குருட்டு தாத்தா

தனிமையில் வசித்து வந்த குருட்டு தாத்தாவின் வீட்டிற்கு, விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். இரவு உணவு உண்ட பின், இயற்கை உபாதையை நீக்க, கழிவறைக்குச் செல்ல ஆயத்தமானார் தாத்தா. மின்விளக்கை எரியவைத்து, பின், உள் சென்றார். வெளியே வந்ததும், விருந்தாளி கேட்டார், "பெரியவரே! உங்களுக்கு தான், பார்வையில்லையே,? பின் எதற்கு கழிவறைக்குள் மின்விளக்கை பயன்படுத்தினீர்கள்?". தாத்தா ஆரம்பித்தார்., "எனக்கு பார்வை இல்லை, சரி தான், கழிவறைக்குள் பூச்சிகள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்கும். மின்விளக்கை பயன்படுத்தாமல் சென்றால், அதில் சில நமது உடலில் ஏறிவிட வாய்ப்பு உண்டு. மின்விளக்கு எறிந்தால், 'யாரோ மனிதன் ஒருவன் வருகிறான். நம்மை பாதுகாத்துக் கொள்ள, ஒளிய வேண்டும்' என எண்ணி, அவை மறைந்து விடும்" என முடித்தார்.

இதே போல தான் வாழ்க்கையும். "தன்னால் முடியாது" என்ற இருட்டு எண்ணம் இருந்தால், எவரும் நம்மை ஆட்கொண்டு, நம் வளர்ச்சியைத் தடுப்பர். எதுவும் இல்லாவிட்டாலும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வெளிச்சம் மட்டும் இருந்தால், நம் வாழ்க்கைப் பாதையில் எவரும் நமக்கு தடையாக இருப்பதில்லை. இருக்கவும் முடிவது இல்லை.

"முடியும்" என நினைத்தால்,
"முடியாது" என்ற சொல்லே இல்லை.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (23-May-18, 9:46 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
Tanglish : kurutu thaathaa
பார்வை : 108

மேலே