காலிமுகச் சிறுவன்

காலிமுகச் சிறுவன்

பொன் குலேந்திரன் – கனடா

முன்னுரை
சென்னையில் மெரினா கடற்கரையைப் போல் கொழும்பில் காலிமுகத் திடலும் உண்டு, ஆனால் மெரினா போன்று பெரிய மணல் நிறைந்த் கடற்கரை அல்ல அதோடு சுமார் அரை கி மீ நீளமே உள்ளது . காலிக்கு போகும் பெரும் பாதை அருகே இருப்பதால் அந்த பெயர் ஒல்லாந்தர் காலத்தில் இருந்து வந்தது ,இப்பொது அங்கு இருக்கும் காலி முக ஹோட்டேல், ஒலலாந்தர் ஆட்சின் பொதுஅதிகாரிகள் வாழ்ந்த மாளிகை . 1859 ஆம் அண்டு பிரிட்டிஷ் கவர்னர் சேர் ஹென்றி வோர்ட் என்பவர் அந்த மண் திடலை விருத்தி செய்தார் அங்கு குடும்பங்கள் ஓய்வு நாட்களில் பொழுதை போக்க போவர் .

*****
அன்று எனக்கு விடுமுறை வீட்டில் சும்மா இருக்காமல் வெள்ளவத்தையில் இருந்து பஸ் எடுத்து
காலி முக திடலில் உலாவி வருவோம் என்று சென்றேன் . இந்த சம்பவம் நடந்தது 1970 ஆம் ஆண்டில் , அந்த காலத்தில் லண்டனில் ஒடிய பழைய டபுள் டேக்கர் பஸ்கள் கொழும்பில் ஒடின . அதை CTB என்ற சிலோன் போக்கு வரத்து சபை இயக்கியது .அதை நகை சுவையாக சொல்வார்கள் பண்டாவை நம்ப முடியாது என்று (Can’t Trust Banda) . அப்போது திருமதி சிறிமாவோ பணடாரநாயக்கா பிரதம மந்திரியாக இருந்த காலம் .

டபுள் டேக்கர் பஸ்சில் நான் எப்போதும் மேல் தட்டில் பயணிப்பதுண்டு . அது விடுப்பு பார்க்க வசதியானது
சுமார் எட்டு கி மீ பயணம் , அனால் பஸ் பம்பலபிட்டியா கொள்ளுபிட்டிய ஆகிய ஊர்களில் உலா பல பஸ்தரிக்கும் இடங்களில் நின்று ஆடி அசைந்து சுமார் ஒரு மணிததியாலப் பயணத்தின் பின் காலி முகத் திடலை போய் சேரும் .
காலிமுகத் திடல் வந்ததும் பஸ்கொண்டக்டர் கோல்
பேஸ் பயிண்ட பயிண்ட (கோல் பேஸ்இறங்கு இறங்கு) என்றான் சிங்களத்தில், நான் சிலரோடு இறங்கினேன் நான் இறங்கயது காலி முக ஹோட்டல் பஸ் தரிப்பு இடம், அங்கிருந்து நூறு மீட்டர் தூரத்தில் காலி முசத் திடல் இருந்தது . என் அதிர்ஷ்டம்அன்று அரசியல் கட்சியின் கூட்டம் இருக்கவில்லை அதனால் சனம் குறைவு. சில சிறுவர்கள் பட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர் , வேறு ஒரு சிலர் குதிரை சவாரி செய்தனர். .தள்ளு வண்டிகளில் சுவையான உணவு விற்பனை ஆகி கொண்டு இருந்தது

ஒரு காலத்தில் பச்சைப்சேல் என்று இருந்த அந்த திடல் இப்போது அதன் நிறம் மாறிக் கொண்டே வருகிறது. சற்று தூரம் நடந்தேன் . இந்த திடலில் காலையில் பிரபல வணிகர்களும் ,நாட்டின் முக்கிய புள்ளிகலளும் காரில் வந்து பாரக் செய்து விட்டு காலையில் தேக அப்பியாசத்துக்கு நடந்துசெல்வர் . அப்போது பிஸ்னசும் பேசுவார்கள்

மார்ச் 22, 1952 அன்று, இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி எஸ் சேனாநாயக்கா கால் ஃபேஸ் கிரீன்’ என்ற காலி முக திடலில் குதிரை சவாரி செய்யும் போது அவருக்கு திடீர் என்று ஏற்பட்ட பக்கவாதத்தால் குதிரையில் இருந்து விழுந்து உயிரிழந்தது என் நினைவுக்கு வந்தது அப்போது எனக்கு வயது 13 . அது நடந்தது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் .
காலே ஃபேஸ் கிரீன் இன்று இருப்பதை விட மிகப் பெரிய பகுதியில் முதலில் நீடிக்கப்பட்டது. இது வடக்கே பெய்ரா ஏரி, கொழும்பு கோட்டையின் அரண் மற்றும் நகரத்தின் கல்லறை (1803 இல் நிறுவப்பட்டது), மேற்கில் இந்து சமுத்திரம், தெற்கே காலி ஃபேஸ் ஹோட்டல் (1864 இல் நிறுவப்பட்டது,) தளத்தின் அசல் கட்டிடம் ஒரு டச்சு வில்லா என்றாலும்) மற்றும் கிழக்கில் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் (1821 இல் புனிதப்படுத்தப்பட்டது). காலேஸ் ஃபேஸ் கிரீன் ஆரம்பத்தில் டச்சுக்காரர்களால் போர்த்துகீசியர்களுக்கு எதிரான தந்திரோபாயக் கோட்டைத் தொடங்குவதற்கான ஒரு பேஸ்வழிமுறையாக அமைக்கப்பட்டது. காலே ஃபேஸ் என்ற பெயர் எவ்வாறு உருவானது என்பது, கோட்டைகளுக்கான அசல் டச்சு பெயரிலிருந்து வந்தது, அதில் கொழும்பு கோட்டைக்கு நுழைவாயில் நுழைவாயில் கால் கேட் என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் அது காலி மற்றும் என தெற்கு நோக்கி உள்ளது முன்னால், அது உண்மையில் காலி நோக்கி எதிர்கொண்ட கோட்டைக்கு முன்னால் என்று பொருள். மற்றொரு பதிப்பு என்னவென்றால், அந்தப் பகுதியின் பாறைக் கரையோரத்தின் அசல் பெயரான சிதைவு, கல் பொக்கா, கல் சிங்கள பாறைக்கு சிங்கம் மற்றும் கல் கேட் உண்மையில் பாறை வாயில் என்று பொருள்.

இந்த பெயர் வந்த ஆராச்சி போதும் , நான் நடந்து களைத்து போய் ஒரு மர வாங்கில் அமர்ந்தேன் .
சில நிமிடங்களில் செவ்இளனி விற்பவன் ஒருவன் வந்து சுவையயான செவ்இளனி ஒன்றை வெட்டி தந்தான். அதை குடித்த படியே வானத்தை பார்த்தேன். அங்கு
முகில்கள் பல வடிவங்களில் அசைவதை கண்டேன் பறவைகள் முக்கோண வடிவில் பறந்து செல்வதைக் கண்டேன் எனக்கு கண்ணதாசனின் பாடல்” ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ
ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ.....
மற்றது அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ஆகிய இரு பாடல்களும் சற்று நேரம் என்னுடைய சிந்தனையில் வந்து போயிற்று .

செவ் இளனியை குடித்து முடிந்ததும் பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டேன்
சுண்டல் விற்றபடி ஒரு சிறுவன் என்னை நோக்கி வந்தான், அவன் தலையிலும் கையிலும் சுமைகள் இருந்தன. ஆஹா பிழைப்புக்காக படிக்கும் வயதில் இந்த சுமையைத் தாங்கும் நிலமை இவனுக்கு வந்து விட்டதே என்று சிந்தித்தேன். என்ன செய்வது அது அவன் தலைவிதி .
என்னிடம் வந்த அவன் “சேர் சுடச்சுட சுண்டல் இருக்கு வேண்டுமா”? என்று கேட்டான்
அவனை மேலும் கீழும் பார்த்தேன் உனக்கு வயது எவ்வளவு என்று கேட்டேன்

“15 வயது சேர்”

“ஏன் நீ படிக்கப் போகாமல் சுண்டல் விற்கிறாய்”? என்று அவனைகேட்டேன்

“என்ன செய்ய சேர் எனது அப்பா போலீசால் சுடப் பட்டு இறந்து போனார் அம்மா விதவையாகி போனாள் அவள் சில வீடுகளில் சமயல் வேலை செய்து காசு சம்பாதிக்கிறாள் நான் சுண்டலும் கச்சான் கடலை, மிட்டாய் ,வடை விற்று நாலு காசு வீட்டுக்கு சம்பாதிக்கிறன் இப்படிப் போகிறது எங்களுடைய காலம்”

“எங்கே உன் வீடு ?

வெள்ளவத்தையில் உள்ள விகார லேனில் இருக்கும் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஒரு குடிசையில் “

“ அது சிங்கள காடையர்கள் வாழும் இடமாச்சே ”

“அது உங்களுக்கு எப்படித் தெரியும் சேர்”

“என் வீடு உன் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் இல்லை”.

“எங்கே சேர் உங்கடை வீடு”?

“ராமகிருஷ்ணன் வீதியில்”.

“: எனக்கு அந்த வீதியைத் தெரியும் அங்கு ஒரு வீட்டுக்கு என்அம்மா சமையல் செய்து கொடுக்கப் போவாள்”

“ அந்த வீதியில் இராமகிருஷ்ண மிஷனும், ஹாலும் சின்ன பாக்கும் இருக்கிறது”. நான் சொன்னேன் .

“என் அப்பா உங்கள் வீட்டுக்கு தன் கூட்டாளிளுடன் விஹரராவில் பொசனுக்கு சாப்பாடு தானம் கொடுக்க காசு கேட்டு வந்திருப்பானே . அவனுக்கு முறுக்கு மீசை இருக்கும் நெற்றியில் ஒரு தளும்பு”’

“நான் வசிக்கும் வீதியில் சில தமிழர் வீடுகளுக்கு சென்று சில சிங்களவர்கள் பணம் கேட்பதாக கேள்விப் பட்டேன் ஆனால் என் வீட்டில் உள்ள எனது மாமனார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இதற்கு பயந்து அவர்கள் என் வீட்டுக்கு பணம் கேட்டு வரவில்லை அது சரி உன்னனுடைய அப்பாவை பற்றி சொன்னாயே அவர் பெயர் என்ன”?

“அவர் பெயர் சந்திரசேன”

“அசல் சிங்களப் பெயர் போல் இருக்கிறது “

“ஆமாம் அவர் பாணதுறையை பிறப்பிடமாக கொண்டவர் . அவருடைய அப்பா குணசேனா ஒரு சிங்கள அரசியல்வாதியின் அடியாள். இரு அரசியல் கொலைகள் செய்தவர். ஒரு தடவை எழு வருஷம் ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்று என் அம்மா சொன்னாள் . பாணதுறையில் உள்ள தமிழ் கடைகளில் தனது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து என் அப்பா காப்பம் வாங்கினான் “

“அப்படியா நான் கேள்விப்பட்டேன் கொழும்பில் நடந்த கலவரங்களுக்கு பாணத்துறை பகுதியிலிருந்து காடையர்கள் வந்ததாக அதில் உன் அப்பாவும் ஒருவனா “?

“சரியாக சொன்னீர்கள் என்னப்பா 58 இல் நடந்த இனக்கலவரத்தில் அங்குள்ள கோவில் ஒன்றுக்குள் குண்டார்கள் கும்பல் புகுந்து தீவைக்க முயன்றது. அவர்கள் வெறிகொண்டு விகாரமாக இருந்தனர் மற்றும் தீயை அணைக்க தவறிவிட்டனர். ஆனால் அவர்களுக்கு மிகவும் கொடூரமான யோசனை ஒன்று வந்தது. அவர்கள் கோவிலில் இருந்து ஒரு ஐயரை வெளியே இழுத்து வந்து அவரை கொதிக்கும் தாரில் எரித்தனர்”

“ அதை செய்தது உன் அப்பாவா?

“ஆமாம் சார் அவர் தான் அந்த குண்டர் கூட்டத்துக்கு தலைவன் அதை நான் சொல்ல வெட்கப்படுகிறேன் நான் அப்போ பிறக்கவில்லை ஆனால் என் அம்மா அதை சொல்லி கவலைப்பட்டாள்”

“ இப்போ விளங்குகிறது எந்த சூழலில் நீ வளர்ந்தாய் என்று”

“ என்ன சேர் செய்வது .அது என் தலைவிதி நான் அவருக்கு மகனாகப் பிறந்தது” என்றான் அந்த சிறுவன்

“ உன் அம்மா பெயர் என்ன”? என்று நான் கேட்டேன்

“அவள் பெயர் வள்ளியம்மா:”

“அவள் மலைபிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்து பெண்ணா’? என்று கேட்டேன்

“ஆமாம் சேர் சரியாகத்தான் சொன்னீர்கள் அவளொரு தொட்டக் கூலி மகள் அவள் அங்கு வேலை செய்ய முடியாத காரணத்தினால் கொழும்புக்கு வந்தவள் இங்கு அவளை கூட்டி வந்த தரகர் சந்திரசேனா என்ற சிங்களவனை அறிமுகப்படுத்தி அவளுக்கு உத்தியோகம் எடுத்து தருவான் என்று சொன்னான் ஆனால் நடந்தது வேறு அவன் என் அம்மாவை வைப்பாட்டியாக வைத்திருந்தான் அவன் தான் என் அப்பா சந்திரசேனா “

“அது சரி உன் அம்மா எப்படி உன் அப்பாவின் செயல்களை பொறுத்து கொண்டாள்”?

“ அதை ஏன் கேட்கிறீர்கள். தினமும் அவர் குடித்துவிட்டு வந்து என் அம்மாவை அடிப்பார் ஒருமுறை நான் தடுக்கப் போய் என் கன்னத்தில் அடித்தார் அவர் கையில் இருந்த மோதிரம் என் முகத்தில் பட்டு இந்த வடு தோன்றிவிட்டது பார்த்தீர்களா” என்று காட்டினான்

“அட பாவி அப்படி ஒரு கொடூர மனுசனாஉன் தந்தை என்று கேட்டேன் ,

“ ஆமாம் சார்”

“ அப்போ உன் அம்மா ஒரு தமிழச்சி என்றபடியால் எப்படி வள்ளியம்மா என்ற பெயரை வைத்திருக்க விட்டார்” என்று நான் அவனைக் கேட்டேன்.

“அது ஒரு கதைசேர் அவளுடையபெயரை சுது மெனிக்கே என்று என் அப்பா மாற்றிவிட்டார்

“அப்போ உன்னுடைய அம்மா வெள்ளை நிறமுள்ளவளா”? என்று கேட்டேன்

“ஆமாம் சார் அதனால் தான் அவளை விரும்பி என் அப்பா அவளை வைத்திருந்தார் என்னுடைய நிறத்தை பாருங்கள் எனக்கும் அந்த வெள்ளை நிறத் தோல் வந்துவிட்டது”

“ அது சரி உங்க அம்மாவுக்கு அந்த வெள்ளை நிறம் வரக் காரணம் என்ன :”? என்று கேட்டேன்

“ அதுவும் ஒரு கதை சேர்”

”:கதையா சொல்லு அந்த கதையை”.

“ என் அம்மம்மாவின் பெயர் வடிவாச்சி அவள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவள். அவள் ஒரு அழகான பெண். என் அம்மாவை போல் பாடுவாள்.. வடிவாச்சி வேலை செய்த தோட்டத்து ஹட்சன் என்ற வெள்ளைக்காரர் பெரியதுரை அவளை கண்டுவிட்டார் அவளை தன் வீட்டுக்கு வந்து தோட்ட வேலையும் தனக்கு சமையலும் செய்து தரும்படி சொல்லி கட்டளையிட்டார் அதோடு என் பாட்டி நன்றாகப் பாடுவாள் பெரியதுரை சொன்னதை அவள் தட்ட முடியாது அல்லவா என்னுடைய பாட்டா தடுத்தும் அவள் அங்கு போக வேண்டி வந்தது தேயிலை கொய்த பின் மாலை நேரங்களில் பெரியதுரையின் பங்களாவுக்கு சென்றாலள் வெகு நேரம் கழித்து அழுது கொண்டே வீட்டுக்கு வருவாள் இப்படி போனது அவளுடைய வாழ்க்கை அவளுக்கு அந்த பெரிய துரைக்கும் பிறந்ததுதான் என்னம்மா அதனால்தான் அந்த அம்மாவுக்கு அந்த வெள்ளைக்காரன் நிறம் சேர்ந்து இருக்கிறது என்றான் சிறுவன்

“இப்போ வளங்குகிறது உன் அம்மாவின் நிறத்தின் காதை ;.நானும் கேள்விப்பட்டேன் தங்களுடைய பொழுதுபோக்குக்கு அங்கு வேலை செய்த பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்தார்கள் பெரிய துரைமார் என்று என்ன செய்யவது வறுமை என்பதால் அவர்கள் அந்த வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது அதுசரி உனது அப்பா கலவரத்தில் ஒரு ஐயரைப் கொலை செய்தார் என்று சொன்னாயே அதன்பின் அவருக்கு என்ன நடந்தது”?.

“என் அப்பா செய்த கர்மா அவரை விடவில்லை என்று என் அம்மா சொன்னாள் சில வருடங்களுக்குப் பின் நடந்த இனக்கலவரத்தில் அவர் ஒரு கடையை கொள்ளை அடிக்கும் போது போலீசாரால் சுட்டு கொள்ளப்படார்”

“அது சரி இவ்வளவு நேரம் உன்னோடு பேசுகிறேன் உன் பெயரை சொல்ல மறந்து விட்டாயே”

“ என்று ஆமாம் சேர் என்னுடைய பெயர் அமரதேவா அம்மா என்னை தேவன் தேவன் என்று கூப்பிடுவாள் .

“அமரதேவா என்பவர் சிங்கள பாடகர் ஆச்சே”.

“ ஆமாம் சேர் என் அம்மாவுக்கு சிங்கள பாடகர்கள் தமிழ் பாடகர்கள் என்றால் போதும் என் என்றால் அவளும் ஒரு அளவுக்கு நல்ல குரலில் பாடுவாள். தனது கவலையைப் போக்க வீட்டில் பாடுவாள்” என்றான் தேவன் ,

“நீ சொல்வதை கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது சிப்பிக்குள் முத்து இருக்கிறதல்லவா அது போல் என்று உன் அம்மாவை சொல்” என்றேன்

“சில சமயங்களில் தெரு ஓரத்தில் இருந்து என் அப்பா இறந்த பின் ரபானை அடித்து பாடினாள் கொஞ்சம் காசு கிடைக்கும்

“அப்படியா உனக்கு தங்கச்சி இல்லையா “?

“என்னோடு பிறக்காதஒரு தங்கச்சி உண்டு”.

“ என்ன சொல்லுகிறாய் தேவா “ நான் அவனைக் கேட்டேன்

“ஒரு நாள் என் அம்மா வீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி தமிழில் அழகான பாடல்களை ஒரு தகர டப்பாவை கையில் வைத்து அடித்து பாடிக் கொண்டு பாடிக் கொண்டிருந்தாள், சிலர் அவளுக்கு காசு போட்டார்கள் .என் அம்மாவுக்கு அவள் மேல் பரிதாபம் வந்தது. அந்த அனாததை என்னுடன் என் வீட்டுக்கு அவளை என் வீட்டிற்கு கூட்டி வந்தாள் கூட்டி வந்து எனக்கு அவளை அறிமுகப்படுத்தினார் எனக்கு அவளைப் பார்த்ததும் பிடித்துக்கொண்டது எனக்கு அவள் மேல் பரிதாபம் வந்தது என்னுடன் விளையாட தேவை என்பதால் அம்மாவிடம் நான் சொன்னேன் ” அம்மா நீ நல்ல ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து இருக்கிறாய் என் தங்கச்சியாக. அதுக்கு நன்றி :


“என்ன பெயர் உன் தங்கசிக்கு”?என்று கேட்டேன்

அதுக்கு அவன் சொன்னான் என் அம்மாவுக்கு பிடித்த பிடித்த தென்னிந்திய திரைப்பட பாடல் பாடும் பாடகி சித்ராவின் பெயரை வைத்தாள் என் அம்மா ,

“ தேவா உனக்கு ஒரு தங்கச்சி இருக்குறது நல்லது உன் அம்மா இல்லாத காலத்தில் நீயும் அவளும் ஒன்றாக ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளலாம்”

“சரியாகச் சொன்னீர்கள் சேர் சித்ரா நல்லாக பாடக்கூடியவள் அவளுக்கு சிங்கள சினிமாவில் பாட சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும் “

“ நீ அதைப் பற்றி யோசிக்காதே இப்பொழுது நடக்கப்போவதை பற்றி முதலில் யோசி அதுசரி உன்னோடு வெகு நேரம் கழித்து விட்டேன் சாப்பிட என்ன வைத்திருக்கிறாய் “என்று கேட்டேன்

“என்ன உங்களுக்கு வேண்டும் சேர் “?

“சரி எனக்கு சுண்டலும் மூன்று இறால் வடைகள் தா” என்றேன்

“ இது என் அம்மா செய்த சுண்டலும் இறால் வடைகள் சுவைத்து பாருங்கள் என்றான்”
அவன் சொன்ன விலையிலும் பத்து ரூபாய் அதிகம் கொடுத்தேன் . அவன் நன்றி தெரவித்தான் .
எடுத்து சாப்பிடத் தொடங்கினேன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவன் சொன்னான் “சேர் நான் இந்த வேலை மட்டும் செய்வதில்லை வெள்ளவத்தையில் சில கடைகளுக்கு கடைகளில் பீங்கான் கோப்பை கழிவுகளை சுத்தம் செய்வேன் சாப்பிட்டவர்கள் இலைகளை தூக்கிப் போய் தொட்டியில் போடுவேன் சில வீடுகளில் பேப்பர் போடுவேன் அதிலிருந்து பணம் எனக்கு வருகிறது இதனால் எனக்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை”

“தேவா நீ இதே மாதிரி தொடர்ந்து செய்ய முடியாது எனக்கு நீ உன் அப்பனை போல் இல்லாமல் கடும் உழைப்பில் சம்பாதிக்கிறாய். அவரை போல் கப்பம் வாங்கி சம்பாதிக்கவில்லை நீ ஒரு நல்ல குணம் உள்ள சிறுவன் நீ மேலும் படிக்க வேண்டும் முடிந்தால் ஆங்கிலமும் தமிழும் எழுதப்படிக்கத் கற்க வேண்டும் முடிந்தால் படித்து உயர்தர பரீட்சையில் சித்தி பெற வேண்டும் மக்களுடன் நட்பாகப் பழக வேண்டும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் இதை நீ செய்வாய் என்று எனக்கு தெரியும்” நான்அவனுக்கு சொன்னேன் .

“சேர் நீங்கள் சொல்வது எனக்குப் பெரிய நிம்மதியை மனசுக்குள் கொடுக்கிறது இப்படி நீங்கள் வழி காட்டிய பசி நடப்பேன் , நீங்கள் என்க்கு கிடைத்த ஆசான் “ என்றான்.

“தேவாஉனக்கு 16 வயது ஆனதும் முடிந்தால் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு பியூன் வேலை மனேஜருடன் பேசி உனக்கு எடுத்து தர பார்க்கிறேன் அது நல்ல வேலை நல்ல சம்பளம் சில சலுகைகளும் உண்டு என்ன சொல்லுகிறாய் “?என்றேன் .

“சேர் அதைநீங்கள் எனக்கு செய்தால் எனக்கு மிகப்பெரிய உதவியயாக இருக்கும் சேர் நான் அதே நேரம் ஓடருப் பள்ளியில் சேர்ந்து படித்து என்னுடைய வாழ்க்கையை உயர்துத்வேன் என்றான்.

“ இதோ எனது பிஸ்னஸ் கார்ட் அடுத்த கிழமையும் இதே நாள் இங்கு வருவேன் . நீ உன்னுடைய அம்மாவுடன் இதை பற்றி பேசி எனக்கு வந்து ஒரு உறுதிமொழி தரவேண்டும் முடியுமா உன்னால் என்றேன்
“”முடியுமசேசார் நிச்சயம் செய்வேன்”. பிஸ்னஸ் கார்ட்டில் ஆங்கிலத்தில் இருந்ததை எழுத்து கூட்டி வாசித்தான் கணபதி இராமச்சந்திரன் , அசிஸ்டன்ட் மனேஜர் பேர்ல் எச்போர்ட் கொம்பனி என்று இருந்தது

“சேர் உங்களுக்கு எனக்கு பிடித்த எம்ஜீஆரின் பெயர் சேர் அவரை போல் நீங்கள் எனக்கு வாத்தியார் சேர் இதைக் கேட்டதும் என்னம்மா மிகவும் மகிழ்ச்சி அடைவாள்முடிந்தால் நீங்கள் ஒரு நாளைக்கு உங்கள் குடும்பத்தோடு என் குடிசைக்கு வாருங்கள் என் அம்மா சுவையாக உங்களுக்கு சமைத்து போடுவாள்”,

அதுக்கு நான் சொன்னேன் “ தேவா அதுக்கு என் மனைவி ஒப்புக்கொள்ளவேண்டும் அவள் வர அவள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் ஒரு நாள் உன் வீட்டுக்கு நிச்சயம் வருவேன் உன் அம்மாவையும் உன் தங்கச்சியை சந்திக்க “

“உங்களுக்கு மிகப் பெரிய மனசு சேர். நீங்கள் தராதரம் பார்க்காமல் என்னுடன் பேசி எனக்கு நல்வழி காட்டி எதுக்கு மிகவும் நன்றி என்றான் தேவா.

“ சரி சரி தேவா உன்னுடைய வியாபாரத்தைக் கவனி. நீ என்னுடன் வெகு நேரம் கதைத்து விட்டாய். எனக்கு போவதுக்கு நேரமாகிவிட்டது” என்றேன் .

“நன்றி சேர்” என்று என்னிடம் இருந்து தேவா விடை பெற்றான்

****

அங்கிருந்து ஒரு த்ரீ வீலரை பிடித்துக்கொண்டு நான் வீடு திரும்பும்போது அந்தப் த்ரீ வீலர் ஓட்டியவன் ஒரு தமிழன் என்பதை அறிந்தேன் ஏனென்றால் அவன் த்ரீ வீலர் போட்ட பாடல் எனக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தது ஏனென்றால் அந்த பாடல் கடலோரம் வாங்கிய காற்று என்ற பாடல் அது எனக்கு பிடித்த பாடல் எவ்வளவு பொருத்தமான பாடல் என்று மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி
அரை மணி நேரத்தில் கொண்டு வந்து ராமகிருஷ்ண வீதியில் உள்ள எனது வீட்டில் த்ரீ வீலரை நிற்பாட்டினாரன் அவனுக்கு காசு கொடுத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்தேன்

வாசல் கதவை திறந்த என் மனைவி :” ராம் முதலில் கை காலைக் கழுவி போட்டு உள்ளே வாருங்கள் “என்று கட்டளையிட்டாரள் அவள் சுத்தம் பார்ப்பவள் என்று எனக்கு தெரியும் அவளுக்கு நான் கட்டுப்பட்டே ஆகவேண்டும் கழுவிவிட்டு உள்ளே சென்று கதிரையில் அமர்ந்தேன்
“ என்ன ராம் இவ்வளவு நேரம்’? என்று அவள் கேட்டாள் நான் நடந்ததை சொன்னேன்
“சரி இனி என்ன நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதை எழுத தொடங்க வேண்டியது தானே இது உங்களுக்கு விருப்பம எத்தனை சிறுகதைகள் உங்களுடைய கதைகளில் வந்திருக்கிறது அவர்கள் பரிசுகளும் தந்திருக்கிறார்கள் பரவாயில்லை இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதுவது நல்லது .இதற்காக கதைகள் தேடி அடிக்கடி வெளியே போக வேண்டாம் “என்றாள் என் மனைவி

“சரி சரி மாலதி உனக்கு தெரியாது சிறுகதை உருவாக்குவதுக்கு கண்டகாட்சிகளும், நடக்கும் சம்பவங்களையும் மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து புனைவு கலந்து எழுத உதவும் சூழ்நிலை பற்றி விவரித்து எழுத வேண்டும் அதோடு மற்றும் நகைச்சுவையும் கலந்து இருக்க வேண்டும் ;
“ சரி ராம் உங்களுடைய இலக்கிய விளக்கம் எனக்கு இப்போது தேவை இல்லைஇரவு சாப்பாடு தயாராக இருக்கிறது. களைத்துபோய் வந்திருப்பீர்கள் சாப்பிட வாருங்கள் என்று சொல்லிய படியே சமையல் அறைக்குள் சென்றாள்.

*****
( உண்மையும் புனைவும் கலந்தது)

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (13-Sep-21, 9:02 am)
பார்வை : 97

மேலே