ஒரு பக்க கதைகள் 8

ஒரு வைர நகை கடையில் அழகிய
நவரத்தினங்கள் பதித்த மிகவும் அழகான கண்னை பறிக்கும் பொலிவுடன், சிந்தனையை அள்ளும்
அழகுடன் மிகவும் நேர்த்தியான ஆபரணம் ஒன்று இருந்தது.
அதை அந்த கடையின் ராசியான ஆபரணம் விற்க வைக்கவில்லை.
அந்த கடையின் பாரம்பரியமாக
பாதுகாத்து வரும் பொக்கிஷம்.
அத்தகைய நகையை உரிமையாளர்கள்
தினசரி கடையை திறந்தவுடனே அதை வணங்கி பின் வியாபாரம் செய்வர்.அங்கு மூன்று பெண்கள் ஒரு ஆண் வேலை பார்த்து வந்தனர்.
வரும் வாடிக்கையாளரை வரவேற்று, தங்களின் பாரம்பரிய நகையை அறிமுகம் செய்து தங்கள் விற்பனையை நடத்தி வந்தனர்.அதனால் அந்த கடையும், அந்த பாரம்பரிய நகையும் அந்த ஊருக்கு பிரபலமானது.
திடீரென ஒரு நாள் அந்நகையை காணவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.போலிஸ் வந்து விசாரணை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது உரிமையாளர் தன் எதிரில் அமைந்திருந்த நகை உரிமையாளர் மீது சந்தேகம் என்றார்.பின் அவர் கடையில் இருக்கும்.வேலை செய்பவரை விசாரித்தார்.அதில் ஒரு பெண் சிக்கினார்.நான்தான் அதை திருடினேன் என் சொல்லி ஏற்று கொண்டாள்.பின் அந்த நகை எதிரி உரிமையாளர் தான் திருட சொன்னார் என் போலிஸிடம் சொன்னாள். அந்நகையால் தான் அவர்கள் வியாபாரம் பெருகி சிறப்புடன் இருப்பதை கண்டு அதை திருட சொன்னார் எதிரி உரிமையாளர் ஒப்பு கொள்ள போலிசாரால் கைது செய்யப்பட்டார்.ஒரு பொருளால் மட்டும் ஒருவர் உயர்ந்து விட்டது முடியாது.அவரவர்களின் உழைப்பு,நேர்மை, முயற்சி என அவரிடம் இருக்கும் நல்குணங்களாலுமே உயர்ந்த இடத்தை அடைய முடியும் என நகையின் உரிமையாளர் பாரம்பரிய நகையை பெற்று அறிவுரை கூறி திரும்பினார்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-May-18, 8:59 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 96

மேலே