சாய்மானக் கதிரை Easy Chair

முன்னுரை
நான்கு கால்களை உடைய இருக்கையை நாற்சாலி என்று தூயத்தமிழில் சொல்வதுண்டு. ஆனால் அலுமாரி போல் கதிரை என்ற சொல் ஒரு போர்த்துக்கேய சொல். இந்த நாற்சாலியை அடைந்து, ஆதிக்கம் செலுத்த அரசியல்lவாதிகள் பல வழிகளைக் கையால்வார்கள். ஆனால் ஒரு காலத்தில் நீர்வேலி ஊரில் கணித ஆசிரியராக இருந்து பாவித்த பர்மா தேக்கினால் செய்த சாய்மானக் கதிரையின் வயது இரு நூறுக்கு மேல் இருக்கும் . அதன் கதை தான் இது
****

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி ஈற்றுப் பெயர் கொண்டதாக
அச்சுவேலி, கட்டைவேலி, திருநெல்வேலி, சங்குவேலி முதலான ஊர்கள் பல உண்டு. அந்த ஊர்களின் வரிசையில் வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழிலுக்கு பிரசித்தமான ஊர்களில நீர்வேலியும் ஒன்று . இந்த ஊரின் எல்லைகளாகக் கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும்மேற்கே அச்செழுமை, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் 15கிமீ தூரத்தில். கோப்பையைத் தாண்டியவுடன் வரும் ஊர் இது. அநேகர் வீடுகளில் வைபவங்களுக்கு வீட்டு வாசலில் வாழை கட்ட இந்த ஊருக்குச் சென்று வாழை மரம் வாங்கி வருவது மரபு.

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார். இந்த ஊரில் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று. அந்த கோவில் தர்மாகர்த்தா ஒருவரின் வழி வந்தவர் கந்தையா மாஸ்டர் .அவரின் தந்தை சுப்பையா மலேசியாவில் நில அளவையாளராக வேலை செய்தவர் 1890 இல் அவர் ஊருக்குத் திரும்பும் போது கொண்டு வந்த மரத்தளபாடங்கள் பர்மா தேக்கினால் செய்யப் பட்ட சாய்மானக் கதிரையும் ஒன்று. அந்த கதிரையில் ஒரு தனி விசேஷம் என் வென்றால் கை பிடிக்குக் கீழ் மறைந்து இருக்கும் இரு தடிகளை நீட்டி விட்டால் வசதியாக இரு கால்களையும் அதன் மேல் நீட்டி வைத்து உறங்கலாம்.
மலேசியன் பென்சனியர் சுப்பையரின் மறைவுக்குப் பின் அக்கதிரையும் ஒரு அலுமாரியும் சுப்பையரின் ஒரே மகன் கந்தையரின் சொத்தாயிற்று . கந்தையர் திருமணமாகி மகன் செல்லையா பிறந்த பின் சில வருடங்களில் இறந்தவள் அவரின் மனைவி . செல்லையாவை வளர்த்தது
கந்தையரின் தாய் இராசம்மா.

அத்தியார் அருணாசலம் என்பவரால் நீர்வேலியில் 1920இல் ஆரம்பித்த அத்தியர் கல்லூரியில், கணித ஆசிரியராக இருந்தவர் கந்தையா மாஸ்டர், அவரிடம் படித்துப் பல துறைகளில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் பலர். அவரின் மகன் செல்லையா தகப்பனைப் போல் கணிதத்தில் கெட்டிக்காரன். மின் பொருள் பொறியியலாளனாக படித்து அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து, அமெரிக்கா சென்ற செல்லையா, தந்தையின் மரணத்துக்கு மட்டுமே ஒரு தடவை ஊருக்குத் திரும்பி வந்து தன் பூர்வீக வீட்டை இனத்தவர் ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்துச் சென்றார் . போகும் போது வீட்டு சாய்மானக் கதிரை உட்பட மரத்தளபாடங்களை தனது தந்தையின் அறையில் வைத்துப் பூட்டி அதன் சாவியை எடுத்துச் சென்றார்.

செல்லையா மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் தன்னோடு வேலை செய்த ஜூலியாவை காதலித்து திருமணம் செய்து சியடலில் செட்டில் ஆகி விட்டார் . செல்லையாவுக்கும் ஜூலியாவுக்கும் பிறந்தவன் தனுஷ் . அவனும் கணிதத்தில் கெட்டிக்காரன்.

****

அன்று ஊரிலிருந்து செல்லையரின் தாய்மாமனின் மருமகன் ரத்தினத்திடம் இருந்து வந்திருந்த கடிதத்தைச் செல்லையா பிரித்து வாசித்த போது அக் கடிதத்தில் செல்லையா வாடகைக்குக் கொடுத்து இருந்த பூர்வீக வீட்டைத் தான் வாங்க விருப்புவதாக ரத்தினம் தெரிவித்து எழுதி இருந்தார்
செல்லையா அமெரிக்க சிட்டிசன் என்ற படியால் இனி தான் தன் ஊர் வீட்டில் போய் வாழ வெண்டி வராது எனத் தெரிந்து வீட்டை வாடகைக்கு இருப்பவருக்கு விற்க முடிவு செய்து, குடும்பத்தோடு செல்லையா நீர்வேலிக்குப் போகத் திட்டமிட்டார்
அதை அறிந்த அவரின் மகன் தினேஷ் சொன்னான் ” டடி நானும் உங்களோடு உங்கள் ஊருக்கு வந்து நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க எனக்கு விருப்பமாக இருக்கு.இனி அந்த ஊருக்குப் போக எனக்குக் கிடைக்குமோ தெரியாது அப்பப்பா படிப்பித்த ஸ்கூலையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது”

“சரி நீயும் உன் அம்மாவும் என்னோடு வாருங்கள் இலங்கையைப் பார்த்ததாக இருக்கும் என்றார் செல்லையா.

****

தினேஷ் தகப்பனின் நீர்வேலி வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துப் பிரமித்து நின்றான். வீட்டுத் தோட்டத்தில் சுவையான பல ரக மாமரங்கள் வாழைமரங்கள் அவனைக் கவர்ந்தது. அந்த சூழல் அவனுக்கு வெகுவாக பிடித்துக் கொண்டது. தன் தந்தை படிப்பித்த கல்லூரிக்குச் செல்லையா மகனை அழைத்துச் சென்றார் . அவரின் ஆரம்ப கல்வியும் அதே கல்லூரியிலிருந்தது என மகனுக்குச் சொன்னார். தங்கள் குடும்பத்தின் நன் கொடையாகக் கல்லூரிக்கு இரு லப் டாப் கணினிகளை கொடுத்தார். அந்த கல்லூரியில் செல்லையாவின் தந்தை படிப்பித்த மாணவன் ஒருவரே கல்லூரி பிரின்சிபாலாக இருந்தார். அவர் செல்லையாவை அடையாளம் கண்டு கொண்டார் .
“கந்தையா மாஸ்டர் அவரின் வீட்டில் இருந்த சாய்மானக் கதிரையில் அமர்ந்த வாறு கணித பாடம் படிக்க வீட்டுக்கு டியூஷனுக்கு போகும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார் .
உம்மை போல் போல் இந்த கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இரு மாணவர்கள் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அவர்கள் கல்லூரியில் விருத்திக்கு நிதி உதவி செய்வதாக “ பிரின்சிபால் சொன்னார்.
கந்தையரின் படுக்கை அறையை செல்லையா திறந்து பார்த்த பொது மரத்தளபாடங்கள் எல்லாம் தூசி படர்ந்து இருந்தது . . .
அப்பப்பாவின் அறைக்குள் இருந்த அவரின் திருமணப் படம் தினேசை கவர்ந்தது. செல்லையர்
சாய்மானக் கதிரையை தன் மனைவிக்கும் மகனுக்கும் காட்டி
” என் அப்பா தன் பெரும் பகுதி நேரத்தை இந்த சாய்மானக் கதிரையில் இருந்த படியே செலவு செய்வார். இந்தக் கதிரையில் படுத்து இருந்து இந்திய ஹிந்து பேப்பர் வாசிப்பார். மாணவர்களின் பரீட்சை பேப்பர் திருத்துவார். ரேடியோ கேட்பார். சுருட்டு குடிப்பார். என் அம்மா கொண்டு வந்து கொடுக்கும் கோப்பியை வாங்கிக் குடிப்பார். இந்த கதிரையில் உள்ள கையிறு தோட்டத்தில் உள்ள மணிகளோடு இணைந்ததுள்ளது அதை இழுந்து தோட்டத்தில் உள்ள சிறு மணிகளை அடித்து அணில்கள் மாம்பழங்களை உண்ணாது துரத்துவார் சில நேரம் இந்த கதிரையில் மடித்து இருக்கும் தடிகளை நீட்டி தன் கால்களை அதில் வைத்து தூங்கி விடுவார் . அந்த கதிரை தான் அவர் உலக்ம்”: என்றார்.

“இந்த கதிரையை இந்த ஊரிலையா அப்பப்பா வாங்கினவர் டடி”

“இல்லை இதை என் அப்பா வாங்கவில்லை. என் தாத்தா சுப்பையர் மலேசியாவில் வேலை செய்து ரிட்டையராகி ஊர் திரும்பும்போது பர்மா தேக்கு மரத்தினால் செய்த அந்த அலுமாரியும் இந்த சாய்மானக் கதிரையையும் ஊருக்கு கொண்டு வந்தவர். இது விலை உயர்ந்த தேக்கு மரத்தால் செய்யப் பட்டது இந்த மாதிரி தேக்கு மரத்தில் செய்த கதிரையும் அலுமாரியும் இங்கை வாங்க முடியாது”

“ இந்தக் கதிரைக்கு குஷன் இல்லையே டடி” தனுஷ் சொன்னான்
“இருக்கும் பகுதி பிரம்பினால் பின்னி இருக்கிறது. மூட்டைப் பூச்சி இருந்ததால் இரண்டு தடவை பின்ன வேண்டியிருந்தது ”.

“எப்பாவாவது இந்த கதிரையை அப்பப்பா போலிஷ் செய்தாரா டடி”?

“இல்லை அவருக்கு அதில் ஒன்றும் செய்ய விரும்பமில்லை”

“டடி நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா”?

“ கேள் தினேஷ்”.

“இந்த அலுமாரியைம் சாய்மானக் கதிரையையும் என்ன செய்யப்போகுறீர்கள்”?

“இரண்டையும் இந்த வீடு வாங்குபவருக்கு இனாமாகக் கொடுக்க யோசித்து இருக்கிறேன். என் அப்பா நினைவாக இந்த வீட்டில் இவை இரண்டும் தொடர்ந்து இருக்கட்டும்”.

”அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் டடி. இந்த இரண்டையும் என்ன செலவானாலும் எங்கள் சீராட்டல் வீட்டுக்கு கொண்டு போவோம். அப்பப்பா இந்த சாய்மானக் கதிரையிலிருந்து டியூஷன் சொல்லிக் கொடுத்தவர் நானும் அவர் மாதிரி இந்த கதிரையிலிருந்து மத்ஸ் செய்ய விரும்புகிறேன்”.

“தினேஷ் நீ உண்மையில் இந்த கதிரையை விரும்புகிறாயா “? ஜூலியா மகனைக் கேட்டாள்.

“யெஸ் மம்மி இது என் டடியின் பாட்டனார் மலேசியாவில் வாங்கினது அப்பப்பா பாவித்து அதன் பின் . அப்பாவும் பாவித்து . இனி நான் பாவிக்க விரும்புகிறேன். எனக்குப் பின் என் பிள்ளைகள் பாவிக்க வேண்டும் அவர்களுக்குப் பின் அவர்களின் சந்ததிகள் பாவிக்க வேண்டும். இது ஒரு செண்டிமெண்டல்
பெறுமதி உள்ள பொருள் . விலை மதிக்க முடியாதது. வாருங்கால தலலைமுறைகளோடு இதற்குத் தொடர்பு இருக்கட்டும் டடி” என்றான் தனுஷ்/.
தங்கள் மகன் சொன்னதைக் கேட்டு செல்லையாவும் ஜூலியாவும் வாயடைத்துப் போய் நின்றனர்.
“தனுஷ் உன் விருப்பப் படியே செய்கிறேன்” என்றார் செல்லையா
தனுஷ் அவரை கட்டிப்பிடித்து “தங்கியூ டடி :என்று சொல்லி அவர் கன்னத்தில் .முத்தம் கொடுத்தான்.

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (2-Jun-19, 5:03 pm)
பார்வை : 90

மேலே