சுதந்திர காற்றே
சுதந்திர காற்றே!
சுதந்திர காற்றே!
சுயநலமின்றி
சுதந்திரமாய் வீசு..
உழைக்கும் உழவனுக்கு;
வாழ்வு பிழைத்திடவே,
சுதந்திர காற்றே!
சுதந்திரமாய் வீசு..
விலைபோகும் கல்விகள்;
விலையின்றி கிடைத்திடவே,
சுதந்திர காற்றே!
சுதந்திரமாய் வீசு..
சாதிமதப் பேதமின்றி;
சமத்துவநிலை அடைந்திடவே,
சுதந்திர காற்றே!
சுதந்திரமாய் வீசு..
வேற்றுமையில் ஒற்றுமையே;
இந்தியனாக பிறந்தோமென்று,
சுதந்திர காற்றே!
சுதந்திரமாய் வீசு..