எல்லாம் எங்களுக்காக
எல்லாம் எங்களுக்காக !
புதைந்திடும் விதைகளின்
பிளவுக்குள் இலையாய் துளிர்
விட !
எட்டி பார்க்கும் கதிரின்
ஒளிகள் இலைகளை தழுவிடும்
இயக்கங்கள் தொடங்கிடும் “ஸ்டார்ச்சை”
பெற்றிடும் இதுதான் தாவர
சக்தியின் இரகசியம்
அடியின் முடிகள் விரிதலின்
அவசியம் ஆழமாய் அகலமாய்
மண்ணுக்குள் ஓடிடும் தண்ணீர்
உறிஞ்சிட எடுத்திடும் இவைகளின்
உயிர் வகை நாடி !
நீயே உன்னை வளர்த்து
விலை தரும் மலர்ந்திட்ட
மலர்களை அளித்திடும்
செடி கொடி மரங்கள்
பலன் தரும் கனிகளை
அளித்திட மலர்களை சூழ்கொண்டு
காயாய் பின் கனியாய்
அளித்திடும் செடி கொடி
மரங்கள்
இலையுடன் தண்டுகள்
பல வகை விலங்கினங்கள்
உணவுக்கு எடுத்திட
தவறிய மற்றவை
முதுமையின் இறுதியில்
உடலினை அளித்திடும் விறகாய்
கட்டிட சட்டங்களாய்
மிச்சம் சொச்சம் எல்லாம்
மண்ணுக்கு உரமாக
எல்லாம் உனக்காக
இந்த பூமியில் உனக்காக
இரு கைகளை நீட்டி
ஏந்திக்கொள் என்கிறாய்