உன் வாழ்க்கை உன் கையில்

துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் முட்டாள்
அதையே துணிந்து ஏற்பவன் புத்திசாலி
தடைகளைக் கண்டு குழம்புபவன் கோழை
அத்தடைகளையே படியாக்குபவன் பலசாலி
அனைவரையும் தாண்டி முன்னேருபவன் எஜமானன்
உடனிருப்பவரைக் கைத்தூக்குபவன் தலைவன்
தானாய் நடக்கும் என்றிருப்பவன் பைத்தியக்காரன்
எதையும் நடத்திக் காட்டுபவனே சாதனையாளன்
அனைத்திலும் பாடத்தைக் கற்பவனே உயர்வான்
அனைத்தையும் கற்றவன் என நினைத்தால் வீழ்வான்
வாழ்க்கை என்பது ஒரு முறை என்பவன் அறிவிலி
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே என்பவன் அறிவாளி
செயல்களை குறை கூறவும் விமர்சிக்கவும் பலருண்டு
அச்செயல்களை எடுத்துச் செய்பவர் வெகு சிலரே என்பதே உண்மை
அறிவு என்பது தனி புள்ளிகள் என்றானால்,
அவற்றை இணைத்து ஓர் வடிவம் செய்வது நம் கையில்
எனவே,நண்பா
உன் வாழ்க்கை உன் கையில்
நல்லது கெட்டது எதுவும் நீ நிர்ணயம் செய்

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (23-Aug-20, 10:10 pm)
சேர்த்தது : Sudhaseshadri
பார்வை : 113

மேலே