🤔சந்திப்போமா❓

""மீண்டும் சந்திப்போமா"" என்று வார்த்தையை சொல்லிக்கொண்டு சென்றவன் பின் அவனது அழைப்பும் வரவில்லை செய்தியும் வரவில்லை என முணுமுணுத்துக் கொண்டே அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் பிரியா.


பிரியா பிரியா நேரம் என்ன ஆச்சு வந்து சாப்பிடு என காலை உணவு சாப்பிட அம்மா அழைக்க இரும்மா.......... வரேன் என கூறிக்கொண்டே கைப்பேசியின் அருகே அமர்ந்து கொண்டு நகத்தை கடித்துக் கொண்டே எதை எதையோ யோசனை🤔 செய்து கொண்டிருந்தாள்.அப்பொழுது


""உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்...
என்னை நீ ஏற்றுக்கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன் ""

என கைப்பேசி மணி ஒலிக்க சிரித்தவாறே கைப்பேசியை எடுத்தாள். பின் அவனது அழைப்பை ஏற்றுக்கொண்டு மௌனமாக இருவரும் மூச்சுக்காற்றாலே சில விநாடிகள் பேசிக்கொண்டே இருக்கையில் முதலில் அவனே ஆரம்பித்தான்.

உன்னிடம் இறுதியில் கூறிய வார்த்தையால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன் ஆனால், இனி "" சந்திப்போமா.....??""என சோகமாக மெல்லிய குரலில் கேட்டான்.

ஏன் இப்படி கூறுகிறாய் அருண் என பிரியா கேட்டாள்...?? அதற்கு அருண் கூறிய பதில்.... இதற்கு முன்பு சந்தித்த வேலையில் மகிழ்ச்சியான நிமிடங்கள் உன்னோடு கழிந்தது ஆனால், அதன் பிறகு உன்னுடைய அண்ணன் அந்த இடத்தில் தான் இருந்து நடந்தது எல்லாம் கவனித்து கொண்டு இருந்தது நாம் கவனிக்கவில்லை பின் நீ சென்ற பிறகு என்னிடம் வந்து பேசினார்.

""அழகை வர்ணிக்காத பேச்சும்
எதனையும் எதிர்பாராமல்
அன்பை எதிர்பார்க்கும்
எண்ணமும் குணமும் - எந்த
ஆணிடமும் நான் பார்க்கவில்லை
உன்னிடம் மட்டுமே கண்டு
வியந்தேனடா......!!!""


என்று எழுதி இருந்த கவிதையையும் அதனுடன் சேர்த்து என்னுடைய புகைப்படம் ஒட்டிய புத்தகத்தில் பார்த்ததை கூறினார்.....பின் என்னை பற்றி எப்படி தெரியும் என கேட்டேன் அதற்கு.....என் தங்கை எங்கு சென்றாலும் அவளுடனே வருவதைக் கண்டேன்....பின் உன் நண்பர்களிடமும் விசாரித்து தெரிந்து கொண்டேன்.அதன் பின் தந்தையிடம் தாயிடம் கூறி சம்மதமும் வாங்கிவிட்டேன்...ஆனால் பிரியா விற்கு எதுவும் தெரியாது என கூறினார்....

சரி பெற்றோர்கள் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டதை நினைத்து மகிழ்வதா இல்லை அருண் கூறிய வார்த்தையை நினைத்து கவலை கொள்வதா என யோசனை 🤔செய்து கொண்டே.....

சரி....... சரி.........சம்மந்தம் தானே கூறினார்கள் அப்புறம் ஏன் இனிமேல் சந்திப்போமா??? என்று கூறினீர்கள் என குழப்பத்துடன் கேட்டாள் பிரியா அதற்கு

இனி காதலர்களாக சந்திப்போமா👩‍❤️‍💋‍👨
இல்லை
கணவன் மனைவியாக சந்திப்போமா👫

என மறைமுகமாக கேட்டேன்.....ஆனால் உனக்குத்தான் புரியவில்லை.....என புன்சிரிப்பில் கூறினான்😉😉😉

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (11-Sep-21, 9:33 pm)
பார்வை : 321

மேலே