அடைக்கலம்
அடைக்கலம்
நேரிசை ஆசிரியப்பா
ஆலயமற் றவூரில் அமைக்காதே குடும்பம்
கோயிலைத் தொழுதால் குடிபுகு்மாம் அமைதி
ஒளவைச் சொன்னதைக் கொடுத்தேன் பெயர்த்து
அவ்வளவே மாற்றவில்லைக் கருத்தைப் பாருமே
ஆலயம் தொடர்ந்துத் தொழுபக்தி வளரும்
ஆக பக்தியைப் பின்பற்ற அறம்வளரும்
அறமே தவறின் கூற்றாய் அமைந்திடும்
பக்தியால் அறமும் ஞானமும் வந்திடும்
பக்தி வந்திட அனைத்தும் கிடைத்திடும்
ஞானம் பெறத்தேவை ஆலய வழிபாடு
ஞால ஞானம் பெற்று
அடைக்கலம் பெறுக அவ்வாண்ட வனிடமே