பூவும் பூவையும்
மொட்டாய் இருக்கையிலேயும் நீயழகு மலரே
மலர்ந்தபின்னால் கேட்கவும் வேண்டுமா உன்னழகை
பெண்ணே உன்னிலையும் இப்படித்தான் என்பேன்னான்
பூக்கும் முன்னே பூவையே நீ அழகே
பூத்தபின்னே உன்னழகில் மயங்குவார் பலரும்
பூவிற்கோ அழகால் ஊறுஇல்லை
பூத்திடும் அழகால் பூவைக்கு ஆபத்துண்டு