பொன்னம்பலம் குலேந்திரன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பொன்னம்பலம் குலேந்திரன்
இடம்:  மிசிசாகா, ஒண்டாரியோ, கனடா
பிறந்த தேதி :  25-Sep-1939
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2016
பார்த்தவர்கள்:  918
புள்ளி:  162

என்னைப் பற்றி...

பொன் குலேந்திரன் ஆகிய நான், இலங்கையில் உள்ள யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College Jaffna )கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) லை தொடர்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி.ஓய்வு பெற்றவன.; பத்து வயது முதற்கொண்டே எனக்கு எழுத்தில் ஆர்வம் இருந்தது. கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளேன். பல இணையத்தளங்களுக்கும் எழுதி வருகிறேன். என் வெப் பக்கம்: Pon-Kulendiren.கமrnGenertaions – தலைமுறைகள். rnrnஇலங்கை தெயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் கதையை ஆங்கிலத்தில் Generations என்ற பெயரில் நாவலாக வெளியிட்டுள்ளேன். Notion Press.com சென்னையில் அல்லது Amazon.in யில் வாங்கலாம்.rnrnபிரிட்டிஷ் அட்சி காலத்தில், கூலிகளாக இலங்கைக்கு கங்காணிகள் மூலம் வேலைக்கு அமர்த்தபட்டவர்கள். 1963 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் ஆயிரக்கணக்கில்; இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு இத்தொழிலாளிகள். விரைவில் தமிழில் “தலைமுறைகள்” என்ற தலைப்பில் இந்நாவல் வெளிவரும்.rn

என் படைப்புகள்
பொன்னம்பலம் குலேந்திரன் செய்திகள்

முகவுரை
(இது ஒரு நகைச்சுவையும், உண்மையும் கலந்த எட்டு அத்தியாயங்கள் கொண்ட குறு நாவல் , இலங்கையில் இருந்து கனடாவுக்கு மகனின் ஸ்போன்செரில், புலம் பெயர்ந்த. மனவியை இழந்த ஒரு முதியவரின் கனடா அனுபவங்கள் பற்றியகதை இவர் படித்து அரச சேவையில் உயர் அதிகாரியாக பல வருடங்கள் வேலை செய்து, ஓய்வு பெற்றவர். அவர் கனடாவில் இருந்து தான் கண்டறியாததை, இலங்கையில் இருக்கும் தன் நண்பரோடு மின் அஞ்சல் மூலம் பரிமாறிக்கொள்கிறார் . கதை புதுமையான நடையில். மின் அஞ்சல் மூலம் இடம் பெறுகிறது ).


அத்தியாயம் 1

“ என்ன கந்தப்பு சாவகச்சேரிப் பகுதிக்கு ஏ ஜி ஏ

மேலும்

இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள எரி சார்ந்த ஊர் மட்டக்களப்பு. பாடு மீன் வாவி என்பர். தவளைகள் மாரி காலத்தில் தாளவாத்தியக் கச்சேரி இசைப்பது போல் கல்லடி பலத்தின் கீழ் ஊரிகள் பூரண சந்திரன் காலத்தில் இசை பாடும். சிலர் அவ்விசை கடல் கன்னிகள் காதலர்களை அழைக்கப் பாடும் இசை என்பர். அவ்வூருக்கு பெயர் தொன்றியது பற்றி மட்டகளப்பு மான்மியம் என்ற நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாளர். முக்குவர் கிழக்கு ’’ இலங்கை மேல் படை எடுத்த போது ஒரு சதுப்பு ஏரி காணப்பட்டது. அதில் தமது ஓடத்தை செலுத்தி சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் தோணியில் போகமுடியாமல் சேறு இருந்ததால் இது “மட்டும் தானடா” என்றனராம். இதனால் இப்

மேலும்

அறத்தொடு வாழும் மனிதனின் மனம் என்றுமே அன்பாலும் உண்மையாலும் நிறைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நேர்மை ஒருவகையான அறம்தான். உலகத்தில் உண்மையையும் அறத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் வரதன் போன்றோர்கள் அசாதாரணமாக இருக்கிறார்கள். ஒவ்வோர் மனிதனுக்குள்ளுமாக ஒரு வரதன் இருப்பதும் உண்மைதான். ஆனால் வறுமை, சூழ்நிலை, பணத்தின் மீது கொண்ட வெறி போன்றவைகள் மனிதனின் மனதிலுள்ள வரதனை மனதிற்குள்ளேயே புதைத்துவிடுகின்றன. கதை நன்றாக உள்ளது. வரதன் என்கிற கதாபாத்திரம் மனதை அழுத்துகிறது. மனசாட்சியை தட்டி எழுப்புகிறது 21-Oct-2017 4:17 pm
ஒரு மனிதனின் நேர்மை ஆரம்பத்தில் வாழ்க்கையை ஏழ்மையால் சோதித்தாலும் ஒரு நாள் வசந்தமாய் அவர்களை மாற்றி விடும் என்ற தத்துவத்தை நிரூபிக்கும் கதையோட்டம். மதங்கள் நிறங்கள் என்று வர்க்கம் பிரிக்கும் இன்றைய கூட்டத்திற்கு மத்தியில் பணத்தை விரும்பாதவன் யார் இருக்கான் என்று தான் நினைக்கச் செய்கிறது. பணத்தை வைத்தே மனிதனை அளவிடும் இந்த உலகில் எளிமையாக வாழ்வதன் மூலமும் நேர்மையான ஊழியம் மூலமும் ஒரு கூட்டம் தொய்வின்றி வாழ்க்கையை நடாத்திக்கொண்ட இருக்கிறது. அறிமுகம் இல்லாத மனிதனிடம் இருந்தும் கிடைக்கும் அன்பு சில நாட்களில் பெரும் நேசமாய் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிறது. ஒரு தாயின் கண்ணீரில் குடும்பத்தின் விளக்குகள் அணைந்தும் அணையாமலும் திக்கி திக்கி ஒளிமயம் வீசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல பிள்ளையின் உழைப்பால் ஆனந்தமும் கண்களில் கண்ணீர் மழைதூவுகிறது. கிடைத்ததை வைத்து திருப்தி அடைகின்ற மனம் எப்போதும் வாழ்க்கையில் துன்பத்தை ஒரு கட்டத்திற்கு பின் அனுபவிக்காது என்ற எண்ணத்தை அற்புதமாக சொல்கிறது கதை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் எனக்கு கூட அதன் வரலாறுகள் தெரியாது ஆனால் ஒரு பயணியாய் வருகை புரிந்த நீங்கள் ஆத்மார்த்தமாக கதைக்குள் நிகழ்வுகளை செதுக்கி உள்ளீர்கள் 21-Oct-2017 2:22 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Oct-2017 5:00 am
வாழ்க்கைப் பயணம் வாழ்க்கை வாழ்வதற்கே ! கடமை கண்ணியம் கட்டுப்பாடு முதலில் கதை படித்ததும் உங்கள் ஞாபகம் தான் வந்தது கதையைப் படிக்கும் ஆர்வத்தில் கதை எழுதியவர் யார் எனப் பார்த்து பாராட்ட நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அதிர்ச்சி ! பொன் குலேந்திரன் அவர்கள் எழுத்து குடும்பத்தாருக்கு அளித்த தீபாவளி பரிசு போலும் 21-Oct-2017 4:59 am

மனிதன் பிறந்த சில மாதங்களில் தத்தித் தத்தி, இரு கைகளையும் இரு கால்களையும் பாவித்து தவழ்கிறான் . ஒரு வயதானபோது நிமிர்ந்து இரண்டு கால்களில் பாவித்து மனிதன் நடக்கிறான், ஓடுகிறான், பாய்கிறான், ஆடுகிறான். வயது எழுபதைத் தாண்டியவுடன் கைக்கோலை ஊண்டி மூன்று கால்களில் நடக்கிறான் மனிதனின் வயது ஏற வியாதிகள் காரணத்தால் கோல் பிடித்து அவனால் நடக்கமுடியாது வோக்கரை பாவிக்கிறான். சிலர் கால்களை சக்கரை வியாதியால் இழந்து விடுகிறார்கள். சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.. இந்த சக்கர நாற்காலியின் கதையிது

*****

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஸ்டோர்ரூமில், ஒரு மூலையில் முடங்கிக் கி

மேலும்

சூசிகை கையாளப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. எத்தனையோ வருடங்களுக்கு முன் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் வ.வே.சு அய்யர் அவர்கள் மங்கையகரசியின் காதல் எனும் சிறுகதையில் இதனை உபாயமாக கையாண்டு இருந்தார். அதனை இன்று ஒரு நவீன சிறுகதையில் காண்பது அரிதான விடயம். கதை ஓட்டம் ஒரு வட்டத்திற்கும் சுழலும் வாழ்க்கையின் யதார்த்தங்களை அணுவணுவாக எடுத்துரைக்கிறது. எத்தனையோ கோடிகள் செல்வம் இருந்தாலும் விதிகளின் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது அது இறைவனையே சான்றது என்பதை பிறப்பும் இறப்பும் எப்போது உலகிற்கு நிரூபித்துக்கொண்ட இருக்கும். குழந்தை போல் மனம் மாறிய தாயை பேணிக்காக்கும் மகன்களின் அன்பை வெளிப்படுத்த தூய்மையான சில கண்ணீர்த்துளிகள் போதும். ஆனால் நடைமுறையில் சார்த்தியத்தில் முதுமை வந்தாலே பலர் சுமந்தவர்களை குப்பை போல் பெயர் தெரியாத ஊரில் அனாதைகளாய் தூக்கி வீசி விடும் பரிதாபம். தாரமும் தாயை போல் என்பார்கள் ஒரு தாயின் மனநிலை புரியாத தாரத்தை எப்படி தாயிற்கு ஒப்பிட முடியும். நிகழ்காலம் மீண்டும் ஒருமுறை உண்மையான வாழ்க்கை என்றால் என்னவென்று மனதிடம் விவாதம் செய்கிறது. தாய் மகன் தாரம் மூவரையும் பாதுகாத்த ஒரு ஜீவனாய் ஓர் ஆணின் புனிதத்தை உணர்த்திய கதைக்கும் நானும் அடிமையாகிப்போகிறேன். நதிகளில் நீந்தும் மீன்கள் தூண்டிலில் அகப்பட ஒரு போதும் நினைக்காது. அதைப்போல கதைகளும் சிலரின் மனதை அனுபவம் கலந்த பொக்கிஷமாய் ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 1:59 pm

மனிதன் பிறந்த சில மாதங்களில் தத்தித் தத்தி, இரு கைகளையும் இரு கால்களையும் பாவித்து தவழ்கிறான் . ஒரு வயதானபோது நிமிர்ந்து இரண்டு கால்களில் பாவித்து மனிதன் நடக்கிறான், ஓடுகிறான், பாய்கிறான், ஆடுகிறான். வயது எழுபதைத் தாண்டியவுடன் கைக்கோலை ஊண்டி மூன்று கால்களில் நடக்கிறான் மனிதனின் வயது ஏற வியாதிகள் காரணத்தால் கோல் பிடித்து அவனால் நடக்கமுடியாது வோக்கரை பாவிக்கிறான். சிலர் கால்களை சக்கரை வியாதியால் இழந்து விடுகிறார்கள். சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.. இந்த சக்கர நாற்காலியின் கதையிது

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஸ்டோர்ரூமில், ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் ம

மேலும்

தீபாவளி சிறுகதை


'யாத்ரா.., யாத்ரா நீ எங்கே இருக்காய்? என்னே விட்டுட்டு எங்கேயும் போய்ட்டியா’? பாசத்தின் பணிவான குரல்கள் அவளது செவிப்பறையினுள் பூங்காற்றாய் நுழைந்தது.

'யாத்வி நான் உன்னே விட்டு எப்பயாவது விலகிப் போயிருக்கனா’? மரணம் வரை உன் நிழலாக நானும் பயணம் செய்து கொண்டிருப்பேன். அவளது மென்மையான வார்த்தைகள் யாத்வியின் இதயத்தில் சாசனமாய் பதிந்தது.

'யாத்ரா நிழல் என்றால் என்ன?' புதிரான வாழ்க்கையில் புரியாத வினாக்களை புதிதாக போடுகிறாள் யாத்வி.

சிறு நிமிடங்கள் மெளனத்தில் சிறைப்பட்ட அவளது இதழ்களை எங்கிருந்தோ வந்த ஞானம் விடுதலை செய்தது. "உள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆற

மேலும்

அருமை 21-Oct-2017 8:42 pm
ள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆறடி நீளமான மனிதனின் வாழ்க்கை கர்ப்பமெனும் இருட்டறையில் தொடங்கி கல்லறையெனும் இருட்டறையில் முடிகின்றது நிதர்சனமான வரிகள் அழகான சொற்கள் . யாத்ரா , யாத்வி கதாபாத்திரங்கள் அல்ல கற்பனை அல்ல வாழ்வின் தத்துவத்தை அன்பின் பரிணாமத்தை பாசத்தின் உருவத்தை நம் கண்முன் காட்டிடும் இதயங்கள் . உயிரோவியங்கள் . உங்கள் எழுத்துத் திறனை கையாளும் விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . உங்கள் மூலம் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது வாழ்த்துக்கள் 21-Oct-2017 3:33 pm
நெஞ்சம் நெகிழும் மென்மையான கதை,வாழ்த்துக்கள் sarfn 19-Oct-2017 8:45 pm
அருமையான தமிழ் நடை. கருத்தும் அருமை. கவியோடு கதைகளையும் பின்ன வாழ்த்துகிறேன். 19-Oct-2017 11:57 am

பிக்போச்கட் பியசேனா வசிக்கும் இடம் கொழும்பின் ஒரு பகுதியான கொழும்பு 10 என அழைக்கப் படும் மருதானை. ஒரு காலத்தில் மண் செறிந்த கிராமமாக இருந்தபடியால் அப் பெயர் அவ் விடத்துக்கு வந்தது, விபச்சாரம், கள்ளக் கடத்தல், போதை மருந்து வியாபரம் சில்லரை களவுகள் செய்பவர்கள் வாழும் பகுதி மருதானை..
“என் வீடு மருதானையில்” என்றாலே முகம் சுளிப்பவர்கள் பலர்.. பியசேனா பிறந்த ஊர் கடலோர நகரமான பாணதுறை. தன் தொழிலுக்கு அவன் தேர்ந்து எடுத்த இடம் வடக்கே 30 கி மீ தூரத்தில் உள்ள மருதானை.

1958 இல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தின் போது பாணதுறை முருகன் கோவில் ஐயர் சிவலிங்க சர்மாவை தமிழன் என்பதனால் கதறக் கதற நெருப்பி

மேலும்

பொன்னம்பலம் குலேந்திரன் - அறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 3:39 pm

அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

மேலும்

மானிட பிரச்சனைகளை தீர்க்க அறிவியல் தேவை 31-Aug-2017 7:34 pm
பொன்னம்பலம் குலேந்திரன் - அறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
26-Dec-2016 3:39 pm

அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

மேலும்

மானிட பிரச்சனைகளை தீர்க்க அறிவியல் தேவை 31-Aug-2017 7:34 pm

வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள; அடர்ந்த காட்டில் சடைத்து வளர்ந்த முதிரை, கருங்காலி, பாலை, காட்டு வேம்பு மரங்களுக்கும் ஈச்சம் பற்றைகளுக்கும் குறைவில்லை.. அந்த மரங்களின் அடர்த்தியான மரச் சோலையில் ஒரு வைரவர் கோவில். அக்
கோவிலுக்கு இரு நூறு யார் தள்ளி ஒரு சுடலை. அதில் தகனத்துக்கு முன், பிரேதத்தைவைத்து கிரிகைகள் செய்வதற்கு சரிந்த நிலையில் ஓரு கொட்டில். அந்தச் சுடலை, மணியம் குளம் வாசிகளினதும். அருகில் உள்ள கிராம வாசிகளினதும் இடுகாடாக இருந்தது அந்த சுடலைக்கு வைரவர் காவல் தெய்வம் என்பதா

மேலும்

கதை --கிராமிய மணம் இயற்கை வர்ணனைகள் கிராமிய நாட்டுப்புற தெய்வங்கள் பற்றிய வர்ணனைகள் பகுத்தறிவுக் கதை பேய் பிசாசு விக்ரமாதித்தன் கதைகள் கிராமங்களில் முருங்கை மரம் ஏறுவதில்லை நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள் கிராமத்தில் தற்போது வந்து விட்டதே ! விழிப்பு உணர்வு உண்டாக்கும் அரிய படைப்பு தொடரட்டும் 16-Aug-2017 11:46 am
நல்ல நடை, நல்ல கதை. 16-Aug-2017 11:05 am

வேலி என்பது சோழர் காலத்தில் நில அளவைக்குப் பாவிக்கப்பட்ட வார்த்தையாகும். யாழ்ப்பாண குடா நாட்டில் சங்குவேலி, நீர்வேலி. திருநெல்வேலி என்று வேலியில் முடிவடையும் கிராமங்களில் பிரசித்தம் பெற்ற ஊர் அச்சுவேலி. அச்சன்வேலி அச்சு வேலியாக மருவி இருக்கலாம். அத்திமரம் அதிகம் காணப்பட்ட ஊர் ஆகையால்இடப்பெயர் வந்திருக்கலாம் என்பதும் பல இடப்பெயர் ஆய்வாளர்கள் கருத்து. யாழ். குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என்ற மூன்று பெரும் பிரிவுகளுக்கும் ' அச்சுப்போல் மைய இடத்தில் அமைந்துள்ள கிராமமாகையால் அச்சுவேலி என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது இன்னொரு சாராரின் விளக்கம் உண்டு அச்சுவேலி கிராமத்துக்கு அருகே இடை

மேலும்

அளவுக்கதிகமாக பாசம் வைத்தவர்கள் எம்மை விட்டு விலகிப்போகும் நேரம் மனதில் உணரப்படும் வேதனையை சொல்ல வார்த்தைகள் கிடையாது. பணம், இனம், பொருள் பாராமல் காதல் உள்ளங்களை திட்டம் போட்டு திருடி விடுகிறது. பெற்றோரின் கவலை எல்லாம் பிள்ளையின் நலமான வாழ்க்கையை பற்றியது தான். ஊருக்காக வாழ்வதை விட பந்தத்துக்காக வாழும் வாழ்க்கை தான் உயர்த்தியது என்பதை கதையின் முடிவிடம் நிரூபிக்கிறது. சில காதல் கதைகள் மட்டும் தான் இறுதி வரை வெற்றி பெறுகிறது ஆனால் பல காதல் கதைகள் மண்ணில் காமம் தீர்ந்த சில நாட்களில் சாலைகளில் அனாதையாகி திரிகிறது. வாழ்க்கை என்ற புல்லாங்குழல் நாம் வாசிக்க நினைக்கும் போது மட்டும் பாடுவதில்லை அதனை பூங்காற்று என்று மெல்லிய உணர்வு தாண்டிப்போகும் போதெல்லாம் சுவாசிக்கிறது என்பதை கதை மறைமுகமாக சொல்கிறது/ மனம் தொட்ட படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 12:15 pm
பொன்னம்பலம் குலேந்திரன் - சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 12:20 am

"அய்யா உங்கள தலைமை ஆசிரியர் வரச்சொன்னார்" என்ற வார்த்தையை கேட்டு " என்ன ராஜா வழக்கம் போல பஜனையா.. நானும் இருபது வருசமா இந்த வேலைய பாக்குறன்.. மாற்றத்தையும் பாக்குறன்.. இப்பல்லாம் தமிழ் ஆசான் என்றால் இதுதான் கதி" என்று கூறிக்கொண்டே தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவர் அதிர்ந்து போனார்.

அங்கே தலமை ஆசிரியரும் அதிபரும் அமர்ந்திருந்தனர்.என்ன ஆச்சரியம்! ராஜாவை பார்த்ததும் இருவரும் எழுந்து கையை குலுக்கி வாழ்த்தினர்.ஏன் வாழ்த்துகிறார்கள் என்று புரியாது திருதிருவென்று முழித்தார் ராஜா.

உடனே எழுந்த தலமை ஆசிரியர்
"ராஜா நீங்கள் ஒவ்வொரு வருடமும் செய்து அனுப்பும் தமிழ் பாட செயற்றிட்டம் இவ்வருடம்

மேலும்

திறமைக்கும் தமிழுக்கும் கிடைத்த மணிமகுடம் 14-Nov-2016 2:43 am
பொன்னம்பலம் குலேந்திரன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2016 7:04 pm

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான்

மேலும்

அரத்தமுள்ள கதை. பேசவதை வைத்தே ஒருவரை கணிக்க முடியும் 27-Oct-2016 3:55 am
மேலும்...
கருத்துகள்
மேலே