ஏய்,மச்சா

நட்பென்ற காட்டிற்குள்
என்னை தொலைத்திட்டேன்
நாளெல்லாம் உன்னோடு
அகமகிழ்ந்தே களித்திட்டேன்
சிந்தும் கண்ணீரும்
சிரிப்பருவியில் சிதறிடும்
பற்றி எரியும் கவலைகளும்
நண்பா நீ பக்கம் வர அணைந்திடும்

கேலிப் பேச்சுக்களும்,
கொண்ட கோபங்களும்
இலையென உதிர்ந்து
ஏய் மச்சா என்ற அதட்டலிலும்
சொல்லு நாயே என்ற அக்கறையிலும்
மறு நாளே மலரும் பூ நம் நட்பு
பறவைக் கூட்டமாய் பலரும்
நம்மைப் பார்த்து வியந்தனர்
குரங்குக் கூட்டமாய்
நாம் செய்த சேட்டைகளை
விட்டுக்கொடுக்க தவறியதில்லை
பிறர்முன் விட்டுக் கொடுக்கும் பேச்சில்லை
உதவியென்ற சொல்லில்லை
உணர்வை அறிந்து நடப்பதினால்
பிரிவவன்ற ஒன்றில்லை
நட்பு மரமாக வேரூன்றியதால்
உறவில் தொலைத்த பாசத்தை
உன் நட்பில் தேடுகிறேன்
தோள் சாய்த்து கை கோர்த்து
ஆறுதல் தருவாயென😊

எழுதியவர் : moonchanta (26-Jul-20, 6:53 pm)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 461

மேலே