எதிர்பார்ப்பில் யாழினி

பிஞ்சுவின் பாதம்
தாய்மடி தங்கும்
வரம் எப்போதோ?
தாயவளும்
தந்தையவனும்
எதிர்நோக்கும்
நாள் எப்போதோ?
உச்சி முகர்ந்து
தொட்டுணரும்
நேரம் எப்போதோ?

உன் தலை வருடி
நெற்றி முத்தமிட்டு
மார்பணைத்து
எட்டி உதைக்கும்
கால்களை
தொட்டிலிட்டு கொஞ்சும்
என்னவனை
ரசிப்பது எப்போதோ?

எழுதியவர் : இலக்கியாஇளவரசன் (15-Apr-19, 1:06 pm)
சேர்த்தது : இலக்கியா
பார்வை : 95

மேலே