அம்மா

இவளின் துளி நான்..!!
இவளின் துணை நான்..!!
இவளின் தலைக்கணம் நான்..!!
இவளின் தாய்மடி நான்..!!
இவளின்றி நான் இல்லை..!!
நானினறி இவள் இல்லை..!!

ருசி அறியா வயது முதல்..
பசியறிந்து பால் தந்தாள்..
வசைமொழிகள் கேட்டாலும்
பசைபோல பாசம் கொண்டாள்..
நேசமுள்ள பாசக்காரி..
வேஷமில்லா ரோஷக்காரி..
த்வேஷம் என்பதே அறியாத
கிலேசம் அகற்றும் வாசக்காரி..
அடுப்படியா கதியென்பாள்..
அடுப்படிவர துதிசெய்வாள்..
வேண்டுமென்றே விதிசெய்வேன்..
அடுப்படி அருகேயும் மிதிகொள்ளேன்..
கள்ளமில்ல உள்ளமிவள்..
கார்முகில் போல் உள்ள மகள்..
எல்லையில்லா இவள் அன்பின்
செல்லமகள் நான் தானே..
மனம் நெகிழம் பூமகளின்
குணப்பிரபவம் நான் தானே..!!

ருசி அறியா தேவமகள்
பசி என சொல்ல கேட்டதில்லை..
பசியென்று இவள் சொன்னால்..
பசைக்கொண்டு எழுந்திடுவேன்..
விசைவேகம் அறியாது..
திசைதிசையாய் சென்றிடுவேன்..
இவள் பசி தாகம் போக்கத்தான்
பூலோகம் பிறந்தேனே..
என் சுவாசம் உள்ளவரை இவளை நெஞ்சில் சுமப்பேனே..
இரயிலில் ஜன்னலோரம்..
என் விழியின் வேட்டையாகும்..
யாருக்கும் தாராது பத்திரமாய் பற்றிடுவேன்..
இவளோடு பயணித்தால் மட்டும் மனம் தளர்ந்து மடி கொடுப்பேன்..
.
.
.
ஆம் என் வேடிக்கை மடியை இவள் கேட்காமல் தந்திடுவேன்..
எனை நாடி வளர்த்த மகள் என்றும் வாழ வணங்கிடுவேன்.

எழுதியவர் : பகவதி லட்சுமி (7-Jun-19, 11:01 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : amma
பார்வை : 564

மேலே