பேரழகு

கதவைத் திறந்து உள் நுழைந்தவர் கால்களில் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் கீறிட, துடைப்பம் கொண்டு பெருக்கி, கை கழுவி விட்டு அறைக்குள் சென்று தன் டீபன் பாக்ஸை வைத்துவிட்டு, கேஸில் பாலை கொதிக்க வைத்தார்.

உள்ளறையிலிருந்து பங்கஜத்தின் அழுகுரலும் விசும்பலும் பெருகி வந்தன

_____

என்னங்க இந்த மாசம் சம்பளம் வந்ததும் எனக்கு ஒரு பேஸியல் கிரிம் வாங்கனுங்க

சரி வாங்கலாம் ஆனா போன மாசம் ஒண்ணு வாங்கனியே அது என்னாச்சு

அந்த ப்ளேவர் நல்லா இல்லைங்க என் ப்ரண்ட் எமிலி தான் இந்த ப்ளேவர் நல்லாயிருக்கும் ட்ரை பண்ணுனு சொன்னா ப்ளீஸ்ங்க வாங்கி கொடுங்க

பெரு மூச்சு சரி என்றது

______

பொங்கிய பாலை அணைத்து கிளாஸில் ஊற்றினார்.

கதவருகே சென்று கதவை தட்டினார் தாழ் போட்ட அறையிலிருந்து குரல் வரவில்லை

பங்கஜம் கதவைத் திற கொஞ்சம் பால் குடிச்சிடு

எனக்கு எதுவும் வேணாம் முடிஞ்சா உங்க கையாலேயே விஷம் எதாவது இருந்தா கொடுங்க குடிச்சிட்டு செத்திடுறேன்

பங்கஜம் நடந்ததேயே ஏன் இன்னும் நினைச்சிட்டிருக்க

முடியலைங்க ஒவ்வொரு தடவையும் கண்ணாடிய பாக்கறப்பலாம் உடம்பு பத்திகிட்டு எரியுது

கதவைத் திற பங்கஜம் நான் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்

கதவு திறக்க அறை வெளிச்சமின்றி கிடந்தது. லைட் போட்டு மனைவி அருகே சென்றார் அவள் தலையணையில் முகம் புதைய அழுதுக் கொண்டிருந்தாள்

______

டாக்டர் என் ஒயிஃ க்கு என்னாச்சு

கண்ட கண்ட கிரீமை யூஸ் பண்ணி அவங்க முகத்துல சீவியர் அலர்ஜி ஆயிருக்கு எப்படியும் ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்

______

அவளை எழுப்பி முகத்தை நோக்கினார் புண் பொரிந்து முகத்தில் சீழ் வடிந்துக் கொண்டிருந்தது.தன் கர்சீப்பால் அவள்  கண்ணீரையும் சேர்த்து துடைத்தவர்

பால் குடி பங்கஜம்

எப்படிங்க இப்பக் கூட உங்களுக்கு என் மேல கோபம் வரலையா. நீங்க நாலு அடி அடிச்சிருந்தா நிச்சயம் நான் சிரிச்சிட்டே வாங்கி இருப்பேங்க. ஆனா இந்த அன்ப  என்னால தாங்க முடியலைங்க. அவள் முகம் அவர் தோள்களில் பதிந்தது

அவளை எழுப்பி ஸ்பூனால் பாலை ஊட்டினார்

பின் தன் கையில் வைத்திருந்த கவரை காண்பித்து உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்றதுக்கு டாக்டர் என்கிட்ட கையெழுத்து கேட்டாரு

அவள் முகம் கூர்மையடைந்தது.

பங்கஜம் நான் உன்னை கேக்காமலே ஒரு முடிவு பண்ணிட்டேன் ஆனா அத நீ ஏத்துப்பனு நம்பறேன்

சொல்லுங்க

நான் இந்த ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு ஒத்துக்கல பங்கஜம்

மௌனத்தால் அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன

அவர் அழுதவாறே என்ன தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணி உன்னை குணப்படுத்தினாலும் அது உன் முகச்சாயல் இல்லாம தான் இருக்கும்னு டாக்டர் சொன்னார். நான் சொல்லிட்டேன்,"என் மனைவி முகம் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. அவ நான் விரும்பற என்னோட பழைய பங்கஜமாகவே இருந்துட்டு போகட்டும். அவள கண்கலங்காம நான் பாத்துக்கறேன். என்ன பொறுத்தவரை அவ எப்பவுமே அழகு தானு"

குரல் வெடிக்க பங்கஜம்  அழுதாள்

பங்கஜம் நீ அழறத பார்த்தா நான் எதாவது...

அவர் வாயை கைகள் கொண்டு பொத்தியவள் அவர் கால்களை தொட முயன்றாள் கண்ணீர் பெருக்கோடு...

எழுதியவர் : S. Ra (12-Sep-21, 3:25 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : perazhagu
பார்வை : 173

மேலே