பாலு எனும் பாடல்

பாலு சார்
பழகுவதில் இனிமை
பாடுவதில் தனிமை
குழந்தைகளில் குழந்தை
குமுறுது என் இதயம்
பிறப்பதும் இறப்பதும்
இயற்கையின் இயல்பு
புத்திக்குத் தெரிந்தாலும்
மனதுக்குத் தெரிவதில்லை.
வார்த்தைகள் தடைபடுதே
வைகிறேன் இறைவனை
போய் வா நல்மனிதா
அங்கு போய் அசத்திவிடு
இறைவனையே நீ வியப்பில் ஆழ்த்திவிடு.
வாழ்க நீ .

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (25-Sep-20, 4:49 pm)
சேர்த்தது : Sudhaseshadri
Tanglish : BALU yenum paadal
பார்வை : 287

மேலே