புத்தரின் கண்ணீர்த் துளி
இலங்கைத் தீவினைக் கண்டவர்கள் .
இந்து சமுத்திரத்தின் முத்து என்பர்.
தப்பரபானா என்றனர் கிரேக்கர்.
தாமரபரணி என்றார் அகஸ்தியர்.
இராவணன் ஆண்ட சொர்க்க பூமியது.
இயக்கர் நாகர் பூர்வ குடிகள் என்பர்.
கனிவளம் நிறைந்த நிலம் என்பர்,
கண்டவர் கவரும் நாடு என்பர்.
வரலாறு உள்ள தீவென்பர்.
வாழும் இனங்கள் பலர் என்பர்.
சிங்கள இனமே முதலினம் என்பர்.
சிறிதும் வரலாறு தெரியாத சிங்ளவர்..
தமிழுக்கு முன்பே சிங்களம் என்பர்.
மொழியின் வரலாறு தெரியாதவர்கள்.
புத்தமே தீவின் முதல் மதம் என்பர்.
புத்தி இல்லாத சிங்கள மக்களின் பேச்சது.
புத்தர் போதித்தது அஹிம்சை, காருண்ணியம்,
புத்தியற்ற சிங்களவர் செய்வது ஹிம்சை, காடைத்தனம்.
காவி உடையில் கயவர்கள்.
காக்கும் அவர்களைச் சிங்கள அரசு
மொட்டைத் தலையுடன் குருமார்,
மொபைல் போன் அவர்கள் கையில்.
அரசியலே புத்த குருமார் குறி
அளவற்ற அவர்கள் ஆசைகளை நீ அறி
உண்ணா விரதம் என்ற போர்வை
ஊர் மக்களை ஏமாற்ற அவசியம் தேவை
இனக் கலவரத்தில் இன்பம் தேடும்
இரக்கமற்ற புத்த குருமார்.
இவர்களைப் பார்த்து புத்தரின் கண்ணீர்,
இலங்கைத் தீவின் உருவில் துளியாக !
****