அவள்

குறையென்று சிறிதுமில்லா ஓர் கன்னியைப்
படைத்திட நினைத்த நான்முகன் முதலில்
சித்திரமாய் வரைந்தனாம் பூம் பாவையை
வரைய வரைய தெரிந்த குறையெலாம்
ஒவ்வொன்றாய்த் திருத்திய பின் முடிவில்
குறையேதும் இல்லா சித்திரம் படைத்தான்
kundhumaniyalavum குறை அதில் காணாப்பின்
திருப்தி அடைந்த பிரமன் தீட்டிய
சித்திரபாவைக்கு உயிர்தந்து மண்ணில்
உலாவிட அனுப்பிவைத்தானாம் என்று
நினைத்திட தோன்றியது எனக்கு என்முன்
அன்னம்போல் நடந்துவந்த அந்த பேரழகியைப்
பார்த்தபோது , என்னை இவள் காதலித்தால்
இனி சுவர்க்கம் என்று எதைத்தேடி
நான் போகவேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Jun-19, 2:44 pm)
Tanglish : aval
பார்வை : 297

மேலே