தாமரைத் தடாகம்

தாமரைத் தடாகம் கண்டு மகிழ்ந்த ரவிவர்மா,
தாமரை கரங்களில் தாமரையாள் தாமரைகள் ஏந்தி,
தாமரை மேல் அழகாய் நின்று இருக்கும் அழகினையும்,
தாமரை மேல் வெண்முத்தைப் பழித்திடும் அவளது புன்னகையையும் ,
தாமரை தடாகத்திலே விழுந்திடும் அருவியையும்,
தாமரையின் அழகினை கூட பழித்திடும் வண்ணம்
தாமரை தடாகத்தின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்களையும்,
தாமரை பூவுடன் கட்டிய மாலையை ஏந்திய வேழனையும் ,
தாமரை தடாகத்திலே பவனி வந்திடும் அன்னங்களையும் ,
தாமரையாள் அருளால் அழகாக ஓவியமாய் திட்டியுள்ளார் .


தாமரைத் தடாகம் அதுபோல் இன்று இப்புவியிலே ஒன்றும் இல்லையே ?
தாமரைகளை ரசிக்கத் தெரியாது தன்னை மட்டுமே நினைத்திடும் மனிதன்
தாமரைக் குளத்திற்குத் நீர் வரும் வழிகளை அழித்து, அதனுடன்
தாமரைக் குளத்தின் இருமருங்கிலும் உள்ள மரங்களையும் அழித்து,
தாமரை தடாகத்திலே பவனி வந்த அன்னங்களையும் மறையச் செய்து,
தாமரை குளங்களை வற்ற செய்தமையால் லட்சுமியும் மறைந்து விட்டாளோ ?

எழுதியவர் : விசாலாட்சி பழனியப்பன் (20-Oct-20, 7:35 pm)
சேர்த்தது : Visalakshi
பார்வை : 122

மேலே