அவலம்

சீரிய பூமி சிரியா இன்று
சீர் குலைந்து நிற்கிறதே!

வாணிபம் ஓங்கிய ஷாமில் என்றும் வான்மழை குண்டாய் பொழிகிறதே!

பச்சிளம் மழலைகள் தேகம் எங்கும் குறுதிக் குளமாய் ஆகிறதே!

பட்டினி பசியும் மட்டுமே இவர்கள் உடன் சேர்ந்தே வருகிறதே!!

ஐ.நா என்றொரு அயோக்கிய (சபை) முதலை கண்ணீர் வடிக்கறதே!

ஐயோ பாவம்! கேட்க கூட நாதி அற்று கிடக்கிறதே!!!

தன் ஊன் உருக்கி ஊட்டிய பிஞ்சுகள்
தன்முன் கருகி கிடக்கிறதே!

காக்கை குருவியின் ஒற்றுமை கூட
காக்க தவறி விட்டனரே

தன்னலம் மட்டுமே தாரக மந்திரம் என்றொரு அர(க்க)சியல் நடக்கிறதே!!! 🤐

எழுதியவர் : அப்துல் காதர் (11-Mar-18, 4:25 am)
Tanglish : avalam
பார்வை : 115

மேலே