கருநீலம்

வானது நீலம் மாக்கடல் நீலம்
வண்ண மாமயில் நீலம் அதனின்
மழைத்தரும் கார்மேகம் என்றும் கருநீலம்
தோகை நீலம் கண்ணனின் சிரசில்
என்றும் மயில் இறகு நீலமே
கண்ணா நீயும் கருநீல மேனியனே
கண்ணன் இளையவள் விழியும் கருநீலமே
மயிலின் கொண்டையும் கருநீலம் என்மனம்
விரும்புவதும் மிக்க கருநீலமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-20, 1:24 pm)
பார்வை : 73

மேலே