கூன்முதுகு5 ஒளியின் திசைவேகம்

"நீ சின்ன வயசுல feel பன்னிருக்க , வேகமா ஓடனுமுனு . இப்ப அதுக்கு தயாரா " என்று சொன்னபடி ஐன்ஸ்டீன் தனது பரட்டை தலையை வருடிக்கொண்டார். வியப்பில் மீளாத ராஜன் என்ன சொல்வது என்று அறியாமல் "அம்மா " என்றான். ஐன்ஸ்டீன் மெல்லிய புன்னகையுடன் " நீ பேசுவது உங்க அம்மாவுக்கு கேக்காது நாம் காற்று உள்ள ஒரு வெற்றிடத்தில் இருக்கிறோம் " காற்று இருந்தால் அது எப்படி வெற்றிடமாகும்" என்றான் ராஜன் . மீண்டும் ஒரு புன்னகை செய்து "அதை நீ கண்டு பிடி" என்று சொன்னபடி சட்டை
பையில் இருந்து ஒரு வட்ட வடிவமான ஒரு பளிங்கி கல்லு போன்ற ஒன்றை எடுத்தார் "சராசரி வாழ்கை வாழ போறியா இல்ல அர்த்தமுள்ள வாழ்கை வாழ போறியா " என்று சொல்லி கல்லை முன்னாள் நீட்டினார். நம்பலாம் வேண்டாமா என்ற படி கல்லின் அருகே அவன் கை சென்று கொண்டிருந்தது.

தொடரும் ........

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (7-Jun-19, 1:20 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 33

மேலே