நட்பு

தீயோர் நட்பு அவன் கண்களை மறைத்து
அவன் நல்ல நண்பனின் நட்பையும் மறைக்க
நல்ல அந்த நண்பனோ விட்டுவிடுபவன் அல்லன்
நண்பனைத் தீயோன் பிடியிலிருந்து மீட்டான்
முதலைப் பிடியிலிருந்து யானையை மீட்டிய
மாதவன்போல் இக்கரை சேர்த்தான் நண்பனை
மீண்டும் நல்ல நட்பெனும் தண்கரையில் தன்கரையில்
நட்பின் பாங்கென்பது இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-20, 4:27 pm)
Tanglish : natpu
பார்வை : 1095

மேலே