corona
கொரோனா
உன்னை பார்க்கமுடியவில்லை
ஆனால் உணரமுடிகிறது
பக்தி வரவில்லை
பயம் வருகிறது
ஒருவிதத்தில் நீ எங்களுக்கு ஆசான்
ஆசாரத்தை போதித்தாய்
பட்டும் படாமல் வாழவைத்தாய்
உண்மையான நட்பை உணரவைத்தாய்
கடல் சூழ் உலகத்தை
கிருமி சூழ் உலகமாக மாற்றினாய்
பொருளாதாரத்தை விழச்செய்தாய்
குபேரனை குசேலனாக்கினாய்
எதற்காக இந்த தண்டனை ?
எங்களை விட்டுவிடு
நீ சென்றுவிடு
நீ மூத்த தேவியைப் போல
செல்லும் பொது அழகாக இருக்கின்றாய்
அதனால் எங்களை விட்டு சென்றுகொண்டே இரு
உன் அழகை ரசிக்கின்றோம்
எங்களிடம் வந்துவிடாதே
ஏனென்றால் , நீ வந்தால்
நாங்கள் சென்றுவிடுவோம்