புதையல் 8

இருவரும் தேடி காட்டின் வழியே சென்று பார்த்தனர். ஆபத்து பலகையை கண்டு இருவரும் தன் கைகளில் இருந்த கயிற்றை தூக்கி
போட்டு பிடிக்க சொன்னனர்.புதைக்குழியில் இருப்பவரால் பிடிக்க முடியாது வில்லை.புதைக்குழி அவரை கீழ் புறமாக இழுக்க அவரும் முகம் பாதி குழியுள் சென்றது.
கயிற்றை ஒரு கோலில் கட்டி குழியில் இருப்பவரின் கையில் முடி போட்டனர்.
பின் அவரை இருவருமாக சேர்த்து இழுத்தனர். இழுத்து இழுத்து குழியில் இருந்து மெது மெதுவாக மேலே வந்து விட்டார்.அவர் யார் என அவர்களால் அறிய முடியும் வில்லை.
தண்ணீரை ஊற்றி சேற்றை கழுவி பார்த்த பிறகு தான் தெரிந்தது தன் தம்பி என்று.அவன் மிகவும் அசதியாக இருந்ததால் அவனால் பேச முடியவில்லை.சிறிது நேரம் அனைத்து அங்கே ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு நீ எங்கே இங்கு?
என இரண்டாவது சகோதரர் கேட்டார்.தாத்தா சிங்காரம் பேசியதை நானும் கேட்டேன்.அந்த புதையலை தேடி வந்தேன்.உங்களை பின் தொடர்ந்து தான் வந்தேன்.
ஆனால் வழி தவறி சென்று குழியில் சிக்கினேன் என்றான்.
பிறகு அனைவருமாக புதையலை தேடி செல்வோம் என முடிவு செய்து
சென்றனர்.
முதல் மலை அருகே வந்ததும் அங்கே
உச்சியில் செல்ல பாதி பாறைகளில்
படிக்கட்டுகள் அமைந்திருந்தது.
மேலும் செல்ல அங்கேயே தொங்கும்
ஏணிகள் இருக்கிறது.
ஆனாலும் மலைகள் வழியே பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
சகோதரர் மூவரும் மலை வழியே
செல்வார்களா?
இல்லை புதையல் வேண்டாம் என
வீடு திரும்புவார்களா?

எழுதியவர் : உமா மணி படைப்பு (24-May-18, 9:08 am)
சேர்த்தது : உமா
பார்வை : 42

மேலே