நட்பு திருவிழா

ஆட்டம் ஆடி
பாட்டு பாடி
கூத்து கட்டுவோம்
புது வாழ்த்து பாடுவோம்
வா மச்சான் வா! நீ
வா மச்சான் வா

அவன் பிறந்தது இந்நாளு
இதுதான் நமக்கு திருநாளு
கொண்டாட பத்தாது
இந்த ஒருநாளு.....

ஒன்னா சுத்துவோம்
அன்பால கத்துவோம்
அவனுக்கு ஒன்னுனா
முன்னால வந்து தில்லா
மொத்துவோம் நாங்க! நாங்க!   .....

நெருங்கிய சொந்தமில்லை
    உதவிய   பந்தமில்லை
அந்த சாமி .............
சேர்த்து வைத்த எங்க
வாழ்வின் அந்தம்.....

ஆட்டம் ஆடி
பாட்டு பாடி
கூத்து கட்டுவோம்
புது வாழ்த்து பாடுவோம்....
வா மச்சான் வா !
நீ வா மச்சான் வா!.......

கவலையை நீ மறந்து
என்றைக்கும் சிரிக்கனும்
மீண்டும் பிறந்து
கைகள் கோர்க்கனும்
மெரீனா பீட்சில
செரீனாவை சைட்டு அடிக்கனும்....

காதலில் வெல்லனும்
எதிர்கால வாழ்வை
இரசிக்கனும்
அன்பால பறந்து
புதிய முகவரி அடையனும் .....

ஊருல நடக்குது
கலகல திருவிழா
தெருவுல கூடி
வாழ்த்து பாடி
நடத்துறோம் நாங்க .....
கொஞ்சம் அலப்பறையான
அன்பு திருவிழா
எங்க  நண்பனுக்கு...

ஆட்டம் ஆடி
பாட்டு பாடி
கூத்து கட்டுவோம்
புது வாழ்த்து பாடுவோம்
வா மச்சான் வா! நீ
வா மச்சான் வா.......

          

எழுதியவர் : ஹரிகிருஷ்ணன் (27-Jul-20, 5:33 pm)
சேர்த்தது : Harikrishnan
Tanglish : natpu thiruvizaa
பார்வை : 807

மேலே