நண்பேண்டா

நண்பேண்டா🤝

உலகில் ஆக பெரிய அதிசயம் நட்பு.
மானுடம் பெற்ற மிக பெரிய  வரம் நட்பு.
நட்பு கங்கையை விட புனிதமானது.
எதையும் எதிர்பாராமல் வருவது நட்பு.
ஏற்றத்தாழ்வு இல்லாத
ஒரே உறவு நட்பு.
சாதி, மதம், இனம்  எல்லாவற்றுக்கும் அப்பார்பட்டது நட்பு.
எதையும்  விட்டுகொடுக்கும் நட்பு. 
பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும் நட்பு.
வயது வரம்பு கிடையாது 
அதிசய உறவு  நட்பு .

ஒரு நண்பன் நூறு பேருக்கு சமம்.
நட்பின் சங்கமம் குதுகுலத்தின் பிறப்பிடம்.
சந்தோஷத்தின் இருப்பிடம்.
எதையும் பேசலாம் நண்பனிடம்
எளிதில் விடை கிடைக்கும் அவனிடம்.
விவரிக்க இயலா சொந்தம் நட்பு,
விவரம் அறியாத வயதிலிருந்தே வருவதும் நட்பே.

இராமன் குகன் மீது வைத்த நட்பு உயர்ந்து!!
துரியோதனன் கர்ணன் மீது கொண்ட  நட்பு அபாரமானது!!
கண்ணன் குசேலன் மீது செலுத்திய அளவில்லா நட்பு அளபறியது!!
இப்படி இதிகாசம் கூறும் நட்பு ஏராளம் .
ஜல்லிக்கட்டு சம்பவமும்,
சங்கமமும் நட்பால் தானே.
ரத்த சம்மந்தம் இல்லை,
உறவு முறையும்  இல்லை,  அப்போது அவன் யார்?
சொந்தங்கள் கேட்ட போது
"என் நண்பன்" என்று
பெருமிதத்துடன்
மார்பு தட்டி
கூறுவானே அது போதும் நட்புக்கு.
அந்த ஒரு வார்த்தை போதும் 
நட்பு கோபுரம் போல் உயர்ந்து நிற்க.
நட்பு புனிதமானது மட்டும் அல்ல
ஆச்சரியமானது மட்டும் அல்ல, மிகவும் அபூர்வமானது.
       - பாலு.

எழுதியவர் : பாலு (30-Jul-20, 12:17 pm)
சேர்த்தது : balu
பார்வை : 454

மேலே