ஐ பேட்

அம்மா அம்மா ..அம்ம்மாமா
ஏன்டா உயிர் போறமாதிரிகத்தரே.
அம்மா என்னோட ஜபேடை காணோம்மா.
எங்கையாவது வைச்சு இருப்பே போய் பாருடா.
அடுப்பில் வேலை யாய் இருந்த அம்மா ஜானகி அவனை துரத்தினாள்.
நேரம் ஓடியது.
டேய் இன்னுமா ஐ பேடை தேடிகிட்டு இருக்கே. ஸ்கூலுக்கு நேரம் ஆயிடுச்சு. குளிக்கபோடா. சத்தம் போட்டாள் ஜானகி.
அம்மா நான் இன்னும் ரெஸ்ட் ரூம் போகலை. அவசரமா இருக்கும்மா.
போகவேண்டியதுதானே ஆறு வயது மகனைவிரட்டினாள் ஜானகி.
ரெஸ்ட் ரூம் போன பாட்டி இன்னும் வரலைம்மா.
என்னாது. இன்னும் வரலையா?என்னங்க என்னங்க கத்திகொண்டே ஹாலுக்கு வந்தாள் ஜானகி.
பேப்பர் படித்து கொண்டு இருந்த சத்தியா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்திகிட்டுவர்ரே காலையிலே.
என்ன கத்தி கிட்டு வர்ரேனா.?நானேபதறிபோயி ஓடுயாரேன். கத்திகிட்டுவர்ரே ன்னு சொல்றீங்க.. கொஞ்ச கூட பொருப்பேஇல்லாம எப்படிங்க இருக்க முடியுது உங்களாலே.
அப்பா ஸ்கூலுக்கு நேரமாகுதுப்பா. பாத்ரூம் போன பாட்டி இன்னும் வரலைப்பா.
என்னாது பாட்டி இன்னும் வரலையா?
ஆமாங்க அவங்க போயி அரைமணி நேரம் ஆயிடுச்சிங்க.
போயி அரைமணி நேரம் ஆயிடிச்சா?
அடச்சீ பாத்ரூம்குள்ள போயி அரைமணி நேரம் ஆயிடுச்சிங்க.
அம்மா அம்மா என கத்திய படியே பாத்ரூம் கதவை படபடவென்று தட்டினார் சத்தியா.
உள்ளிருந்து எந்தவித பதிலும் இல்லாமல் போகவே வேகமாக வெளியே ஓடினர் சத்தியா.
எதிர்வீடு எத்திராஜையும்பக்கத்து வீடுபார்த்திபனனையும்சத்தம் போட்டு அழைத்தார்.
என்ன ஆச்சு எனகேட்டு ஓடி வந்தார்கள்.
எழபத்தொண்பது வயசு எங்க அம்மா பாத்ரூம் போயி அரைமணி நேரம் மேல ஆச்சு. கதவை தட்டி பார்த்துட்டேன். மூச்சு பேச்சு இல்லை.
கையும் ஓடலே காலும் ஓடலே. கதறினார் சத்தியா.
ஒருவர் கடப்பாரை யோடு வர இன்னொருவர் உலக்கையோடு வர கதவை உடைக்கும் என்னத்தோடு பாத்ரூமை நெருங்கிய சமயத்தில்!டக் கென்று பாத்ரூம் கதவு திறந்தது. உள்ளிருந்து எழுபத்தொண்பது வயது பாட்டி காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு ஐபேடில் பாட்டு கேட்டு கொண்டு வெளியே வந்தார்.
எல்லோரும் திகைத்து நிற்க நல்லா பயமுருத்திட்டீங்கசார் .அவங்கள பாருங்க ஒன்னும் நடக்காது மாதிரி ஐபேட்ல பாட்டு கேட்டு கிட்டு போறாங்க.
அப்பா என்னோட ஐபேடை காணோம்னு தேடிகிட்டு இருந்தேம்பா.
நல்ல குடும்ப மய்யா தலையில் அடித்து க் கொண்டு இருவரும் வெளியேறினர்.
ஜானகி சூடா ஒரு காபி போட்டு குடுக்கிறியா? அமளி துமளி எதுவும் அறியாத பாட்டி காபி குடிக்க தயாராக உட்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தார்

எழுதியவர் : (9-Jun-19, 4:31 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : ai bat
பார்வை : 79

மேலே