நெகிழி

வேதியல் தந்த வேதனை
வேண்டாம் இனி ஒரு சோதனை
மருந்தாக வந்தால் மகிழ்ச்சி
மரணமாக வந்தால் அதிர்ச்சி
நெகிழியை உருவாக்கினான்
இயற்கையை மறந்தான்
செயற்கையை மணந்தான்
நஞ்சையை நஞ்சாக்கினான்
புஞ்சையை புண்ணாக்கினான்
ஆழியை அழித்தான்
மண்டலத்தை மாசுபடுத்தினான்


நெகிழி நெஞ்சை குறிவைத்தது
பிறந்தது ஞானம்
தடைசெய்தான் நெகிழியை

நெகிழியை நிராகரிப்போம்
இயற்கையை நெகிழவைப்போம்
நிறுத்துவோம் நெகிழியின் பயன்பாட்டை
நமக்காக அல்ல புதிய தலைமுறைக்காக

எழுதியவர் : Venkatram (26-Jul-18, 3:59 pm)
பார்வை : 350

மேலே