தமிழ்தாரணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்தாரணி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 20-Feb-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 369 |
புள்ளி | : 8 |
நீ நீயாய் இரு
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திருக்க வேண்டுமாம்...
மாதவம் செய்து பிறந்ததெல்லாம்
மானபங்கப்பட்டு அழிந்திடத் தானா?
பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தாராம்
புவி பேணும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்
மானம் மட்டுமே பெண்மை என்றர்
எங்களை அடக்கிடத்தானா?
திரௌபதிக்கு ஆடை கொடுத்துக்
காத்தாராம் கண்ணன்..
இன்று இவள் ஆடையை அவிழ்க்கையில்
ஒரு கண்ணன் கூட அங்கில்லையா ?
கூறிய,கூறும் கட்டுக்கதைகளை எல்லாம்
கேட்டு வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்ததெல்லாம் போதும்...
கட்டிப்போடும் மடமை கொண்ட
சில கலாச்சாரக் கருத்துக்களை
காப்பாற்றிய காலமெல்லாம் போதும்...
ப
கனவிலும் வருகிறாய்
கண்ணெதிரிலும் தெரிகிறாய்
நிழலாகவும் வருகிறாய்
நிஜமாகவும் தெரிகிறாய்
மனதுக்குள் மலர்கிறாய்
மழயாகிக் கரைகிறாய்
உன் விழியாடும் உரைகளும்
உன் இதழ் கூறும் சொற்களும்
முரணாகவே உள்ளதே?
செவி கேட்கும் வார்த்தைகளும்
புவி பேசும் புரளிகளும்
செல்லவில்லை உள்ளகத்தே...
என் காதல் துயரங்களும்
நான்படும் துன்பங்களும்
யாரும் சொல்லவில்லையா உன்னிடத்தே?
எதிரிக்கும் வேண்டாம் இந்நிலை -எனப்
பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்
அதனைப் பிதற்றல் என்றேன்
பித்தாகிப் போகிறேன் , மொத்தமாக மாறினேன் ,
வானிலேறி பறக்கிறேன் , புதிதாக பிறக்கிறேன்
-இன்னும் ஏதேதோ கேட்டிருக்க
என் இமைகள் விசுறுவது
என் கண்களுக்கு அல்ல..
என் கண்களுக்குள் இருக்கும் உனக்கு!
என் உயிர் இங்கு வாழ்வது
இவ்வுலகுக்கு அல்ல....
என் உலகமாய் இருக்கும் உனக்கு!
பூமி சுற்றும் நிலவாய்
உன்னை சுற்றும் உயிராய் நான்!
கோபப்பட்டு திட்டினாலும் நாங்கள்
கோபித்து கொள்ள மாட்டோம்
எம் மனம் புண்படா வண்ணம்
நீவிர் உதிர்க்கும் புன்னகையால்
வகுப்பாசிரியராய் வந்து வகுப்பை
வகுப்பை அலங்கரித்து எங்கள்
மனதை எல்லாம் அபகரித்தீர்
புரியாத புதிராகவே இருந்துள்ளீர்
பல நேர்ங்களில்,
உங்கள் கடமையாற்றிட
எனினும் நாங்கள் புரிந்துதான்
வைத்துள்ளோம் எங்கள் காரியமாற்றிட
வர்ணிக்க இயலா அன்பு
வார்த்தையில் அடங்கா பொறுமை
குருபக்தியை கடந்த நட்பு
உணர்வோடு உறைந்த கடமை
புகைப்படமாய் கைதுசெய்ய முயன்றிருக்கிறேன்
முடிந்ததில்லை....
நிழற்படமாய் கைதுசெய்து மகிழ்கிறேன்
நினைவுகளை........
விலை என்ன தர வேண்டும்
உன் விசித்திர சிரிப்பிற்கு
சிலை செய்து தர வேண்டும்
உன் சித்திர உருவிற்கு
நீ அதட்டிடும் வேளையில்
அணைத்திட தோன்றும்
உதிர்கின்ற வார்த்தைகள்
எனக்கு உதவிட வேண்டும்
நீ சினுங்கிடும் வேளையில்
சிலிர்த்தே போகும்
நீ மறைகின்ற வெட்கத்தை
கண்கள் திரையிட்டு காட்டும்
தொலைவில் இருந்து பார்த்தாலும்
தொலைந்து போகுது என் மனமே
அருகில் வந்து நின்றாலோ
அனைத்தும் இங்கு சொப்பனமே
உன்னை பற்றி எண்ணிக்கொண்டு
உறங்கிட மறந்து விட்டேன்
உன்னை எங்கும் பேசியே
சில உறவுகளை இழந்து விட்டேன்
உணர்வுகளில் உறைந்து விட்டாய்
கனவுகளில் கலந்து விட்டாய்
கலைத்து விட மனமில்லை
இக்
நம் உறவை சூறையாடிய என் கோபம் நகை என்று பேசியதற்கு பழி தீர்கின்றன உன் கோபம்
எத்தனை முறை மன்னிப்பு கேட்டும் ஏற்க மறுக்கிறாய்
யாரோ போல உன்னை கடந்து செல்லும் இந்நிமிடத்தில் மண்ணில் நரகம் காட்டுகிறாய்
மகிழ்ந்திருந்த காலங்களை மறந்தேன் என்கிறாய்
என்னை மரணம் நோக்கி தள்ளத்தானா?சிரித்திருந்த காலங்கள் சிலவே என்கிறாய்
என் கண்ணீர் கடலில் கால் நனைக்கத்தானா ? அன்று
உலகம் ஊக்கமளித்து............
நடக்கையிலும் பறந்திருந்த பாதங்கள்
உறக்கம் இல்லாமல் இனித்திருந்த இரவுகள்
உன் குறுந்செய்தி பார்த்து கழித்திருந்த காலங்கள்
உன் சிறு இதழ் சிரிப்