குறுநாவல் 1 கூன்முதுகு

"அவன் எங்க" என்ற படி வெளியில் வந்தாள் தமிழ் பாவை " அதோ சைக்கிள் ஜெயின் மாட்டிகிட்டு இருக்கான்" என்று பதில் கூறினார்
தமிழ் பாவையின் கணவர் மாசிலாமணி. வாஞ்சையா கோவமா என்று தெரியாமல் கூப்பிட்டாள் "டேய் இங்க வாடா வெயிலுள்ள ஜெயின் மாட்டி என்ன பண்ண போற இங்க வந்து tea யை குடிச்சிட்டு வேகமா கிளம்பு மந்திரியா பாத்துட்டு வருவோம் " என்று சொல்லி tea டம்ப்ளரை வச்சிட்டு சமயலறைக்குள் உள்ளே சென்றாள். வலது காலை தாங்கி தாங்கி நடந்து வந்து tea யை எடுத்து குடித்தான் ராஜன்.
மந்திரியின் வீட்டை பற்றி சொல்லவா வேண்டும் ? அவ்வளவு பெரிது சாதாரண மனிதர்கள் யார் சென்றாலும் அந்த வீட்டை பார்த்து தாழ்வு மனப்பான்மை வந்து விடும் . எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். மந்திரி ராமபிரபு அந்த அளவுக்கு ஆளுமை நிறைந்தவர் .
மாசிலாமணி குடும்பம் மந்திரி வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ராமபிரபு உதவியாளர் வெங்கடேசன் மாசிலாமணி அருகே ஓடி வந்து
"மாசிலாமணி தலைவர் சாப்டு வெளியில வருவாரு உன் புள்ளய ஒழுங்கா பவியம்மா நிக்க சொல்லு மாசிலாமணி " என்று மீண்டும் பேரை சொன்னான் மாசிலாமணிக்கு 49 வயதை கடக்க போகிறது வெங்கடேசனுக்கு 27 வயது தான் ஆக போகிறது.
பெரிய மீசை பெரிய தொப்பை உடனும் அவருக்கான இருக்கையில் வந்து அமர்ந்தார் மந்திரி ராமபிரபு மெல்ல அவர் அருகை நடந்து சென்றான் ராஜன் ..




தொடரும்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (2-Jun-19, 3:14 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 98

மேலே