பயம் மயம்
பள்ளி நிர்வாகி::
வாங்க ஐயா. எங்க பள்ளியோட திறப்பு விழா கல்வி அமைச்சர் தலைமையில இன்னும் அரை மணி நேரத்தில நடக்கப் போகுது. முதல் மாணவர்களாச் சேர்கக உங்க பையன்கள் இரண்டு பேரையும் அழைச்சிட்டு வந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றீங்க ஐயா.
@@@@@@
எங்க இரட்டைப் பையன்கள் இரண்டு பேரும் எல்லா போட்டிகளிலும் படிப்பிலும் முதல் மாணவர்களா வரணும். (மனைவியைப் பார்த்து) இல்லையா பாரதி?
@@@@@@
ஆமாங்க.
@@@@@@@
நல்லது. உங்க எண்ணம் உயர்ந்த எண்ணம். வாழ்த்துக்கள். பையன்கள் பேருங்களச் சொல்லுங்க.
@@@@@@@
இவம் பேரு 'பயம்' (Payam). அவம் பேரு மயம் (Mayam).
@@@@@@@
அடடா. அருமையான பேருங்க. நம்ம மாநிலத்திலயே யாரும் இந்தப் பேருங்கள யாரும் தங்கள் பிள்ளைங்களுக்கு வச்சிருக்கமாட்டாங்க.
@@@@@@
உண்மைதான் ஐயா. ஊருல எல்லாம் சுரேசு, ரமேசு, நரேசு, கணேசுங்கிற மாதிரி பேருங்களத்தான் வச்சிருப்பாங்க. உலகத் தமிழர்கள்ல யாருமே அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்காத பேருங்கள எங்க குழந்தைகளுக்கு வைக்கணுமிங்கிறது எங்க ஆசை. ஒரு இந்திப் பேராசிரியரைப் பாத்து அவரைக் கேட்டோம். ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னாரு. அவுரு சொன்ன பேருங்கதான் 'பயம்' , 'மயம்'
@@@@@@
இந்த அருமையான இந்திப் பேருங்கள வச்சு நீங்க பச்சைத் தமிழர்ங்கிறத நிரூபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். தமிழ்ப் பேரை வச்சுட்டு இருக்கிறவங்களை யாரும் மதிக்கிறதில்லீங்க. உங்களைப் பாராட்டாதவங்க யாரும் தமிழரா இருக்க முடியாதுங்க. சரி. அமைச்சர் வர்ற மாதிரி தெரியுது. நீங்க போயி இருக்கையில அமருங்கள். விழா முடிஞ்சதும் 'பயம்', 'மயம்'
இரண்டு பேரையும் சேர்த்துட்டு நாங்க விளம்பரத்தில் அறிவிச்சபடி உங்களுக்கு அஞ்சு பவுன் தங்கச் சங்கில இரண்டையும் அமைச்சர் உங்க பையன்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பித பரிசாத் தருவாரு. போய் உட்காருங்கள்.
@@@@@@@
ரொம்ப நன்றீங்க ஐயா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Payam = Message. Iranian (Persian), Indian origin.
Mayam = Infinite, consciousness personified. Indian origin.