமான நிலையில் ஏறி ஒரு வழியாக மலையின் உச்சியை
அடைந்தனர்.இதற்கும் மேலாக
மலையின் உச்சியில் ஒரு மிக பிரமாண்டமான அளவில் அழகிய சிவலிங்கம் ஆச்சரியம் நிறைந்த சிவலிங்கம் பூஜைகள் நடந்து இருக்கிறது. எப்படி இது சாத்தியம்
மூவரும் சிவலிங்கத்தை வணங்கி
சுற்றி அங்கே உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க மூடிவு செய்தனர்.
முதல் சகோதரரை பார்த்து அண்ணா இதனை நாட்கள் எதிராக பேசாமல் உறவுகளின் அருமை அறியாமல்
ஈகோ சுமந்து பணத்திற்காக ஒன்றாக வாழ்ந்தோம்.தம் பிள்ளைகளுக்கு உறவின் அருமை சொல்லி வளர்ப்போம்.பணம் என்ன?பணம்? மொத்த சொத்து புதையல் அனைத்தையும் நீங்களே எடுத்துக்கோங்க....என அழுது காலில் விழுந்தனர்.
உயிருக்கு ஆபத்து வந்தால் விட்டு செல்லாத மூத்த சகோதரர் அன்புடன் உங்களுக்கு ஏதாவது ஒன்றுனா? அப்படி விட்டு வேறா?என சொல்லி
இந்த சொத்து, இந்த புதையல் சிங்காரம் தாத்தா து அவரிடம் நாம் கொண்டு போய் ஒன்றாக கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள்.என கூறி
முடிக்க அங்கு பல வித பறவைகள் பூக்கள் கொண்டு சிவலிங்கத்தை
அலங்கரித்த காட்சியும் கண்டனர்.
அற்புதமான மலை அது அதிசயத்தை
கண்டு சிவனை வணங்கி அடுத்த
பயணத்திற்கு தயார் ஆனார்கள்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (25-May-18, 11:00 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 49

மேலே