புரிந்திடும் இந்நேரம்

அரவமே இல்லா
அதிகாலை
அமைதி மிகுந்த
அடுப்படி
போட்டி வேகத்தில்
குறட்டைஒலி
ஆட்கள் குறைந்த
சாலைகள்
வாசலில் கிடக்கும்
நாளிதழ்கள்
அணைக்க மறந்த
தொலைக்காட்சி
நாதியற்ற நிலையில்
பெட்டிக்குள் பால்
ஓய்வில் உறங்கும்
மொபைல் போன்
வேலைக்கு வராத
வேலைக்காரி
களைந்து எறிந்த
ஆடைகள்
சிதறிக் கிடக்கும்
பொருட்கள்
நேற்றைய கோலத்தில்
வாசல்
ஐ பேடை தேடும்
குழந்தை
புரிந்திடும் இந்நேரம்
ஞாயிறு இன்று !

எழுதியவர் : பழனி குமார் (11-Mar-18, 10:45 am)
பார்வை : 230

மேலே