நதி கேட்கின்றேன் -- நீதியை
காஞ்சியில் பிறந்து
சென்னையில் தவழ்ந்து
கடலில் கலந்த அடையார் , என் பெயர்
சுதந்திரத்திற்கு முன்னால் சுத்தமாக இருந்த நான்
அதன் பின் அசுத்தமாய் மாறிவிட்டேன்
அது என் பிழையன்று
என் புனிதத்தை கெடுத்தவன் வெள்ளையன் அல்ல இந்தியன்
நதிமுதற்கொண்டு நங்கைவரை கெடுப்பதே தொழிலாக கொண்டுள்ளான் இந்தியன்
இதற்கு தண்டனை இல்லையா ?
நீதியை நிலைநாட்ட வேண்டாமா ?
பாரத தேசமே , இனி நீ பின்பற்ற வேண்டியது அரபு நாட்டுச்சட்டம்
பாலைவன சட்டம் , பாவையரின் பாதுகாப்புக்காக
பாலைவன சட்டம், பாய்ந்தோடும் நதிகளுக்காக
பாலைவன சட்டம், பாவிகளை அழிப்பதற்காக , மன்னிப்பதற்காக அல்ல
தண்டனை கொடுமையானால் , குற்றங்கள் ஒழியும்
குற்றங்கள் ஒழிந்தால், அமைதி நிலவும்
அமைதி நிலவினால் , நாட்டின் பொருளாதாரம் மேம்படும்
அதன் மூலம் , இந்தியா, உலகின் தலைசிறந்த நாடாக மாறும்
தண்டனை இல்லாத நாடு , மாலுமி இல்லாத கப்பலை போன்றது, மூழ்கிவிடம்

