Venkatram - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Venkatram
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2018
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  5

என் படைப்புகள்
Venkatram செய்திகள்
Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2019 1:35 am

ஆழிசூழ் நிலப்பரப்பில் நீரின்றி தவிப்பு
அணையில் தெறிவதோ கல்மண்- கலப்பு
ஏரி குளங்களில் இல்லை பராமரிப்பு
அரசாங்க இயந்திரமோ செயலிழப்பு


ஆற்றை மதிக்கவில்லை கழிவுநீர் சேர்த்தோம்
மண்ணை மதிக்கவில்லை கபளீகரம் - செய்தோம்
மரங்களை மதிக்கவில்லை வெட்டிச் சாய்த்தோம்
வேழத்தின் வேலையை முடித்தோம்


வீட்டுக்கு ஒரு மரம் இல்லை
மழை நீர் சேமிப்பு - இல்லை
நம் இயற்கையை மதிப்பதும் இல்லை
நமக்கு குடிநீரும் இல்லை

நீருக்காக வேண்டும் அறிவியல் கண்டுபிடிப்பு
குறைந்த செலவில் இருந்தால் - மிகச்சிறப்பு
தாய்சேய் போல் நீர்நிலை அரவணைப்பு
தண்ணீருக்கு இதுதான் தீர்வு

மேலும்

Venkatram - Venkatram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 3:59 pm

வேதியல் தந்த வேதனை
வேண்டாம் இனி ஒரு சோதனை
மருந்தாக வந்தால் மகிழ்ச்சி
மரணமாக வந்தால் அதிர்ச்சி
நெகிழியை உருவாக்கினான்
இயற்கையை மறந்தான்
செயற்கையை மணந்தான்
நஞ்சையை நஞ்சாக்கினான்
புஞ்சையை புண்ணாக்கினான்
ஆழியை அழித்தான்
மண்டலத்தை மாசுபடுத்தினான்


நெகிழி நெஞ்சை குறிவைத்தது
பிறந்தது ஞானம்
தடைசெய்தான் நெகிழியை

நெகிழியை நிராகரிப்போம்
இயற்கையை நெகிழவைப்போம்
நிறுத்துவோம் நெகிழியின் பயன்பாட்டை
நமக்காக அல்ல புதிய தலைமுறைக்காக

மேலும்

அருமை 03-Aug-2018 6:28 am
Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2018 11:50 pm

நான்முகன் செய்த பாதபூஜை
நாராயணனின் பாதம் பட
நங்கை கங்கை அவதரித்தாள்

புனிதவதி அமராவதியில் வாசம் செய்தாள்

முன்னோர்கள் சாபம் நீங்க
முனிவேடம் பூண்டு
முடிசூடிய பகிரதன்
முயன்றான் தவத்தை
மூச்சை அடக்கி
முகத்தை நிமிர்த்தி
முழங்கை உயர்த்தி
முயற்சித்தான் முழுமனதோடு
முற்பட்டான் முன்னேறினான்
முடிவில் கண்டான் கங்கையை

புவிக்கு வரவேண்டும் என்றான்
புன்னகையுடன் சம்மதித்தாள்
புயல்போன்ற வேகத்தை குறைக்க
புலித்தோல் ஆடை அணிந்தவனை வேண்டினான்
புனிதன் சிவன் பூரிப்படைந்தான்
புதியபேர் பெற்றான் ஈசன், கங்காதரன் ஆனான்

மலையில் பிறந்தாள்
மக்கள் பாவத்தை போக்கினாள்
மஹாபாரதத

மேலும்

Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2018 8:06 pm

மலர் மேல் நீ படுத்தால் முதலிரவு
உன் மேல் மலர் படுத்தால் மரண இரவு
கிடைத்தது சுதந்திரம் நள்ளிரவு
கிட்டட்டும் அனைவருக்கும் மனநிறைவு
வாழ்க்கையில் வந்து போகும் பல சரிவு
வாடாமல் இருக்க வேண்டும் நம் அறிவு
மேம்படட்டும் மனிதகுல நல்லுறவு
மேன்மை தழைத்திட நீட்டவேண்டும் ஆதரவு
அனைவருக்கும் வந்து சேரும் முழு ஓய்வு
அதற்க்குமுன் செய்யவேண்டும் நம் ஆய்வு

மேலும்

Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2018 9:00 pm

கருவறையில் நாம் குடியேற விதைத்தான் விதை
அன்னையவள் ஈன்றெடுத்தால் ஓர் அழகிய குழந்தை
தினந்தோறும் நாம் தூங்க செப்பினான் ஓர் கதை
நாம் அழாமல் இருக்க, செய்தான், பல வித்தை
பள்ளிக்கு அனுப்பி , காட்டினான் நல்ல பாதை
ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தான் நன்நடத்தை
மனஅமைதிக்கு போதித்தான் பரத்தை
காலத்தில் தேர்ந்தெடுத்தான் நமக்கு ஒரு தேவதை
அதனால் உயர்ந்தது சமூகத்தில் நம் மரியாதை

தாய் காட்டி தந்தை
தந்தை காட்டி குரு
குரு காட்டி தெய்வம்
வரிசையில் இரண்டானவன் ,
ஆனால் வம்சத்திற்க்கு ஆதிமுதலானவன் ,
அவனே நம் தந்தை
மூச்சுள்ளவரை நினைப்போம் , மூச்சாக நினைப்போம் ,முடிசூடிவைப்போம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே