காக்கும் நோக்கம் காக்கும்
ஏக்கம் ஆக்கும் எதிலும் மாற்றம்
மாற்றம் மாற்றும் மனதின் நோக்கம்
நோக்கம் கொடுக்கும் நொடிதோறும் ஏற்றம்
ஏற்றம் ஏற்றும் எதிலும் தாக்கம்
தாக்கம் காக்கும் தவறும் எதையும்
எதிலும் அறியும் எல்லாம் அனுபவம்
அனுபவம் காட்டும் எதுவும் நுட்பம்
நுட்பம் நுணுக்கம் அனுப்பும் சகடம்
சகடம் பகிரும் யாவும் அதிரும்
அதிரும் செயலும் பதறும் பலந்தரும்
பலந்தரும் முழுவதும் பாதகமும் செய்யும்
செய்யும் எண்ணம் சீர்படும் வண்ணம்
வண்ணம் என்னும் வழிநடத்தல் பொன்னே!
------- நன்னாடன்