கற்பனை காதல்
விலை என்ன தர வேண்டும்
உன் விசித்திர சிரிப்பிற்கு
சிலை செய்து தர வேண்டும்
உன் சித்திர உருவிற்கு
நீ அதட்டிடும் வேளையில்
அணைத்திட தோன்றும்
உதிர்கின்ற வார்த்தைகள்
எனக்கு உதவிட வேண்டும்
நீ சினுங்கிடும் வேளையில்
சிலிர்த்தே போகும்
நீ மறைகின்ற வெட்கத்தை
கண்கள் திரையிட்டு காட்டும்
தொலைவில் இருந்து பார்த்தாலும்
தொலைந்து போகுது என் மனமே
அருகில் வந்து நின்றாலோ
அனைத்தும் இங்கு சொப்பனமே
உன்னை பற்றி எண்ணிக்கொண்டு
உறங்கிட மறந்து விட்டேன்
உன்னை எங்கும் பேசியே
சில உறவுகளை இழந்து விட்டேன்
உணர்வுகளில் உறைந்து விட்டாய்
கனவுகளில் கலந்து விட்டாய்
கலைத்து விட மனமில்லை
இக்கற்பனை காதலை ;;;;;;;;