மண் குடிசை

முன்னுரை
மாளிகை கேட்டில் " நாய்கள் ஜாக்கிரதை " போர்டும்.. கூர்காவும் காவல் . மண் குடிசை வாசலில் " நல்வரவு " கோலங்களும் .எப்போதுமே காணக்கிடைக்கின்றன. எந்த இல்லத்தில் நிம்மதி ?
****
பலர் பார்த்து வியக்கும் இரண்டு அடுக்கு மாளிகை அது ஆறு அறைகள். ஒரு அவுட் ஹவுஸ். அது போன்ற மாளிகையில் வாழ எல்லோருக்கும் கொடுத்து வைப்பதில்லை. சிலர் தமது திறமையைப் பாவித்து அது போல் சம்பாதித்து கட்டிய வீடுகள் பல . இன்னும் ஒரு சிலர் அரசியலில் ஊழல் செய்து கட்டிய மாளிகைகளும் உண்டு . பாட்ட ன், பூட்டன் உழைத்து கட்டிய வீட்டில் உரிமை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள் .

அந்த நகரத்தில் அது போன்ற மாளிகைகளில் ஒன்று பிரபல கவர்ச்சி நடிகை இந்திராவினது. பல படங்களில் தன் அரை குறை உடலைக் காட்டி, தன் கண் பார்வையால் பலரை மயக்கி, ரசிகர்கள் விரும்பிய கோணங்களில் நடனம் ஆடி, அவள் சம்பாதித்த பணத்தில் விலை உயர்ந்த பகுதியில் அவள் கட்டிய மாளிகை “மந்திரா பவனம்”. அந்த மாளிகையின் போர்டிக்கோவில் விலை உயர்ந்த வெளி நாட்டுக் கார். அதை ஒட்டுவதற்கு ஒரு டிரைவர் . சமையலுக்கும் வீட்டுக்கும் ஒருவேலைக்காரி ராஜம்மா . இந்திராவின் திரைப்படம் படம் சார்ந்த நியமனங்களை கவனிக்க ஒரு மனேஜர்.. வீட்டுக்கு முன் ரோஜா தோட்டம். அதைக் கவனிக்க ஒரு தோட்டக்காரன் வேலுச்சாமி , வீட்டுக்கு ஒரு கூர்க்கா. அவனைத் தாண்டி தான் அந்த மாளிகைக்கு எவரும் செல்லலாம். அந்த பெரிய வீட்டில் மந்திராவும் அவளின் வேலைக்காரி ராஜம்மாவும் தான் சீவியம். ராஜம்மா ஒரு காலத்தில் மந்திராவோடு கிராமத்துக் கோவில் வீதியில் பூமாலை விற்றவள். ஒன்றாகப் படித்தவள் . மந்திராவின் பெற்றோர் கிராமத்தில் உள்ள தமது பூர்வீக மண் குடிசை வாழ்கையை உதறித் தள்ளி விட்டு தங்கள் மகளோடு அந்த வீட்டில் சொகுசான வாழ்வு வாழ மறுத்து விட்டார்கள். விசித்திரமான மனிதர்கள். அதனால் மந்திராவுக்கும் அவளின் பெற்றோருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பினால் அவர்களுக்கிடையே தொடர்பு இல்லை.

சில வருடங்களுக்கு முன் அவள் பெயர் இந்திரா. ஒரு சாதாரண கிராமத்து பெண். அவள் படித்தது கிராமத்து பாடசாலையில் எட்டாம் வகுப்புவரை. படிப்புக்கும் அவளுக்கும் வெகு தூரம். அந்தக் கிராமத்தில் அவள் தான் கவர்ச்சியான பெண் என்பதில் சந்தேகம் இல்லை . அவளின் நடையிலும், உதட்டைக் கடித்துச் சிரிக்கும் சிரிப்பிலும், . ஊடுருவும் பார்வையிலும்,. மெல்லிய இடையிலும், நீண்ட கூந்தலிலும் , அவள் பிறந்த கிராமத்தில் அவளின் அழகில் மயங்காத மைனர்கள் இல்லை. ஆனால் அவள் அவர்களை உதாசீனம் செய்து நடத்தினாள். அவள் கண்ட கனவு வேறு.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பூ மாலை கட்டி விற்றுப் பிழைத்து வந்தாள். அவளிடமே அனேக பக்தர்கள் பூமாலை வாங்கப் போவார்கள். பெற்றோர் அவளுக்கு வைத்த பெயர் இந்திரா . அவர்களுக்கு அவள் ஒரே மகள் . தாயும் தந்தையும் கூலி வேலைசெய்து குடும்பத்தை நடத்தினார்கள் . அவர்கள் வாழ்ந்தது களிமண் கொண்டு செய்யப்பட்ட சுவர்.கொண்ட ஓலைக் குடிசை. தென்னம் கிடுகினால் வேய்யப்பட்டக் கூரை . குடிசைக்குள் ஒரு படுக்கை அறையும் அது பக்கத்தில் சமையல் செய்ய ஒரு சிறுபகுதியும் கொண்டது குடிசை., வந்தவர்களை வரவேற்றுப் பேச ஒரு சிறு இடம் மட்டுமே, குடிசைக்குத் துணையாக வீட்டு வாசலில் எப்போதும் ஒரு கோலம் . சாணத்தால் மெழுகிய ஒரு திண்ணை . குடிசையின் கூரையை வேய்ந்து பல வருடங்கள் இருக்கும் . கிடுகை மாற்ற போதிய பணம் இந்திராவின் தந்தை முனுசாமியிடம் இருக்கவில்லை . அவனதும், அவனின் மனைவி முத்தம்மாவின் உழைப்பு அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமே போதுமானது .இந்திரா தன் உழைப்பில் வரும் காசை தன்னை சிங்காரிக்கப் பாவித்தாள் இந்திராவை மலையில் கல் உடைக்கும் வேலைக்கு வரும்படி ஒருவன் கேட்டு வந்தான். இந்திரா அதற்குச் சம்மதிக்கவில்லை,
அதிர்ஷ்டம் எப்போது ஒருவருக்கு வரும் என்று தெரியாது கோவிலிலுக்கு பக்தராக வந்த ஒரு சினிமா இயக்குனர் இந்திராவின் அழகைக் கண்டு தான் எடுக்க இருக்கும் “கிராமத்து அழகி” என்ற படத்தில் நடிக்கத் தகுந்த அழகி ஒருத்தி கிடைத்து விட்டாள் என்று தனக்குள் நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார் . இந்திராவின் பெயரை மந்திரா என மாற்றி ஒரு கவர்ச்சி பாத்திரத்தில் நடித்து, நடனமாட அவளை ஒப்பந்தம் செய்தார் . அவளும் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தாள் அதுவே அவளின் குறிக்கொளின் ஆரம்பம். முன்பு நடனம் ஆடத் தெரியாத அவளுக்குக் கவர்ச்சி நடனம் ஆட நடன ஆசிரியை கற்றுக் கொடுத்தாள் , முதல் படத்தில் அவளின் நடனம் அரங்கேறியது அந்த படம் எதிர்பாராத வசூலைக் கொடுத்தது .பின் அடுத்து அடுத்து படங்களுக்கு ஒப்பந்தங்கள் .

சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மை ஒளிந்து கிடக்கிறது. அதை மாடி வீடுகளிளும் சிறு குடிசைகளிலும் . நிலவும் பெரிய பொருளாதார வேறுபாடுகளில் பார்க்க முடியும்.

*****
.மந்திரா பவனத்தில் தோட்டக்காரனாக வேலை செய்யும் வேலுச்சாமி தன் குடும்பத்தோடு வசிப்பது நகரத்தின் வாய்க்கால் கரை ஓரமுள்ள சேரிப் பகுதியில் உள்ள குடிசை ஒன்றில். அங்கிருந்து அவன் தினமும் இரண்டு கி.மீ தூரம் மந்திர பவனத்துக்கு நடந்து போக வேண்டும் . அவனுக்கு வீட்டுக்கு வெளியே மட்டுமே வேலை . வீட்டுக்குள் உள்ள அறைகளைச் சுத்தப்படுத்துவது, வேலைக்காரி ராஜம்மாவின் பொறுப்பு. அதனால் மந்திராபவனத்தின் உள் அழகைப் பார்த்து இரசிக்க வேலுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
****
அன்று படப் பிடிப்பு நிமித்தம் இரு நாட்கள் மந்திரா கேரளாவுக்கு சென்று விட்டாள். அந்த நாட்களில் வேலைக்காரி ராஜம்மா பொறுப்பில் வீடு இருந்தது. அந்த நாட்களில் ராஜம்மாவோடு கெஞ்சிக் கூத்தாடி வீட்டுக்குள் சென்று பார்க்கத் தன்னை விடும் படி வேலு கேட்டான். அவளும் அவனின் விருப்பப்படி மூன்று மணித்தியாலம் மந்திரா பவனத்தைத் தரிசித்து வர விட்டாள்.
தோட்டக்காரன் வேலுச்சாமி மந்திராவின் படுக்கை அறை, அலங்கார அறை, குளியல் அறை, பூஜை அறை, உணவும் உண்ணும் அறை ,. யாரவது விருந்தினர்கள் வந்தால் தங்கும் அறை, அழகாக நூல்கள் அடுக்கிய நூலகம். தொலைக்காட்சி உள்ள சிறு அரங்கு. ஆகியவற்றைக் கண்டு அவன் ஆச்சரியப்பட்டான். தனது ஓலைகுடிசையிலும் பார்க்கப் பல மடங்கு பெரிதாக இருக்கும் இந்த மாளிகை என்று நினைத்தான் மந்திரா பவனம் அவனுக்கு சொர்க்கமாகத் தெரிந்தது ..
:”இந்த மாளிகையைக் கட்டி முடிக்க எவ்வளவு செலவாகி இருக்கும் ராஜம்மா”? என்ற கேள்வியை வேலு கேட்டான்
“கோடிக்கணக்கில் இருக்கும் என நினைக்கிறேன் மந்திரா அம்மா தன் வருமானத்தையும் முதலீடுகளையும் எனக்குச் சொல்வது கிடையாது. நானும் கேட்பதில்லை . வீட்டைக் கவனித்துக் கொள்ள எனக்கு நல்ல சம்பளம் தருகிறா” ராஜம்மா சொன்னாள்.
“இவ்வளவு நூல்கள் இருக்கிறதே அவைகளை அவ வாசித்தாவா”?
“மந்திரா அம்மா புத்தகம் வசித்ததை நான் கண்டதில்லை வேலி”
.விலை உயர்ந்த மரத் தளபாடங்கள். பீரோக்கள்

இரு மடிக் கணனிகள் பல விதமான தொழில் நுட்பக் கருவிகள். அவைகளைப் பார்த்து வேலுச்சாமி ராஜம்மாவிடம் கேட்டான்,

“ என்ன ராஜம்மா எங்கள் எஜமாட்டிகு கணினி எல்லாம் பாவிக்கத் தெரியுமா” “? ‘
“அதை என்னிடம் கேளாதே வேலு. அவ கணனி பாவித்ததை நான் கண்டதில்லை மேலும் அவவுக்கு நேரமும் இல்லை இதெல்லாம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு தனக்கு கணனி பாவிக்கத் தெரியும் என்று காட்டத் தான் என நினைக்ககிறன்” ராஜம்மா சொன்னாள்.

வேலுச்சாமி தனக்குள் சிரித்துக் கொண்டான் . பணம் இருந்தால் அது பத்தும் செய்யும் என்றது அவன் மனம்

****

வேலுச்சாமி வீட்டுக்குத் திரும்பியதும் தன் மனைவி அலமேலுவுக்கு மந்திரா பவன வீட்டுக்குள் தான் கண்ட காட்சியை விவரித்தான்

“ அலமேலு அந்த மாளிகையோடு ஒப்பிடும் போது எங்கள் மண்குடிசை கால் தூசி
.மந்திரா அம்மா பிறந்தது கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் என்று ராஜம்மா சொல்லிக் கேள்விப் பட்டேன் அவவின் பெற்றோர் கூலி வேலை செய்து எங்களைப் போல் குடிசையில் வாழ்பவர்களாம்” வேலு சொன்னான் .

“அப்படியா அப்ப ஏன் அவர்கள் இங்க வந்து மகளோடு சௌகரியமாக பாவிக்கலாமே எதற்காக அந்த ஓலை குடிசையில் அவர்கள் சீவிக்க வேண்டும்”? அலமேலு கேட்டாள்.

“மந்திரா அம்மாவின் பெற்றோர் சுயமரியாதை உள்ளவர்கள் என்று எனக்கு ராஜம்மா சொன்னாள், அவளுக்கு அவர்களைக் கிராமத்தில் நன்கு தெரியும். மகளை நம்பி வாழ அவர்கள் விரும்பவில்லை . எங்கள் அம்மா கவர்ச்சியாக நடிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை”

“ மந்திரா அம்மா அவர்களைப் போய் கிராமத்தில் பார்ப்பதில்லையா”?

“இல்லை. பணம் மட்டும் அவர்களுக்கு அனுப்புவா. ஆனால் அதை அவர்கள் பணத்தை திருப்பி அனுப்பி விடுவார்கள். தனக்கு சொல்லி கவலைப் படுவா என்று ராஜம்மா எனக்குச் சொன்னாள்.
“மந்திரா அம்மாவின் பெற்றோர்கள் பிடிவாதக்காரர்கள் அந்த ஓலைக். குடிசையில் இந்த வயதில் வாழ்ந்து என்ன சந்தோசம் கண்டார்கள்”?
:
“அப்படி சொல்லாதே வேலு . அந்த குடிசை வாழ்கையில் அவர்களுக்கு ஒரு தனி இன்பம் இருக்கு அதுவும் கிராமத்துச் சூழல் வேறு . ஊர் சனங்களோடு திண்ணையில் இருந்து பேசுவதில் இருக்கும் சுகம் எவ்வளவு தெரியுமா? குடிசை அடுப்பில் மண் பானையில் சமைப்பதுக்கும் மாடி வீடு பிரசர் குக்கரில் சமைப்பதுக்கும் சுவையில் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா”?

“இருக்கலாம் ஆனால் பெற்றோரின் அன்பு கிடைக்காமல் அந்த பெரிய மாளிகையில் தனித்து வாழ வேண்டும் என்று மந்திரா அம்மாவுக்குத் தலையில் எழுதி வைத்திருக்கு போல எனக்குத் தெரிகிறது" வேலி சொன்னான்.

“வேலி இது பற்றி நாம் வேறு எவரோடும் பேசினால் நாம் பொறாமையில் பேசுகிறோம் என்பார்கள் . அதனால் நாங்கள் பேசுவது எமக்குள் இருகட்டும் “அலமேலு சொன்னாள்.
“ என்னோடு மந்திரா அம்மா அதிகம் பேசுவது கிடையாது. என் சம்பளத்தை அவவின் மனேஜர் தருவார் . அவ முகத்தில் எப்போதும் கவலையான தோற்றம் அலமேலு. எங்கள் குடிசையில் இருக்கும் சந்தோசம் அந்த மாளிகையில் இருக்குமோ என்று எனக்கு தெரியாது”.

“பெற்றோர் இருந்தும் இல்லாத தனித்த மளிகை வாழ்க்கை, அதுவே காரரணமாக இருக்கும்” அலமேலு சொன்னாள்

***

அன்று காலை வேலு வேலைக்கு மந்திரா பவனத்துக்குப் போன போது வீட்டுக்கு முன் ஒரே கூட்டம். ராஜம்மா வீட்டுக்கு வெளியே கவலையோடு அழுத படி நின்றாள். மூன்று போலீஸ் வாகனங்கள் வேறு நின்றன
அதோடு கமராக்களோடு செய்தி நிருபர்கள் கூட்டம்.
வேலுக்கு மந்திரா பவனத்தில் ஏதோ நடக்கக் கூடாதது ஓன்று நடந்து விட்டது என்று உணர அதிக நேரம் எடுக்கவில்லை அவனை வீட்டுக்குள் போக போலீஸ் விடவில்லை. ராஜம்மா கலங்கிய கண்களுடன் வீட்டுக்கு வெளியே நின்றாள்

“என்ன ராஜம்மா வீட்டுக்கு முன் இந்த கூட்டம்? ஏன் போலீஸ் வேறு நிற்கிறது? எதாவது களவு வீட்டில் நடந்ததா “? வேலு கேட்டான்.”
“இல்லை வேலு நான் இரு நாட்கள் நான் என் கிராமத்துக்குப் போய் திரும்பி வந்த போது மந்திரா அம்மா விஷம் குடித்து அவவுடைய அறையில் இறந்து கிடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவவுடைய கட்டிலுக்கு அருகே ஒரு சிறு போத்தலில் கிடந்தது. ஒரு சிறு பேப்பரில் “ நான் என் பெற்றோருக்கு வேண்டப் படாதவள் .நான் வாழ்ந்து எவ்வளவு பணம் இருந்தும் பிரயோசனம் இல்லை”: என்று எழுதி இருந்தது நான் உடனே பயத்தில் போலீசுக்கு போன் செய்தேன் போலீஸ் வந்து விசாரணை செய்யுது”.

“ நீ கிராமத்தில் இருக்கும் அம்மாவின் பெற்றோருக்கு அறிவித்தாயா”?

“அதை போலீஸ் செய்யும் அவர்கள் மந்திரா அம்மாவின் உடலைப் பார்க்க வருவார்களோ எனக்குத் தெரியாது”.

“உனக்கு அவ தற்கொலை செய்த காரணம் தெரியுமா? எதாவது காதலில் தோழ்வியா ?

“இல்லை. பல தடவைகள் அவ பெற்றோருக்கு அனுப்பிய பணம் திரும்பி வந்தது அவவுக்கு பெரும் கவலை. எனக்கு சொல்லிக் குறை பட்டா இவ்வளவு பெரிய வீடு இருந்தேன்ன தான் தனித்துப் போனதாக அம்மா அடிக்கடி எனக்கு சொல்லுவா தன் அம்மாவும் அப்பாவும் தான் நடிகையானதும் தன்னை கை விட்டு விட்டார்கள் என்று எனக்குச் சொல்லி அழுதது எனக்கு இன்றும் நினைவு இருக்கு. தனிமை தான் காரணமாக இருக்கலாம்,அதை அவ பேப்பரில் சுருக்கமாக எழுதிவைத்து விட்டு விஷம் குடித்திருக்கிறா. அவவின் சொத்து மேல் ஆசைப் பட்டு சிலர் அம்மாவை காதலிப்பதாக நடித்தார்கள், அவ ஒருவரையும் நம்பவில்லை ” என்றாள். ராஜம்மா.

“அப்ப இந்த பெரிய மாளிகை “?

“ மந்திரா அம்மா இறக்க முன் இந்த வீட்டை ஒரு அனாதை பிள்ளைகள் நிலையம் ஒன்றுக்கு எழுதி வைத்து விட்டா என்றும் . அதோடு என் பெயரில் ஐந்து லட்சம் பணம் எழுதி வைத்து விட்டதாக மந்திரா அம்மாவின் குடும்ப வக்கீல். எனக்குச் சொன்னார்” .

(யாவும் புனைவு )

எழுதியவர் : Pon Kulendiren (8-Jun-19, 7:35 pm)
Tanglish : man kudisai
பார்வை : 255

மேலே