மோடிஜி

உலகில் அதர்மம் தலையெடுத்தால்
உடனே அவதரித்து அதையழிப்பேன் என்றான் கண்ணன் கீதையிலே.
அவதாரப் புருஷனாய் அகிலத்தில் தோன்றி
வாடி நின்ற பாரதத் தாயை
மோடி வந்து முழுமை செய்தார்.
அன்று நரேந்திரநாத் தத்தா -விவேகானந்தரானார்
இன்று நரேந்திர தாமோதர்தாஸ் -மோடிஜி ஆனார்.
உங்களைச் சுற்றி வித வித விமர்சனங்கள்.
தலைவா! காய் மரம் தானே கல்லடி படும்.
ஏச்சுக்களைப் படியாக்கு,ஏளனங்களைத் தூர விலக்கு.
இப்போது போல் எப்போதும் முன்னேறு.
பாரதநாட்டின் விசுவாசிகள் நாங்கள் உங்களுடன் என்றும்.
பிறந்த நாளில் --வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம்.

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (17-Sep-20, 12:42 pm)
சேர்த்தது : Sudhaseshadri
பார்வை : 49

மேலே