நண்பன்
எவ்விதியிலும் அடங்கா வியத்தகு படைப்பு.
சதி செய்வோர் இடையிலும் இது அமைவதே வியப்பு.
இருள் அகற்றும் தீபமாய் இருப்பவனே நண்பன்.
அவ்வொளி கொண்டு வழி காண்பவனே மனிதன்.
மெழுகாய் தானுருகி ஏணியாய் இருப்பான்.
கண்ணுக்கு இமை போல் நல் கட்டிடத்திற்குத் தூண் போல்,
மண்ணுக்கு மழை போல் உடனிருந்து உயர்த்திடுவான்.
பூவுலகில் நம் பிறப்பு பூர்வஜென்ம பயனாலே,
நல் நட்பை நாம் கொள்வது நம் அறிவின் திறந்தாலே. எனவே-
ஆராய்ந்து கூடிடு அவன் அன்பால் நீ வளர்ந்திடு.