neeli

நீலி


மஹாலிங்கத்துக்கு அன்று மனசு சரியில்ல .அவன் மகனின் உடல் இரண்டு நாட்களாக கொதித்தது .வைத்தியரிடம் காட்டியபோது எதோ விஷ பூச்சி கடி போல . ''இந்த மருந்து ரெண்டு நாள் கொடு.சரி ஆகிடும், ஆகலைன்னா ,மீண்டும் கூட்டி வா.ஒரு இலை இருக்கு.அது இப்போ என்னிடம் இப்ப இல்ல. மலையில் மட்டும்தான் கிடைக்கும் மலைக்கு யாராவது போனா அந்த இலை கொண்டு வந்ததா குணம் ஆக்கிரலாம் .அதுவரை இந்த மருந்து கொடு '' என்றார்

சரியென்று திரும்பி வந்தான் .மஹாலிங்கத்துக்கு சதுரகி மலையில் யாராவது tourist வந்தால் ஜீப் வண்டி ஓட்டுவது அவன் வேலை.அவன் நண்பன் கதிர் ஒரு guide . எப்போதாவது வேலை .கதிர் அழைத்தால் போவான் .மற்ற நாள் தோட்ட வேலைக்கு செல்வான் .பெரிய வேலை இல்ல .,எப்பவும் கதிரிடம் வேலை கேப்பான் .ஏனென்றால் tourist வந்தால் நிறைய பணம் கிடைக்கும் .அன்று மட்டும் அவன் வீட்டில் தடல்புடல் விருந்தாயிர்க்கும்.,மற்ற நாள் வெறும் ரசம் தான் .

அவன் மனைவி தினமும் வேறு வேலைக்கு போக சொல்லி கொண்டே இருந்தாள் ..அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடைத்தபாடில்ல .

ஒரு நாள் நண்பன் கதிர் சதுரகிரி மலைக்கு வண்டி ஓட்ட அழைத்தான் .ஒரு பக்கம் சந்தோசம் கையில் காசு இல்லாத நேரத்தில் இப்படி ஒரு வேலை கிடைத்தது.ஆனால் மகன் உடல் பற்றிய கவலை அவனை வாட்டியது .ஆனால் பணம் தேவை .ஆதலால் புறப்பட்டான் .

''தன் மகனை குணப்படுத்தும் இலை வைத்தியருக்கு கிடைத்திருக்குமா '' என்று யோசனை செய்துக்கொண்டே சென்றான் . எப்பவும் ஓடியாடி கொண்டிருக்கும் தன் மகன் இப்படி படுத்து கிடப்பது அவனுக்கு வேதனை அளித்தது .மகனை குணப்படுத்தினால் மொட்டை போடுவதாக சிவனுக்கு வேண்டுதல் வைத்தான்.

வண்டி அடிவாரம் நெருங்கியது .தூரத்தில் இருவர் .அது கதிர் தான் .கை அசைத்தான் .


கதிருவுடன் ஒரு வெள்ளைக்காரன் கையில் paper ,கருப்பு நிற bag வைத்திருந்தான் .ஒரு பைனாகுலர் ,அரை trouser போட்டிருந்தான் .என்னைப்பார்த்து மெல்லிதாக புன்னகைத்தான் . நான் பதிலுக்கு சிரித்தேன் .

வண்டி புறப்பட்டது .வெள்ளைக்காரன் எதோ ஆங்கிலத்தில் கதிரிடம் அந்த பேப்பரை காட்டி பேச ,அவனும் ஆமோதித்தான் .

வண்டி மெதுவாக மலை மேல் சென்றது. மரம் ,செடிகூட மஹாவுக்கு அவன் மகனை நினைவூட்டியது .ஒரு மணி நேரம் கழித்து மலையுச்சி அடைந்தது .வெள்ளைக்காரன் கை காட்ட ,கதிர் வண்டி நிறுத்த சொன்னான் .பாறையின் ஓரம் வண்டி மெல்ல நிறுத்தினேன் .'இங்கயே நில் வந்துடறோம் ' கதிரும் ,வெள்ளைக்காரனும் சுற்றி பார்த்துக்கொண்டே பேப்பர் திறந்து கதிரிடம் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றான்.


மஹாலிங்கம் வண்டியில் சிறிது கண்ணயர்ந்தான் .பறவைகள் இரைச்சலில் சட்டென விழித்தான் .

மெல்ல வெளிய இறங்கி மலையை சுற்றி பார்த்தான் அவர்கள் போய் ஒருமணி நேரம் இருக்கும் என்று யோசித்தான் .மலை மிகவும் பிரமாண்டமாக இருந்தது..ரம்மியமாக இருந்தது .வெய்யிலுடன் சேர்த்து ஒரு ஈர காற்று மெல்ல உடல் குளிர்ந்தது .எங்கோ ஓடை நீர் சப்தம் தொடர்ச்சியாக காதில் கேட்டுக்கொண்டே இருந்தது .சுற்றுமுற்றும் பார்த்தான் ஓரு மனிதன் அங்கு இல்லை .

மெல்ல நடந்தான்.புதரில் ஒரு சலசலப்பு .திடீரென ஒரு முயல் வேகமாக ஓடி மரங்களுக்கு நடுவே, பள்ளத்தின் குழியில் மறைந்தது .அங்கு ஒரு செந்நாய் முயல துரத்தி வந்து பள்ளத்தின் முன் நின்றது . அது தன் இரண்டு கையால் பள்ளத்தை திறக்க முயற்சித்தது

அதை சிறிது நேரம் கவனித்து கொண்டிருந்த மஹாலிங்கம், முயலை காப்பாற்ற வேண்டும் என நினைத்தான் . உடனே ஏதாவது எடுத்து வீச தேடினான் . அருகில் உள்ள சிறு கட்டை போல தென்பட்டது. அதை எடுத்து செந்நாய் மேல் வீச ,அது 'வீல்' என கத்தி கொண்டு ஓடி மறைந்தது . வெகு நேரம் முயல் வெளியே வரவில்லை .புதரில் இருந்து வெளியே வர அங்குள்ள புதரை கட்டையால் அகற்றினான் .

அந்த செடியை வேரோடு அகற்றி முயல் வெளியே வர வழி செய்தான் .சிறிது நேரம் கழித்து முயல் தலையை வெளியே நீட்டி பின் வேகமாய் ஓடி மறைந்தது.

பின்பு தன் கையை மெல்ல முகர்ந்தான் .அந்த வாசனை . சிரியா நங்கை செடி போல வாசனை போல இருந்தது. உற்று பார்த்தான்.

நம்ம வைத்தியர் சொன்ன இலை போல தோன்றியது .சின்ன வயதில் இதே போல ஒரு இலை தனக்கு பாட்டி கொடுத்த ஞாபகம் .அவன் அதை உறுதிப்படுத்தினான் .இந்த இலைதான் விஷ காய்ச்சலுக்கு மருந்து. அந்த இல்லை வைத்து சின்ன வயதில் வைத்து விளையாண்ட ஞாபகம் .மனதில் உற்சாகம் பிறந்தது..அவன் மகனை இன்றே குணப்படுத்த சரியாக்கலாம் என்று மனதுக்குள் குதித்தான் .

'' ஆஹா இன்று நம்மை கடவுள் தான் நம்மை இங்கு அனுப்பியிருக்கார் .இல்லையென்றால் 'நான் ஏன் இன்று இங்கே வரணும்'.'முயலை காப்பாத்தணும்' அந்த இலை என் கண்ணில் படணும்'' .

சரியென்று அந்த செடியை வேரோடு புடுங்கி நிறைய வண்டியில் ஏற்றினான் .அதை அரைத்து மசிக்க இரண்டு கல் ஏதாவது கிடைக்குமா என அங்கும் இங்கும் தேடினான்.

அப்போது முயல் மறைந்திருந்த புதர் அருகே ஓடைக்கு அருகில் ,மரத்தின் இடையில் மூன்று கல் குவிந்தாற்போல் பாறையின் நடுவே புதர் மறைத்தாற்போல் மறைவாக இருந்தது..ஒன்று நீளமான செவ்வக கல்,ஒன்று தட்டையான கொஞ்சம் பெரிய கல்,மூன்றாவது சற்று உருண்டை சிறிய கல் . அது பார்க்க பாசி படிந்த சிறிது பச்சை நிற தோற்றம் கொண்ட , வழவழப்பான கூழாங்கல் போன்று காட்சியளித்தது .

அந்த கல் மூன்றயும் எடுத்து அதை வண்டியில் இருக்கையின் அடியில் மறைத்தால்போல் ஒரு பழைய துணி கொண்டு அந்த மூலிகை இலை செடியை மூட்டை போல் சுற்றி வைத்து அதன் அடியில் இந்த மூன்று கல்லையும் வைத்தான் .

உற்சாகத்துடன் வண்டியில் காத்திருந்தான் .சிறிது நேரம் கழித்து கதிரும்,வெள்ளைக்காரனும் மிகுந்த சோர்வுடன் , வந்தனர் . வெள்ளைக்காரன் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு வர மனமில்லாமல் மெதுவாக வண்டியில் ஏறினான்.

கதிர் என்னை நோக்கி '' போலாம் மஹா ' என்றான் .நான் வண்டியை செலுத்தினேன் .காரணம் என் கையில் அந்த இலை .என் மகன் இன்று சரி ஆகிவிடுவான் .மீண்டும் மனம் கேள்வி எழுப்பியது .''அந்த இலை இதுதானா?''

''இது ஏன் எனக்கு இவ்வளவு எளிதாக கிடைக்க வேண்டும்?.''வைத்தியர் அபூர்வ மூலிகை என்றாரே ?''
பார்க்க சிரியநங்கை போல இருக்கும் இந்த இலை விஷ காய்ச்சலுக்கு நல்லது என கேள்விப்பட்டிருக்கேன்

நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் என நம்பி வேகமெடுத்தான் னான் .

வண்டி அடிவாரம் வந்தடைந்தது. வெள்ளைக்காரனும்,கதிரும் கை குலுக்கி விடைபெற்றார்கள் .அந்த வெள்ளைக்காரன் பணத்தை கதிரிடம் கொடுத்து எதோ சொல்லி மறைந்தான் .

கதிர் நேராக என்னிடம் வந்து ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தான் .

''ரொம்ப நன்றி கதிர்.'' அப்புறம் பாக்கலாம் , திரும்ப வேலை இருந்தா சொல்லு '' என்றேன்.

''இரு மகா அடுத்த வாரம் திரும்ப போகணும், அதே இடத்துக்கு , அந்த சாயபுக்கு அவன் தேடியது கிடைக்கல,இன்னைக்கு போன வேலை முடியல ,மீண்டும் போகணுமாம். ''கூப்பிடறேன் தயாரா இரு '' என்றான்.

''மகா நில்லு சாயிபு இந்த பை மறந்துட்டான் , அடுத்த முறை வரும்போது இத நீ மறக்காம கொண்டு வா ,பத்திரமா பாத்துக்க '' .

சரியென்றேன்.

மஹாலிங்கத்துக்கு திருப்தி ,பணத்தை காட்டிலும் , அவன் நினைத்த மருந்து கிடைத்தது.

போகும் வழியில் வைத்தியர் வீடு பூட்டியிருந்தது .யோசித்தான் .''சரி நாமே அரைத்து கொடுப்போம் .'' இது நிச்சயம் காய்ச்சல் மூலிகைதான் ''

வேகம் வீட்டுக்கு சென்றான்.அவன் வண்டியில் இருந்த பையில் உள்ள செடியும், அந்த மூன்று கல்லையும் எடுத்து கொல்லைப்புறம் தொட்டியில் இலையும் ,கல்லயும் நன்றாக கழுவினான் .பின் தட்டை கல் மேல் இலைகளை வைத்து உருண்டை கல்லால் மசிய அரைத்து மகனின் நெற்றி மற்றும் உடலில் களிம்பு போல் பூசினான் .பின்பு கொஞ்சம் சாறை எடுத்து மகனை பருகவும் செய்தான் .

பின்பு மஹாலிங்கம் உறங்க சென்றுவிட்டான் .அடுத்த நாள் காலை கண் விழித்தான் .அவன் மகன் தோட்டத்தில் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தான் .மகாலிங்கத்திற்கு ஒரே ஆச்சரியம் ,மகிழ்ச்சி '' நம்ம மருந்து வேலை செய்துவிட்டது . மனதில்'' ஈஸ்வரா '' என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

சில நாள் கழித்து வீட்டின்முன் வைத்தியரை நேரில் கண்டான் .''என்ன மஹாலிங்கம் '' அதற்குஅப்பறம் வரவே இல்லை ,உன் பையன் எப்படி இருக்கான் ?''

''அய்யா நான் மலைக்கு போயிருந்தேன் .அப்பா எனக்கு அந்த இலை கிடைச்சுது ,நானே அத அரச்சு கொடுத்தேன் .இப்ப அவன் ரொம்ப நல்லா இருக்கான் அய்யா .''

''என்ன அந்த இலை கிடைச்சுதா ,அது நம்ம கண்னுக்கு எல்லாம் சிக்காதுப்பா . சித்தர்களுக்குத்தான் அது தெரியும் , எங்க இருக்குன்னு.''

''ஒரு நிமிஷம் அய்யா '' வீட்டினுள் விரைந்தான் .இலை எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தான் .

இதுதானே அய்யா ?

அதை பார்த்த வைத்தியர்

''இது இல்லப்பா . அது வேற .அது ரொம்ப சின்ன இலை , இது சிரியனகை போல ஒரு கீரை, விடு ,பரவாயில்ல ,எப்படியோ குணமாயிட்டான் உன் பையன் அது போதும் ,ஆனா எப்படி குணமானான் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு ''' என்று பார்த்தார்.

வைத்தியர் பிறகு சென்று விட்டார் ..மஹாலிங்கம் குழம்பினான் .'' இந்த இலை இல்லையென்றால் எப்படி ஒரே இரவில் குணமாகி ஓடிஆடி விளையாட தொடங்கினான் . ஒன்றும் புரியவில்லை . ''

''எல்லாம் ஈஸ்வரன் மஹிமை .இல்லை என்றால் எதோ ஒரு இலைக்கு மகன் உடனே எப்படி குணமானான் ''

அடுத்தநாள் கதிர் வந்தான் .''மகா நாளைக்கு தயாராக இரு .மலைக்கு போகணும் .அந்த சாயிபுக்கு திரும்பவும் எதோ பொருள் தேடணுமாம் ''.

''சரிப்பா ,''

''சரி அன்னைக்கு கொடுத்த சாயிபுவோட பை எங்க?''

''இதோ தரேன்'' .உள்ளிருந்து எடுத்து வந்து பையை கொடுத்தான் .

''ஆமாம் இதில் என்ன இருக்கு"? சாயிபு ஏன் அடிக்கடி மலைக்கு போறான் ?''

''நமக்கு என்ன தெரியும் .எதோ கல்லாம் நீலி என்கிற பாஷாண கல் ..விலையுயர்ந்தது .மருந்துக்கு எல்லாம் பயன்படுத்தவங்களாம் . கொண்டு வந்து கொடுத்தா லக்ஷம் கூட தரானாம் .எனக்கு எப்படி தெரியும் .நான் பார்த்து கூட இல்ல ..''

மஹாலிங்கம்' ''அது எப்படி இருக்கும் ''?

கதிர் அந்த பையை திறந்து ஒரு வெள்ளை பேப்பர் பார்க்க ஒரு பழைய புகைப்படம் போல இருந்தது .

அதில் அந்த சிறிய சதுர,செவ்வக வடிவிலான அடர்ந்த பச்சை நிறம்கொண்ட கற்களின் படம் .

மஹாலிங்கத்துக்கு இதை எங்கோ பார்த்த உணர்வு ,யோசிக்க ,சுரீரெஎன்றது .'' இது இது'' யோசிக்க ஆரம்பித்தான்


கதிர் '' சரிப்பா நாளை பார்க்கலாம் , வேலை இருக்கு '' என்று அவசரமாக விலகினான் ..

வேகமாக வீட்டினுள் விரைந்தான் .கொல்லைபுறம் உள்ள ஓர் அறையில் அவன் கொண்டுவந்த இலைகளுக்கு அடியில் உள்ள மூன்று கற்களை எடுத்து பார்த்தான் .அந்த படத்தில உள்ள அதே தோற்றம் ..

'' இதுவா? இந்த கல்லா ? கல் பொதுவா இப்படி தானே இருக்கும். ...இல்லை இதுதான். அதனால்தான் என் மகன் உடனே குணமாகிவிட்டான் . வைத்தியர் சொன்னதுபோல் இலையால் அவன் குணமாகல ' பாஷாண கல்லால்தான் குணமாயிருக்க வேண்டும் . ''ஆம் இது மருந்து கல் தானே '' ''இது எப்படி எனக்கு எளிதாக கிடைத்தது ?''.

''என்ன ஆச்சர்யம் , '' என் கையில் பாஷாண கல் .'' இது நிஜமா?, ''இதுவா லக்ஷம் மதிப்புள்ள கல் '' ஆச்சர்யத்தோடு பார்த்தான் .

வெளியே குடுகுடுப்பைக்காரன் சப்தம் மெல்ல காதில் விழுந்தது .

'' நல்ல காலம் பொறக்குது ,நல்ல காலம் பொறக்குது ''

எழுதியவர் : bala (14-Sep-21, 7:21 pm)
சேர்த்தது : ktrmaya
பார்வை : 75

மேலே