Sudhaseshadri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sudhaseshadri |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 231 |
புள்ளி | : 11 |
பாரதிக்கவிஞன் வான்வெளி அடைந்து ஒரு நூரு ஆண்டுகள் ஓடித்தான் போனது.அடிமைத்தனத்தின் அரும் பெரும் அர்த்தத்தைப் பாருக்குச் சொன்னவன்
பாலு சார்
பழகுவதில் இனிமை
பாடுவதில் தனிமை
குழந்தைகளில் குழந்தை
குமுறுது என் இதயம்
பிறப்பதும் இறப்பதும்
இயற்கையின் இயல்பு
புத்திக்குத் தெரிந்தாலும்
மனதுக்குத் தெரிவதில்லை.
வார்த்தைகள் தடைபடுதே
வைகிறேன் இறைவனை
போய் வா நல்மனிதா
அங்கு போய் அசத்திவிடு
இறைவனையே நீ வியப்பில் ஆழ்த்திவிடு.
வாழ்க நீ .
இரவு 10 மணிக்கு சிவராமன் வந்தார் .காத்திருந்த ரம்யா அவர் சாப்பிட டிபன் எடுத்து வைத்தாள்.கை கால் அலம்பி கொண்டு இரவு உடை உடுத்திக் கொண்டு வந்த சிவராமன் மதுமிதா தூங்கி விட்டாளா? என்றார்.
அவள் 8 மணிக்கே தூங்கிட்டாங்க.நீங்க சாப்பிடுங்க.
இரு புள்ளைய பார்த்துட்டு வரேன் .காலையில பேங்குக்கு போகும்போது பார்த்தது.
ஆமாம் தினமும் இப்படித்தான்.
என்ன பண்றது .தனியார் பேங்கில் வேலை .எல்லா வேலையும்அப்படித்தான் இருக்கு .சொல்லிக்கொண்டே படுக்கை அறை கதவை திறந்துகொண்டு உள்ளே போய் படுக்கையில் பார்த்தார். சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்அவரின் ஒரே செல்வமகள் மதுமிதா .அவள் கன்னத்தை தடவி முத்தம் கொடுத்து
உலகில் அதர்மம் தலையெடுத்தால்
உடனே அவதரித்து அதையழிப்பேன் என்றான் கண்ணன் கீதையிலே.
அவதாரப் புருஷனாய் அகிலத்தில் தோன்றி
வாடி நின்ற பாரதத் தாயை
மோடி வந்து முழுமை செய்தார்.
அன்று நரேந்திரநாத் தத்தா -விவேகானந்தரானார்
இன்று நரேந்திர தாமோதர்தாஸ் -மோடிஜி ஆனார்.
உங்களைச் சுற்றி வித வித விமர்சனங்கள்.
தலைவா! காய் மரம் தானே கல்லடி படும்.
ஏச்சுக்களைப் படியாக்கு,ஏளனங்களைத் தூர விலக்கு.
இப்போது போல் எப்போதும் முன்னேறு.
பாரதநாட்டின் விசுவாசிகள் நாங்கள் உங்களுடன் என்றும்.
பிறந்த நாளில் --வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம்.
எங்களின் பெயர் திருநாவுக்கரசு அனிதா. எங்கள் குழந்தைகளுக்கு அதிரா என பெயர் சூட்டலாம் என எண்ணியுள்ளோம். இதற்கு முன்/பின்னால் ஒரு இணை பெயரை பரிந்துரை செய்யவும். என் விருப்பம் புகழினி அதிரா. அல்லது வேறு ஏதேனும் நல்ல தமிழ் பெயர்களை அதி யை கொண்டு சொல்லவும்
பாரதிக்கவிஞன் வான்வெளி அடைந்து ஒரு நூரு ஆண்டுகள் ஓடித்தான் போனது.அடிமைத்தனத்தின் அரும் பெரும் அர்த்தத்தைப் பாருக்குச் சொன்னவன்
துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் முட்டாள்
அதையே துணிந்து ஏற்பவன் புத்திசாலி
தடைகளைக் கண்டு குழம்புபவன் கோழை
அத்தடைகளையே படியாக்குபவன் பலசாலி
அனைவரையும் தாண்டி முன்னேருபவன் எஜமானன்
உடனிருப்பவரைக் கைத்தூக்குபவன் தலைவன்
தானாய் நடக்கும் என்றிருப்பவன் பைத்தியக்காரன்
எதையும் நடத்திக் காட்டுபவனே சாதனையாளன்
அனைத்திலும் பாடத்தைக் கற்பவனே உயர்வான்
அனைத்தையும் கற்றவன் என நினைத்தால் வீழ்வான்
வாழ்க்கை என்பது ஒரு முறை என்பவன் அறிவிலி
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே என்பவன் அறிவாளி
செயல்களை குறை கூறவும் விமர்சிக்கவும் பலருண்டு
அச்செயல்களை எடுத்துச் செய்பவர் வெகு சிலரே என்பதே உண்மை
அறிவு என்பது தனி புள்ள
காலத்தின் கொடுமைதான் இன்று நம்மைக் காட்டாறாய்க் கடக்கிறதே.
நோய்த் தொற்று ஒன்று வந்து நம் வாழ்வைக் குலைக்கிறதே.
மருந்தில்லை என்றார்கள் மனம் நொந்து போனோமே.
வீட்டிலிரு என்றார்கள் விலகி இரு என்றார்கள்.
விளக்கேற்றச் சொன்னார்கள் கைத்தட்டி இருந்தோமே.
அத்துணையும் வீண் என்றே அழுது மனம் நொந்தோமே.
என்ன செய்தால் தீர்வு வரும் என்றெண்ணி நின்றோமே.
வேலை இல்லை, வரவு இல்லை, பள்ளியில்லை பாடமில்லை.
வேறு நாடு சென்றவரும் தன் தாய் நாடு திரும்பினரே.
கொன்றொழிக்கும் நோய்கள், எல்லைகளில் மிரட்டல்,
வாழ்வழிக்கும் பேரிடர், வகைவகையாய் உட்பூசல்
இந்தியாவின் பெரும் வளர்ச்சி இன்றோடு அழிந்ததாக
கடவுள்
அனைத்தையும் கடந்தால் அவனைத் தன்னுள் காணலாம் என்பர்.
எதைக் கடக்க? எப்படி கடக்க?
ஐயம் வேண்டாம் நண்பா!!
காலில் இடருவது கல்லோ முள்ளோ!
எடுத்து எறி அடுத்து முன்னேறு
கண் முன்னே பாதை தெரிந்தால் அதுவே. ""கடவுள்"
எவ்விதியிலும் அடங்கா வியத்தகு படைப்பு.
சதி செய்வோர் இடையிலும் இது அமைவதே வியப்பு.
இருள் அகற்றும் தீபமாய் இருப்பவனே நண்பன்.
அவ்வொளி கொண்டு வழி காண்பவனே மனிதன்.
மெழுகாய் தானுருகி ஏணியாய் இருப்பான்.
கண்ணுக்கு இமை போல் நல் கட்டிடத்திற்குத் தூண் போல்,
மண்ணுக்கு மழை போல் உடனிருந்து உயர்த்திடுவான்.
பூவுலகில் நம் பிறப்பு பூர்வஜென்ம பயனாலே,
நல் நட்பை நாம் கொள்வது நம் அறிவின் திறந்தாலே. எனவே-
ஆராய்ந்து கூடிடு அவன் அன்பால் நீ வளர்ந்திடு.