பிக்போச்கட் பியசேனா
பிக்போச்கட் பியசேனா வசிக்கும் இடம் கொழும்பின் ஒரு பகுதியான கொழும்பு 10 என அழைக்கப் படும் மருதானை. ஒரு காலத்தில் மண் செறிந்த கிராமமாக இருந்தபடியால் அப் பெயர் அவ் விடத்துக்கு வந்தது, விபச்சாரம், கள்ளக் கடத்தல், போதை மருந்து வியாபரம் சில்லரை களவுகள் செய்பவர்கள் வாழும் பகுதி மருதானை..
“என் வீடு மருதானையில்” என்றாலே முகம் சுளிப்பவர்கள் பலர்.. பியசேனா பிறந்த ஊர் கடலோர நகரமான பாணதுறை. தன் தொழிலுக்கு அவன் தேர்ந்து எடுத்த இடம் வடக்கே 30 கி மீ தூரத்தில் உள்ள மருதானை.
1958 இல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தின் போது பாணதுறை முருகன் கோவில் ஐயர் சிவலிங்க சர்மாவை தமிழன் என்பதனால் கதறக் கதற நெருப்பில் எரித்து, பார்த்து மகிழந்த புத்த சமயத்தவர் வாழும் ஊர் பாணதுறை. நல்ல காலம் சிலரின் உதவியால் ஐயரின் மனைவியும் ஒரே மகன் கணேஷ சர்மாவும் உயிர் தப்பினார்கள்,
அந்தக் பாதகச்செயலைப் புரிந்த மூவரில் ஒருவராவது 1962 ஆம் ஆண்டு வரை வாழ வில்லை. ஒருவர் ரயலில் அடிபட்டு இறந்தார். மற்றவர் கடலில் மூழ்கி இறந்தார். அக் கூட்டத்துத் தலைவனான முப்பது வயது ஜெயசேனாவை அக்கூட்டத்தின் எதிரிகள் கத்தியால் வெட்டிக் துடிக்கத் துடிக்க கொன்றனர். ஜெயசேனா இறக்கும் போது அவனின் வாரிசாக ஒரே ஒரு பத்து வயது மகன் இருந்தான். அவன் தான் இந்த கதையின் கதாநாயகன் பிச்போக்கட் பியசேனா.. அவனைப் பாணதுறை மொரட்டுவ, தெகிவலை, வெள்ளவத்தை கொழும்பு பொன்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு அவன் முடிச்சிமாறி பியசேனா. சிலர் அவனைக் கத்திரிக்கள்ளன் என்பர்;. அனால் என்பது தான் தினமும் இரயிலில் கொழும்புக் கோட்டைக்குப் பயணம் செய்யும் ஆங்கிலம் பேசும் அரசாங்க ஊழியர்களும், தனியார் துறையில் வேலை செய்பவர்களும் வைத்த பெயர் பிக்போச்கட் பியசேனா. ரயிலில் பயணம் செய்பவர்களில் சம்பள தினம் அன்று தங்கள் பேர்சை பியசேனாவிடம் பறிகொடுத்தவர்கள் பலர்.
பிக்போக்கட் கலையை பியசேனாவுக்கு கற்றுக்கொடுத்தது அவன் தந்தை. படிப்பில் அவ்வளவுக்கு அக்கரை காட்டாத பியசேனாவுக்குக் கை கொடுக்கப் போவது பிக்பொக்கட் தொழில் என்று ஜெயசேனா அடிக்கடி மனைவிக்கு சொல்லுவான். எப்படி பிளேட்டை பாவித்து ஒருவர்; உணராதவாறு அவரின் பேர்சை திருடும் கலையை மகனுக்கு கற்றுகொடுதான் ஜெயசேனா, பியசேனாவின் முதல் பிக்பாக்கெட் திருட்டு பாணதுறையில் இருந்து கொழும்பு செல்லும் கூட்டம் அதிகம் உள்ள பஸ்சில் அரங்கேற்றம் பெற்றது. ஜன நெருச்சலில் தான் இலக்கு வைத்தவரின்;முதுகில் ஒரு; இடியோடு பேர்ஸ் ஒரு செக்கண்டில் அவன் கையுக்கு மாறியது’. அப்படி முதல் அவன் செய்த பிக் பாக்கெட்டில் கிடைத்த பணம் மூவாயிரம் ரூபாயும் ஒரு விசா கிரெடிட் கார்ட்டும். அந்த பேர்ஸ்சோடு பிக்போச்கட் பியசேனா அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி விட்டான். மகனின் செயலை மெச்சி முதுகில் தட்டி பாராட்டினான் ஜெயசேனா.
மகனுக்குத் தீய வழியை சொல்லிக் கொடுக்கவேண்டம் என்று பியசேனாவின் தாய் சுது மேனிக்கா கணவனுக்கு எச்சரித்தாள். தான் நினைத்ததை செய்பவன் ஜெயசெனா.
மருதானையில் தந்தையின் கூட்டத்தைப் போல், ஒரு காடையர் கூட்டம் பியசேனவுக்கு இருந்தது. இரு முறை கையும் களவுமாக பொலீசால் பிடிபட்டும். தன் அரசியல் செல்வாக்கைப் பாவித்து நீதிமன்றம் ஏறாமல் தப்பிவிட்டான்.
******
, பல தமிழ் அரசாங்க உழியர்களும். தனியார் துறை உழியர்களும் வாழும் பகுதி கொழும்பு 6 வெள்ளவத்தை.. சிலர் கொழும்பு கோட்டைக்குப் போகும்’ பஸ்சிலும். ரயலிலும் வேலைக்குப் போய் வருவார்கள். அவர்களில் கணேஷ் சர்மாவும். ஒருவர். யோர்க் வீதியில் உள்ள ஹட்டன் நேஷனல் வங்கியில் உதவி மனேஜராக வேலை செய்தார். தன் எண்பது வயது தாய், சரஸ்வதி மனைவி பார்வதி இரு’ பிள்ளைகளோடு வெள்ளவத்தை நெல்சன பிலேசில் .மூன்று அறைகள் உள்ள அனெக்ஸ் ஒன்றில் வாழ்ந்து’ வந்தார். மற்றைய பிராமணர்களைப்’ போல் கோவிலில் பூசை செய்வதை முழு நேரத் தொழிலாக அவர் செய்யவில்லை. நேரம் கிடைத் போது தன் தாய் மாமன் சங்கர ஐயருக்கு பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலில் பூசைக்கு உதவியாக இருப்பார்;. அதில் சிறு வருமானம் வேறு அவருக்குக் கிடைத்தது..
அன்று ஐப்பசி வெள்ளிக் கிழமை.. காலை ஐந்து மணிக்கு எழும்பி குளித்து, பூசை செய்த பின் காலை போசனம் கணேஷ் சர்மா.உன்ணும் போது அவரது மனைவி பார்வதி கோப்பியோடு வந்தாள்.
“அத்தான் உங்களைத்த்தான்.. வருகிற புதன் கிழமை மாமிக்கு நடக்கவிருக்கும் ஒப்பரேசன் செலவுக்கு தேவையான பணம ஆயித்தம் செய்து விட்டியலா”? பார்வதி கணவனைக் கேட்டாள்.
“பார்வதி, என் அப்பா நான் பதினைந்து வயதாக இருந்த போது’ அகாகல மரணம் அடைந்த பின் என்னைப் படிப்பித்து ஆளாக்கியது’என் அம்மாவும் அவவின் தம்பியான உன் அப்பாவும் தான். அதை என்னால் மறக்கமுடியாது. .உன் அப்பாவிடம் நான் அம்மாவின் ஒப்பரேசன் செலவுக்கு காசு கேட்பது சரியில்லை. அவருக்கு என்று ஒரு குடும்பச் செலவுண்டு”
.” அப்ப என்ன பணத்துக்கு செய்வதாக உத்தேசம் அத்தான்”?
“ என் செமிப்பில் 15,000 ரூபாய் வங்கியில் இருக்கு. அதோடு’ சேர்த்து’ இன்னும் 25.000 ரூபாய் ஒப்பரேசனுக்கு தேவை. அந்த பணத்துக்கு லோனுக்கு போன கிழமை என் பாங்கிலை விண்ணப்பித்து அப்ரூவ் ஆகிவிட்டது. இன்று’ கையிலை பணம் கிடைக்கும். எல்லாம் இறைவன் செயல்” என்றார் கோப்பியை அருந்தியபடி கணேஷ சர்மா.
“ நல்லது. யோசித்து தான லோனுக்கு விண்ணப்பித்து இருக்குறியள். பத்திரமாக காசை கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு யாரையாவது தெரிந்த நாண்பரைக் காண்டால் வைத்திருக்கும் பணத்தை மறந்து பேசிக் கொண்டு இருப்பியள் பணம் கவனம். அதிலை’ தான் உங்கள் அம்மாவின் உயர்; தங்கி இருக்கு” கணவனை எச்சரித்தாள் பார்வதி. .
****** .
.
லோன் செக்கை மாற்றி 25 ஆயிரம் ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளை ஒரு போலித்தீன் உறைக்குள்போட்டு தன் களுசான் போக்கட்டுக்குள் வைத்து ஜிப் (Zip) செய்தார் கணேஷ் சர்மா. .
மனைவியின்’ வற்புருத்தலினால் அன்று ஜிப் வைத்த பொக்கட் உள்ள களுசானை அணிந்திருந்தார். அது பணத்தை’ பாதுகாப்பாக வைக்க உதவியாக இருந்தது.
கொழும்பு கோட்டை ரயில்வே ஸ்டேசனில் அன்று ஏகப்பட்ட கூட்டம் பாணதுறைக்கு போகும் இரயிலில் முண்டி அடித்துக் கொண்டு எறினார் சர்மா. தன் களுசான் போக்கட்டை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்வார் பணம் பத்திரக இருக்கிறதா என்று
“என்ன கணேஷ் உம்மை கண்டு அதித காலம். இப்பவும் பாங்கிலா வேலை” என்ற கணீர் குரலைக் கேட்டு திரும்பி பார்த்தார். கணேஷ் சர்மா.
அவரை உரிமையோடு அழைத்தது அவரோடு ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்த நண்பன் சந்திரன்
“ யார் சந்திரனா? உன்னைக் கண்டு இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இப்ப எங்க நீ வேலை:”?. அவளுடன் கேட்டார்’ கணேஷ்
“ போஸ்டல் டிப்பார்ட்மென்டிலை அக்கௌன்டனாக இருக்கிறேன். அப்ப நீர்....”
“ நான் ஹட்டன் நேஷனல் வங்கியில் உதவி மனேஜராக இருக்கிறன். அது சரி நீர் எங்களோடு படித்த மைதிலியை கல்யாணம் செய்ததாக கேள்வி பட்டனான் உண்மையா?.
“ ம்.. உமக்கு எத்தனை பிள்ளையள் கணேஷ்”:?
:
” எனக்கு ஒரு’ மகனும் ஒரு மகளும். உமக்கு எத்தனை சந்திரன்”?
“ எனக்கு ஒரு மகன். மட்டும். அது சரி நீர் உம்முடைய மச்சாள் பார்வதியை முடித்ததாக எங்களோடு படித்த ராஜன் சொன்னான் உண்மையே?
“ உண்மைதான்.ச சந்திரன். என் அப்ப்பா 1958 இல் இறந்த பின் அம்மாவின் தம்பி தான் எல்லாம் எங்களுக்கு. அதலை என் அம்மா விருப்பம் தண்டை தம்பியின் மகளை நான் முடிக்க வேண்டும்’ என்று. அது சரி அவன் ராஜன் இப்ப எப்படி இருக்கிறான்?
“அவன் ஒரு சிங்களத்தியை முடிச்சு மூன்று வருசமாயிட்டு.. அந்தப் பெட்டையின் அண்ணன் ஓரு எம்பி. அவருடைய கொம்பனியில் ராஜன் டைரக்டராக இருக்கிறான்” சந்திரன் விபரம் சொன்னான்.
தங்களை மறந்து இரு நணபர்களும் தங்கள் ஸ்கூல் வாழ்க்கையை பற்றி பேசி கொண்டு இருந்ததால் நேரம் போனது இருவருக்கும்’ தெரியவில்லை. பம்பலப்பிட்டி ஸ்டேசனில் சனம் முண்டி அடித்து கொண்டு இறங்கியது. கணேஷ் சர்மாவை கூட்டத்தில் கூட்டமாய் இடித்துக் கொண்டு தன கை வரிசையை காட்டிச் சென்றான் அவரோடு பயணம் செய்த பியசேனா. தன் களுசான் பாக்கெட்டில் இருந்து பணம் மாயமாய் மறைந்ததை கணேஷ் உணரவில்லை. அடுத்த வெள்ளவத்தை’ ஸ்டேசனில் இறங்க முன் தான் களுசான் பொக்கட்டுக்குள் வைத்த பணத்தை தடவி பார்த்ததும். அவர அதிர்ச்சி அடைந்தார் அவரின். இருபத்தையாயிரம் பணத்தைக் காணவில்லை. ஸ்டேனில் இறங்கியவர் “ ஐயோ என் பணம்:போச்சே” என்று ஓலம் இட்டபடி பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்து’ விட்டார். ஸ்டேஷன் மாஸ்டர் வந்து அவரிடம் நடந்ததை கேட்டு அனுதாபப் பட்டார்.
*****
தொங்கிய முகத்தோடு வீடு திருபிய கணேஷ் நடந்ததை பார்வதிக்கு சொன்னார்.
“உங்களுக்கு கதை போன இடம் கைலாயம் என்று இருந்திருப்பியல் அவன் ஒருவன் பிக்பொக்கெட் அடித்தது கூட உங்களுக்குத் தெரிந்திருக்காது. நீங்கள் சரியான கவனமில்லாதவர்.. மாமியின் ஒப்பரேசனுக்கு இப்ப காசுக்கு என்ன செய்யப் போறியல்”?
“நடந்ததை டாக்டரிடம் சொல்லி ஒப்பரேசனை ஒரு மாதம் தள்ளிப் போடும் படி கேட்டுப் பார்ப்போம் போலீசுக்கு போய்’ பிரயோசனம் இல்லை. இது என் தலை எழுத்து” என்றார கணேஷசர்மா..
“என் அப்பாவை காசு கடனாக கேட்டுப் பார்கட்டே. அவருடைய சகோதரியின் ஒப்பரேசன் தானே”
“ அவருடய மனைவி காசு கொடுக்க அவரை விட மாட்டா”
“ அப்ப இன்னொரு வழி இருக்கு”
:”என்ன சொல்லுமென்”
“என்றை கழுத்திலை இருக்கிற ஆறு பவுன் தங்கச் சங்கிலியை விப்போமே”?
“ என்ன விசர் கதை பேசுறீர். அது; மாமா உமக்குப் போட்டது. இரண்டு நாள் அவகாசம் எனக்குத் தாரும் 25.000 தேட வழி பாக்கிறன்” என்றார் கணேஷ சர்மா
*****
அடுத்த] நாள் சனிக்கிழமை.. யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு கணேஷ சர்மா போய் கதவை திறந்தார். வந்தவர் சிங்களத்தில் “ நீங்கள் தானே கணேஷ்” என்றார்..
கணேசுக்கு சிங்களம் தெரிந்த படியால் சிங்களத்தில் “ ஓம் நான் தான் கணேஷ் சர்மா. நீர் யார்’?
“ என் பெயர் பியசேனா. பிக் பொக்கெட் பியசேனா என்றாள் மருதானையில் பலருக்குத் தெரியும் . பிக் பொக்கெட் அடிப்பது’ என் தொழில்”
“ என்ன சொல்லுறீர் நீ பிக்பாக்கெட்காரனா> அப்ப என் பேர்சை எடுத்தது..நீரா”?. ”
“ ஆம் நான் தான், நெற்ற்று ட்ரெயினில் உம்மை இடித்து’ பிக் பாக்கெட் அடித்தது’ நான் தான்.
“ அப்ப என் 25.000 பணத்தை எடுத்தது நீயா? எங்கே என் பணம்”?
“ ஓம். நான்தான். நான் எடுத்த பேர்சுக்குள் உமது விலாசமும், உமது அப்பாவின் படமும் விசிட்டிங் கார்ட்டும் இருந்தது. அதை வைத்து’ உம்மை தேடி வந்னான் நான் திருடிய பணத்தை திருப்பிக்’ கொடுக்க”
“ புதுமையாக இருக்கே உன் செயல்”
“ என் அப்பா செய்த பாவத்தை நான் தீர்த்து ஆக வேண்டும்”
“ என பாவம் உம அப்பா செய்தவர்”? கணேஷ் கேட்டார் ஆவலுடன்
“ என் அப்பா தான் பாணதுறை முருகன் கோவில் ஐயராக இருந்த சிவலிங்க சர்மா என்ற இந்த படத்தில் இருந்தவரை நெருப்பு வைத்து கொன்ற கூட்டத்தின் தலைவன். கடவுள் அம்மூவரையும் தண்டித்து விட்டார். என் அப்பா சாகும் போது என்னிடம் தான் கொலை செய்த ஐயரின் மகனை சந்தித்து மன்னிப்பு கேட்கும் படி சொன்னார். நான் உம்மை தேடினேன் நீர் கிடைக்கவில்லை. நீரும் உம் அம்மாவும் யாழ்ப்]பாணம்
போய் விட்டதாக சொன்னார்கள். இது நடந்து பல வருசங்கள் அகிவிடடது. எப்படி விதி எங்களை சந்திக்க வைத்திருக்கிறது பார்த்தீரா. கணேஷ் ஐயா?. என் அப்பா செய்த குற்றத்துக்கு அவர் சார்பில் நான் உம்மிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வந்திருக்கிறன்” கண்களில் நீர் தழும்பியபடி பியசேனா கணேஷ் காலில் விழப்போனான், உடனே கணேஷ் அவனைத் தடுத்தி நிறுத்தி.
“ நீ என் காலில் விழவேண்டாம் உமது அப்பா செய்த குடுற்றத்துக்கு நீ என்ன செய்யமுடியும்”?
“ ஐயா இந்தாருங்கள் நான் உங்களிடம் பிக்போக்கட் அடித்த பேர்சும் 25.000 ரூபாய் பணமும்’” என்று மன்றாட்டமாக சொல்லியபடி பணத்தையும் பேர்சையும் பியசேனா கணேஷிடம் கொடுத்தான்.
இந்த பணம் என் அம்மாவின்; ஒப்பரேசன் செலவுக்கு நான் லோன் எடுத்தப் பணம்”
“ அப்படியா ஐயா?. இன்னொரு உங்களிடம் வேண்டுகோள்”
“ என்ன சொல்லப் போகிறாய் பியசேனா”?
: என் அப்பா செய்த’ குற்றத்துக்கா என் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் இந்த 75,000 ரூபாவையும் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அம்மாவின் : ஒப்பரேசன் செலவுக்கு உதவும்” பணத்தை பியசேனா நீட்டினான்.
“ ஐயோ எனக்கு’ நீ பிக் பொக்கெட் அடித்து சம்பாதித்த பணம் வேண்டவே வேண்டாம்.. அந்தப் பணத்தை கொண்டு போய் எதாவது ஒரு அனாதை பிள்ளைகள் மடத்துக்கோ விகாராவுக்கோ கொடு. நீ எனக்கு ஒரு காரியம் மட்டும் செய்தால் போதும். செய்வியா பியசேனா”?
“ சொலுங்கோ ஐயா, நீங்கள் எதைச் சொன்னாலும் நான் நிட்சயம் செய்வேன் ஐயா
“ நீ இனி இந்த பிக்பாக்கெட் அடிப்பதை நிறுத்து. என்னைப் போல் எத்தனையோ குடும்பங்கள் உன் தொழிலால் பாதிக்கப்பட்டிருக்குது என்று உனக்குத் தெரியுமா?
“ இப்ப தெரியும் ஐயா இனி இந்தத் தொழிலை செய்யவே மாட்டேன் இது சத்தியம்” என்று அழுதபடி பியசேனா சொன்னான்.
கணேஷ சர்மா பார்வதியை திரும்பிப் பார்த்து. “ இந்தாரும் 25.000 ரூபாயும் என் பேர்சும். போய் அலுமாரியில் வையும் திங்கள் கிழமை அம்மாவின் ஒப்பரேசனுக்கு முழு காசும் கட்ட வேண்டும்” என்றார் கணேஷ் .
அதே சமயம்’ அவரின் தாய்’ பூஜை அறையில் மணி அடித்து சுப்பிரபாதம் சொல்வது’ கேட்டது. பியசேனா எல்லோரையும் கை கூப்பி வணங்கி விடை பெற்றான்.
******
(யாவும் கற்பனை)
,