தாய் மண்ணே வணக்கம்

நமது நாடு இந்தியா
நாம் அனைவரும் ஒருவரே
ஒற்றுமை உள்ளம் நம்மில் உள்ளது
ஒன்றுபடுவோம் உயர்ந்து வாழ்வோம்
முயலாய் இல்லாமல் ஆமையாய் இருந்தாலும்
இடைவிடாது முயன்று இலக்கை அடைவோம்
இத்தரணியில் நாமே எடுத்துக் காட்டாக இருப்போம்
துச்சமாய்ப் பார்த்தவர் தலை குணிந்தனரே
நாம் வீழ்வோம் என்றவர் தங்கள் தடம் இழந்தனரே
இனி வரும் காலம் எழில்மிகு மலர்ச்சி
ஐயம் வேண்டாம் அதுவே நம் வளர்ச்சி
கலாம் ஐயா கண்ட கனவு நனவாய் ஆனது
இந்தியாவே!! இளைஞர் மட்டுமின்றி
அனைவரும் கனவு காணுங்கள்
அதை, நனவாய் மாற்றுங்கள் நம் நாட்டை எப்போதும் இத்தரணியில் முன் நிறுத்துங்கள்
வாழ்க!! பாரதம்!!

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (15-Aug-20, 8:31 am)
சேர்த்தது : Sudhaseshadri
பார்வை : 462

மேலே